அவயோகம் | |||
ஜாதகத்தில் சந்திரன் தனித்து நின்றால் அது அவயோகம்! அதாவது சந்திரன் இருக்கும் கட்டத்தின் இருபக்கக் கட்டங்களிலும் கிரகம் எதுவும் இல்லாமல் இருந்து, சந்திரனும் தன்னுடைய கட்டத்தில் தனியாக இருந்தால் அது அவயோகம். அதற்குப் பெயர் தரித்திர யோகம். வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப் படுத்திவிடும்! ஆதரவு அற்ற நிலையில் நிறுத்திவிடும்! உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்த்து சந்திரன் அப்படி இருந்தால் பயந்து விடாதீர்கள். அதற்கு விதிவிலக்கு உண்டு! சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள் பெற்றிருந்தாலோ அந்த நிலைமை ஜாதகனுக்கு ஏற்படாது அல்லது வராது! |
jaga flash news
Saturday 26 January 2013
அவயோகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment