ஆண்கள் மற்றும் பெண்களின் மூளையை பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்கள்
மற்றும் பெண்களின் திறனை பற்றி கூறப்படும் சில பாரம்பரியமான கருத்துகள்
உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களால் ஒரு வரைபடத்தை வாசிக்க
முடியும், இதற்கு மாறாக, பெண்களோ வழி கேட்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் பல
பணிகளை செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். பெண்களின் மூளைகளில் இடது
மற்றும் வலது அரைக்கோளத்திற்கு இடையே உள்ள நரம்பு இணைப்பு சற்று அதிக
அளவில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் மூளைகளில் நடத்தப்பட்ட
ஸ்கேன் என்ற பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு மாறாக, முன்னிருந்து பின் பக்கம் இணைக்கப்பட்டுள்ள ஆண்களின் மூளை, நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செய்கிறது. உணர்ந்து அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளது. ஆனால் குழந்தையிலிருந்து வளரும் பொழுது ஒருவரின் பாலின வேறுபாடுகள் சற்று தாமதமாகவே தோன்றும். 13 வயதிற்கு கீழ் இருக்கும் சிறார்களில் சிலரில் தான் இந்த வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால் பதின்பருவத்தினரிடமும் இளைஞர்களிடமும் இந்த வேறுபாடுகள் தெளிவாக காணப்பட்டன.

This comment has been removed by the author.
ReplyDeleteVery nice.
ReplyDelete