jaga flash news

Wednesday 24 July 2013

சயனஸ்தானம்

சயனஸ்தானம் சரியில்லாதவர்களுக்கு களத்திர அன்னோன்யம் இருக்காது. களத்திர அன்னோன்யம் இல்லாத போது புத்திர சௌக்யமும் (5ம் பாவம்) சரியாக இருக்காது. புத்திர ஸ்தானம் இல்லாத போது குடும்பம் (2ம் பாவம்) எப்படி உருவாகும் எனவே இனிமையான இல்லற வாழ்க்கை அமைய சயனஸ்தானம் சரியாக இருந்தால்தான் மற்ற பாவங்களின் பலங்களும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமையும்.எனவே 2,5,7,8 ம் இடங்களில் தோஷ சாம்யம் இருந்தாலும் 12ம் இடத்தின் பொருத்த விஷயம் இருவர் ஜாதக ரீதியாகவும் சரியாக இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி இன்றியே தான் இருக்கும்.
ஆக அன்னோன்யமான.. தாம்பத்ய வாழ்க்கையை நிர்ணயிக்க இதன் அடிப்படையான ஸயன பாவத்தை (12ம் இடம்) ஆராயாமல் மற்ற பாவங்களைப் பார்த்து முடிவு செய்யும் ஜோதிட அன்பர்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் இது என்று புரிந்துகொண்டால் சரி..
களத்திர அன்னோன்யத்தை எந்த எந்த கிரகங்கள் முக்கியமாக பாதிக்கின்றன என்று பார்க்கலாம்.
12ம் இடமான சயனஸ்தானத்தில் பாபகிரகங்களான செவ்வாய், சூரியன், சனி, ராகு, கேது இருப்பது.
சயனஸ்தானத்துக்கு மேற்சொன்ன பாபிகளீன் பார்வை இருப்பது.
களத்திர ஸ்தானம் என்ப்படுன் 7ம் இடத்தில் பாபகிரகங்களான செவ்வாய், சூரியன், சனி இருக்கும் நிலை.
7ம் இடத்துக்கு செவ்வாய், சூரியன் சனி பார்வை இருக்கும் நிலை.
8ம் இடத்தில் பெண்ணுக்கு செவ்வாய்,ராகு இருக்கும் நிலை.
பூர்வ புன்ய ஸ்தானாதிபதி (5க்குடைய கிரகம்) களத்திரஸ்தானம் (7ம் இடம்) அடையும் நிலை. இதே போல் 7க்குடைய கிரகம் 5ம் இடம் அடையும் நிலை.
குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது இருக்கும் நிலை.
இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு அன்னோன்யமான வாழ்க்கை பொதுவாக இருப்பதில்லை என்றாலும் இதே போன்ற கிரக நிலை இருவர் ஜாதக ரீதியாகவும் அமைந்துவிட்டால் அன்னோன்யமான தாம்பத்திய வாழ்க்கை நிச்சியம் இருக்கும் என்பது உண்மை. “தோஷ சாம்யாத் தம்பதி பாக்யவான்” என்ற ஜோதிட சாஸ்திர வாக்யத்தின் படி தம்பதிகள் இருவர் ஜாதகத்திலும் தோஷங்களை ஏற்படுத்தும் கிரக நிலைகள் ஒத்துப்போனால் அந்த தம்பதிகள் இணைபிரியாத தம்பதிகளாகவே என்றும் இருப்பர்கள் என்பதும் உண்மை.சகல நன்மைகளையும் வாழ்க்கையில் அனுபவிப்பார்கள் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

No comments:

Post a Comment