மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின்அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
• மருந்து வாங்குவதில்ஒரு போதும் அவசரம் காட்டக் கூடாது. சற்றுபொறுமையுடன் வாங்க முற்பட வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும்உத்திரவாதமாகும்.
• மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரியஅதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
• மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
• மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். குறிப்பிட்ட சில மருந்து வகைகளை மட்டும் குளிர்ச்சியாகவைத்திருக்க வேண்டியது அவசியம்.மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாதஉயரத்தில் வைக்கவும்.
• மருந்துகளை சமையல் அறை, குளியல் அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.
• மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
• மருத்துவரின் சீட்டின் அடிப்படையில்அதில் குறிப்பிட்டுள்ளமருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.
No comments:
Post a Comment