மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகை செடிகள்
மன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங்களில் பிரச்சனை மற்றும் உடலில் கூட பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மன அழுத்தத்தை குறைக்க சில மூலிகை செடிகள் இருக்கின்றன. இவை மனதை அமைதிப்படுத்தி ரிலாக்ஸ் செய்கின்றன.
மன அழுத்தத்தை குறைக்க சில மூலிகை செடிகள் இருக்கின்றன. இவை மனதை அமைதிப்படுத்தி ரிலாக்ஸ் செய்கின்றன.
ரோஸ்மேரி: மூலிகை செடிகளில் ஒன்றான ரோஸ்மேரி சமைப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை மற்ற பயன்களுக்கும் பயன்படுகின்றன. அதிலும் மன அழுத்தத்தை குறைக்கப் பெரிதும் பயன்படுகிறது.
மேலும் இவை உடல் தசைகளில் ஏற்படும் வலிகளுக்கும் சிறந்தது. மேலும் இவற்றால் செய்யப்படும் எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால், மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆகிவிடும்.
லாவண்டர்: நிறைய இடங்களில் லாவண்டர் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். ஏனெனில் இந்த செடியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இவற்றால் ஹார்மோன்களில் ஏற்படும் பாதிப்பு சரியாகும். மேலும் இவற்றால் செய்யப்படும் எண்ணெயை வைத்து உடலுக்கு மசாஜ் செய்தால், உடல் நன்றாக இருக்கும். மேலும் இதன் சுவையில் தயாரிக்கப்பட்டிருக்கும் டீயை குடித்தால், நிச்சயம் மன அழுத்தம் குறையும்.
கிரீன் டீ: கிரீன் டீயின் நன்மைகள் நன்கு தெரியும். ஆனால் அந்த கிரீன் டீயை குடித்தால், மன அழுத்தம் குறையும் என்பது தெரியாது.
உண்மையில் தினமும் 3-4 கப் கிரீன் டீ குடித்தால், மன அழுத்தம் குறையும். இது ஒரு சிறந்த நிவாரணி. மேலும் இவற்றில் குறைவான அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையும் குறையும்.
சீமை சாமந்தி: இந்த பூ ஒரு சிறந்த மூலிகைச்செடிகளில் ஒன்று. இது காய்ச்சலால் ஏற்படும் ஒருசில வலிகளை சரிசெய்யும் சிறந்த மருந்துவ குணமுள்ள பூ.
உடல் வலி இருப்பவர்கள் இந்த பூக்களை அரைத்து, உடல் முழுவதும் தடவி குளித்து வந்தால், உடல் வலி நீங்குவதோடு அதன் மணத்தால் மன அழுத்தம் குறைந்தது உடலும் அழகாகும்.
மணற்பூண்டு: மணற்பூண்டு என்பது ஒருவித மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகைச் செடி. இதன் இலையை அரைத்து உடலுக்கு தடவினால் தசைகள் ரிலாக்ஸ் ஆவதோடு, மூளையும் நன்கு ரிலாக்ஸ் ஆகும்.
Dear Mr.Narayanasamy Jagadeesan
ReplyDeleteRosemary or seemai samandhi moolgai, where i will get?
Could you please tell me sir.
Iam waiting for your reply.
Thanks
Arul
அய்யா! வெ.சாமி அவர்களே, இந்த பூக்களின் பெயர்களைக் குறிப்பிட்டதுபோல் படங்களையும் அனுப்பினால், இந்தப்பூவின் செடி எவ்வாறு இருக்கும் என என்னைப்போன்று தெரியாதவர்களும் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. தாங்கள் கூறியதன்படி செயல்படவும் முடியும் அல்லவா!.
ReplyDelete