jaga flash news

Sunday 1 December 2013

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?

(-கவிஞர் கண்ணதாசன்)

நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது. பெண் போகிற இடத்தில் பழக்கவழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும். பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல.

.-கவிஞர் கண்ணதாசன்

2 comments:

  1. அந்த காலத்தில், காதல் என்பது கிடையாது. அப்படியே இருந்தாலும், மாமா மகளை காதலிப்பான், திருமணம் செய்து கொள்வான். இது நாகரீகமான உலகம். பணம் உள்ளவன் ஜாதி பார்ப்பதில்லை என்ற ரீதியில் உலகம் இருக்கிறது. ஆகவே, பழக்க வழக்கத்தை, பெண்வீட்டு பழக்க வழக்கப்படியோ, அல்லது, ஆண்வீடு ஸ்ட்ராங்க் என்றால், ஆண் வீட்டு பழக்க வழக்கங்கள்படி தன்னை மோற்றி அமைத்துக்கொண்டால், வாழ்க்கையை அமைதலாக நடத்தலாம். இல்லையேல், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, நடுத்தெருவில் பெண் நிற்பாள். ஆண் அடுத்த வீட்டில் போய் பழியாக்கிடப்பான்...இது உலக வாடிக்கை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, தாழ்ந்து நடந்தால், ஜாதி என்ற எண்ணமே எழாது. கணவர் ஜாதி எதுவோ, அதுவே மனைவிக்கும், குழந்தைகளுக்கும். பெண் வீட்டு ஜாதியில், பெண் எடுக்க நினைத்தால், அவர்களுக்கு ஜாதிவெறி தலைதூக்கும். ஆண் படி பெண் எடீத்தால், நமது பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும், பெண் எடுக்கும்போது, பிரச்சனைகள் உருவாகாது. இவ்வாறு பல விஷயங்கள் அடங்கி இருப்பதால், கணவன் குடும்பத்தின் பழக்க வழக்கங்களுக்கு தகுந்த மாதிரி மனைவியானவள் மாற்றிக் கொண்டால், என்றும் ஆனந்தமே. ஒரு வீட்டில், தனிச் தனிச் சமையல் செய்வது அழகல்ல. ஒரு வீட்டில், ஒரு மதம், ஒரு சமயல் இருப்பது தான், அனைத்து விழாக்களை கொண்டாடுவதற்கும் ஏதுவாக இருக்கும். சண்டி மாடு மாதிரி, அங்கேயும், இங்கேயும் இழுத்தால், வண்டி நகராமல் நின்றுபோய்விடும்.

    ReplyDelete
  2. சில தவறுகள் இருக்கிறது...பிழையின்றி எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete