jaga flash news

Wednesday, 26 March 2014

அரிசி வகைகளும் அதன் குணங்களும்

நமது நாட்டில் முக்கிய உணவாக அரிசியால் ஆன சோறு, அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே இருக்கிறது. இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் குணங்களையும் பார்ப்போம். 

கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும். 

குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும். 

குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும். 

சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும். 

செஞ்சம்பா சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும். 

கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலேட்டும நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். 

ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும். 

பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும். 

புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான். 

சாமை அரிசியும் புன்செய் தானியங்களில் ஒன்றுதான். இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. 

தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். 

திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக் குணமாக்கும், வாதக் கோளாறுகளைப் போக்கும்.

15 comments:

  1. அய்யா.. வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அரிசியைப் பற்றி எனக்கு தெரிந்ததை நானும் அளிக்கிறேனே...!

    ReplyDelete
  2. Tue. 03, Jan. 2022 at 4.30 am.

    மாந்தம்....!

    1) வாத மாந்தம்
    2) பித்த மாந்தம்
    3) சிலேத்தும மாந்தம்
    4) விஷ மாந்தம்
    5) போர் மாந்தம்
    6) வாலை மாந்தம்
    7) நீர் மாந்தம்
    8) சுர மாந்தம்
    9) துலையா மாந்தம்
    10) பால் மாந்தம்
    11) கட்டுமாந்தம்
    12) தலை மாந்தம்
    13) கண மாந்தம்
    14) வலிப்பு மாந்தம்
    15) சன்னி மாந்தம்
    16) முக்கு மாந்தம்
    17) ஊது மாந்தம்.
    18) வீ்க்க மாந்தம்
    19) சுழி மாந்தம்
    20) எரி மாந்தம்
    21) செறியா மாந்தம்

    என்பனவாம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  3. Tue. 03, Jan. 2023 at 5.59 am.

    சைவ சித்தாந்தம்....!

    * அத்துவாக்கள் என்பது....
    *வீடுபேறு அடைவதற்கான வழிகள்.*

    * அத்துவாக்கள்...
    *ஆறு ( 6 ) வகை.*

    * அத்துவாக்கள் ஆறு என்பது....
    *மந்திரம் , பதம் , வன்னம் , கலை , தத்துவம் , புவனம்.*

    * அர்த்தப் பிரபஞ்சத்துள் அடங்கும் அத்துவாக்கள்....
    *கலை , தத்துவம் , புவனம்.*

    * அத்துவாவில் ஒன்றான கலையின் ஐந்து வகை.....
    *நிவிர்த்தி கலை, பிரதிட்டை கலை, வித்தியா கலை, சாந்தி கலை, சாந்தி அதீத கலை.*

    * பஞ்ச கலைகளுக்கும் , கலைத் தத்துவத்திற்குமுள்ள வேறுபாடு....
    *பஞ்சகலை என்பது... அத்துவாக்களில் ஒரு வகை.*
    *கலா (கலை) தத்துவம் என்பது....
    *வித்யா தத்துவம் ஏழில் ஒரு தத்துவம்.

    * சுத்த மாயையில் தோன்றும் நால்வகை வாக்குகள்....
    *சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி.*

    * சுத்த மாயையின் முதல் விருத்தம்.... *சூக்குமை வாக்கு.*

    * சூக்குமை வாக்கின் விருத்தி....
    *பைசந்தி வாக்கு.*

    * பைசந்தி வாக்கின் விருத்தி மத்திமை வாக்கு.*

    ;* மத்திமை வாக்கின் விருத்தி....
    *வைகரி வாக்கு.*

    * வைகரி வாக்கு என்பது.....
    *தன் செவிக்கும், பிறர் செவிக்கும் கேட்கப்படும ்வாக்கு.*

    * வாக்குகளின் வளர்ச்சி... பரிமாணமா அல்லது விருத்தியா ? ......
    *விருத்தி.*

    * சுத்த தத்துவம்.....
    *நாதம் முதலிய ஐந்து.*

    * சுத்த தத்துவங்கள்....
    *நாதம்., விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை.*

    * சுத்த தத்துவததி்ன் வேறு பெயர்....
    *சிவ தத்துவங்கள்.*

    * சுத்த தத்துவங்கள் தோன்றியது....
    *சுத்த மாயையில் இருந்து.*

    * சத்த தத்துவத்தைத் தோற்றுவித்தவர்....*சிவன்.*

    * சிவ தத்துவம் என்ற பெயருக்கான காரணம்...
    *சிவனால் தோற்றுவிக்கப்பட்டதால்.*

    மீண்டும் சந்திப்போம்.....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  4. Fri. 06, Jan. 2023 at 8.05 am.

    உயிரியல் துளிகள் − 23

    * மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி....
    *கல்லீரல்.*

    * கல்லீரலில் சுரக்கும் நீர்....
    *பித்த நீர்.*

    * கல்லீரலின் எடை....
    *ஏறக்குறைய 1500 கிராம்.*

    * பித்த நீர் என்பது....
    *பச்சை கலந்த மஞ்சள் நிறத்திரவம்.*

    * பித்தநீர் தற்காலிகமாகச் சேகரமாகும் பை.... *பித்தப்பை.*

    * பித்த நீர் பயன்படுவது.....
    *கொழுப்பு செரித்தலுக்கு.*

    * கொழுப்பு செரித்தலுக்கு உதவும் நொதிகள்.....
    *பித்த உப்புகள் , பித்த நிறங்கள்.*

    * சிறுகுடலின் மூன்று பகுதிகள்....
    *டியோடினம், ஜீஜினம், இலியம்.*

    * இரைப்பை எந்தத் துளையின் வழியே சிறுகுடலில் திறக்கிறது...
    *பைலோரஸ்.*

    * இரைப்பை நீரில் காணப்படும் நொதிகள்....
    *பெப்சின், ரெனின் , ஹைடிரோ குளோரிக் அமிலம்.*

    * இரைப்பை நீரைச் சுரப்பது.....
    *இரப்பையின் சுவர்.*

    * இரைப்பையின் பகுதிகள்.... *3.*

    * உணவு செரிமானத்தின் முக்கிய பகுதி.... *இரைப்பை.*

    * உணவுக் குழாயின் நீளம்......
    *22 செ.மீ.*

    * உணவுக் குழாயின் உட்புறச் சுவரில் காணப்படும் திசு....
    *எப்தீலியம் திசு.*

    * ஹைடிரோ குளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் செல்....
    *ஆக்ஸன்டிக்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  5. Fri. 06, Jan. 2023 at 11 29 am.

    நாடிப் பயிற்சி − 77

    நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல். (தி.கு. 948)

    இதுவரை நாம் பார்த்து வந்த நாடிப் பயிற்சியின் வாயிலாக ஒரு பொதுவான கருத்து இங்கு கூற விரும்புகிறேன்.

    நாம் பிறந்தது முதல் இன்றுவரை எந்த வகையான உணவு உட்கொண்டோமோ அந்த உணவின் இரசாயனத் தன்மைக்கும், ஆற்றலுக்கும் தக்கவாறே நம்முடைய உடல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

    உணவு தான் உடலாக மாறியிருக்
    கிறது என்று அறிந்து கொண்டோம்.

    இந்த உணவில் இருவகை உண்டு என்றும் அறிந்தோம். அதாவது... உணவில் பொருந்தும் உணவு, பொருந்தா உணவு என்ற இருவகை உண்டு என்பதாக அறிந்தோம். இவையே, சாத்வீகம், ரஜோ, தாமச உணவு என ஆரம்ப பாடத்தில் அறிந்தோம்.

    எந்தவொரு உணவும் அளவோடு உண்ண வேண்டும். *உணவை அளவாக உண்டு வந்தால், உடல் உணவை செரிமானிக்கும். அளவுக்கு அதிகமானால், உணவு உடலை செரிமானிக்கும்.* என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    பொதுவாக... புலால் போன்ற உணவு கள், செயல்களைத் தூண்டக் கூடியவை. நோயை உண்டு பண்ணும். ஒரு முரட்டுத் தனமான, மூர்க்கத் தனமான எண்ணத்தை உருவாக்கும். இவ்வாறு, ஒவ்வொருவரும் உண்ணும் உணவுக்குத் தக்கவாறு குணங்களும், நோய்களும் வேறுபடும்.

    நாம் உண்ணும் உணவு.. (Balanced diet) கொழுப்பு சத்து, மாவுச் சத்து, நார்ச் சத்து, புரதம் , வைட்டமின், தாது இவை அனைத்தும் கலந்த சரிவிகித உணவாக இருத்தல் வேண்டும்.

    அசைவ உணவிற்கு நிகரான சத்துகள், சைவ உணவிலும் உண்டு என்பதை முதலில் உணருங்கள். நல்ல சத்துள்ள உணவை இருவேளை உண்டாலே ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும்.

    ஒருவன் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருப்பினும்... மலிவு விலையில் கிடைக்கும் காய்கள், பழங்கள் மூலம் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள முடியும்.

    உணவைப் பாதி மெல்லாமலும், அவசர அவசரமாய் உள்ளே விழுங்கி உண்பதால், நூறு வயது வரை உழைக்க வேண்டிய நம் *சீரணப் பை* முப்பது, முப்பந்தைந்து வருடங்
    களிலேயே... ஒன்றுக்கும் உதவாமல் போய்விடுகிறது. இதனால் மலச்சிக்கல் , செரியாமை உண்டாகி, வேறு நோய்களை உருவாக்க வித்திட்டாகிறது... என்பதை மலச்சிக்கலினால் வரும் நோய்களில் படித்து அறிந்து கொண்டீர்கள்.

    சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டாது.... ஒவ்வொரு கவளமாக எடுத்து, மெதுவாக வாயில் அறைத்து, உமிழ் நிருடன் கரைத்து, உள்ளே தள்ளுங்கள். உங்கள் சீரணப்பை செய்யும் வேலையில் பாதியை உங்கள் பற்கள் செய்யட்டுமே. இப்படி உண்பவனுக்கு, செரியாமை ஏற்படாது. அதனால் ஏற்படும் மலச்சிக்
    கலினால் வாத, பித்த, கபத்தினால் வரும் நோய் நம்மை நெருங்காது.

    கடைசியாக...ஒரு விஷயத்தை பொதுவாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்... *பசியால் இறந்தவர்கள் சில பேர் தான். நிறைய உண்பதால் இறந்தவர்கள் அதிகம் பேர் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

    *எவனொருவன் பசித்து உண்கிறானோ அவனுக்கு மருந்தே தேவைப்படாது அவசியமற்று போகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.*

    அறு சுவையைப் பற்றி அறிந்தோம்... இதன் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது...
    *உப்பு, புளி, காரம் இவை மூன்றும் சுவை அளிப்பது உண்மையானாலும், அது உங்கள் உடல் நலனைக் கெடுத்து விடுமாகையால், உங்கள் உணவில் கணிசமாக குறைத்து, அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். நமக்கு வரும் பல வியாதிகளுக்கு மூல காரணமே... இவை மூன்றும் தான்.

    அடுத்து... வாரத்தில் ஒரு நாள் மட்டும் இருவேளை வயிற்றைக் காய போடுங்கள். நமக்காக உழைத்து, உழைத்து ஓய்ந்து போன அந்த சீரண உறுப்புகள் சற்றே ஓய்வெடுக்கட்டுமே..! என்னால் முடியவே முடியாது என்பவர்கள் . ஒரு பழத்தை மட்டும் சாப்பிட்டுப் படுங்கள்...மறுநாள் ஆரோக்கியமாகவும், மிகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உணர் வீர்கள்.

    இன்னும் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அநேக கருத்துக்கள் எழுதலாம்... இப்பதிவை முடிக்க இயலாது..அத்தனை நலன்கள் அடங்கியுள்ளது..இதுவரை அனுப்பிய பதிவில் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையேல் மீண்டும் ஒரு முறை பார்த்து... தெளிவு செய்து கொள்ளுங்கள்.

    மீண்டும் சந்திக்கலாம்...!

    வாழ்க வளமுடன்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  6. Mon. 23, Jan. 2023 at 9.07 pm.

    உயிரியல் துளிகள் − 24

    * மீன்கள் சுவாசிப்பது....
    *செவுள்கள் மூலம்.*

    * சூரிய ஒளியின் உதவீயால் வைட்டமின் டி−யைத் தயாரிப்பது....
    *அகத்தோல்.*

    * மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை....
    *700 முதல் 800 தசைகள்.*

    * மூச்சு விடுதலுக்கு உதவுவது....
    *உதரவிதானம்.*

    * மார்பறையையும், வயிற்றறையையும் பிரிப்பது....
    *உதரவிதானம்.*

    * மனித மண்டையோட்டில் உள்ள எலும்புகள்.....
    *22.*

    * மார்புக் கூட்டில்...
    *3 − வகையான எலும்புகள் உள்ளன.*

    * உடலுக்கு அழகைக் கொடுப்பது....
    *தசைகள்.*

    * உடல் இயக்கத்திற்கு உதவுபவை....
    *தசைகள்.*

    * மனித உடலிலுள்ள எலும்புகள்....
    *206.*

    * தசைகள் இணைவதற்கு இடமளிப்பவை...
    *எலும்புகள்.*

    * மனித உடலில் மிகக் கடினமான பகுதி..*எனாமல்.*

    * மனிதனின் ஒவ்வொரு தாடையிலும் உள்ள பற்கள்....
    *16.*

    * பெரிய சுரப்பிகள் என்பது... *மேலண்ணச் சுரப்பிகள்.*

    * மேலண்ணச் சுரப்பிகள் அமைந்திருக்கும் இடம்...
    *காதுக்கு அருகில்.*

    * இரைப்பை நீரைச் சுரப்பது...
    *இரப்பைச் சுவர்.*

    * சிறுகுடலின் மூன்று பகுதிகள்...
    *டியோடினம், ஜீஜினம், இலியம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  7. Thu. 30, May, 2024 at 8.17 pm.

    உண்மைநெறி விளக்கம் :

    தசகாரியம் பார்த்து வருகிறோம்.

    கடந்த பதிவில் பாடல் −1ல், தத்துவ ரூபம், தத்துவக் காட்சி, தத்துவ சுத்தி இம்மூன்றும் பார்த்தோம்.

    இன்று பாடல் − 2ல் *ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி* பார்க்கலாம்.

    பாடல் :

    பாய்இருள் நீங்கி ஞானம் தனைக் காண்டல் ஆன்ம ரூபம்

    நீயும்நின் செயல்ஒன்று இன்றி நிற்றலே தெரிசனம் தான்

    போய்இவன் தன்மைகெட்டுப் பொருளில்போய் அங்குத் தோன்றாது

    ஆய்விடில் ஆன்மசுத்தி அருள்நூலில் விதித்த வாறே.

    இப்பாடலில் *ஆன்ம ரூபம்* என்பது
    இருளாகிய ஆணவ மலத்தால் தத்துவங்களைப் பெற்ற ஆன்மா, அவற்றால் ஓரளவாவது தன் அறிவு வெளிப்படுகிறது என்னும் உண்மையை உணர்வது "ஆன்ம ரூபம்" ஆகும்.

    *ஆன்ம தரிசனம்* என்பது, தான் காண்பதும், செய்வதும் தன் செயல் அல்ல, இறைவன் செயலே என்று உணர்வது "ஆன்ம தரிசனம்" ஆகும்.

    *ஆன்ம சுத்தி* என்பது, தன் முயற்சி, விருப்பம் என்று இல்லாது, எல்லாமே சிவன் செயல் என உணர்ந்ததால், தான் என்று எண்ணாமல், திருவருளில் அழுந்தி இருப்பது "ஆன்ம சுத்தி" ஆகும்.

    திருச்சிற்றம்பலம்

    பாடல் − 3 அடுத்த பதிவில்.

    *மீண்டும் சந்திக்கலாம் !*
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  8. Fri. 31, May, 2024 at 8.29 am

    *ஸ்திரி புருடர்களுக்கு நாடி பார்க்கும் விதம் :

    தான் என உலகத்துள்ளே தங்கிய நாடி பார்க்கில்
    வானெனுமின்னே கேளாய் வரும் பலன் சொல்லக் கேளு
    நான் எனும் புருடர்க்கெல்லா நாடி தான் "வலக்கையாகும்"
    தேனெனுமடவார்க்கு எல்லாந் திடம் பெற " இடக்கை" சித்தே.

    மீண்டும் சந்திக்கலாம் !
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  9. Fri. 31, May, 2024 at 9.35 am.

    *மாந்தம் :*

    *மாந்தம் −21. அவை :*

    1. வாத மாந்தம்
    2. பித்த மாந்தம்
    3. சேத்தும மாந்தம்
    4. வாலை மாந்தம்
    5. நீர் மாந்தம்
    6. சுர மாந்தம்
    7. விஷ மாந்தம்
    8. போர் மாந்தம்
    9. செறி மாந்தம்
    10. பால் மாந்தம்
    11. கட்டு மாந்தம்
    12. சன்னி மாந்தம்
    13. வீக்க மாந்தம்
    14. ஊது மாந்தம்
    15. சுழி மாந்தம்
    16. முக்கு மாந்தம்
    17. எரி மாந்தம
    18. வலிப்பு மாந்தம்
    19. தலை மாந்தம்
    20. கண மாந்தம்
    21. துலையா மாந்தம்

    மீண்டும் சந்திக்கலாம் !
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  10. Fri. 31, May, 2024 at 6.43 pm.

    உண்மை நெறி விளக்கம் : தசகாரியம்.

    பாடல் − 3

    எவ்வடிவுகளும் தானாம் எழிற்பரை
    வடிவ தாகிக்
    கெளவிய மலத்து ஆன்மாவைக்
    கருதியே ஒடுக்கி ஆக்கிப்
    பெளவம் விண்டு அகலப் பண்ணிப்
    பாரிப்பான் ஒருவன் என்று
    செவ்வையேஉயிரில் காண்டல்சிவ
    ரூபமாகு மென்றே.

    * இப்பாடல் சிவரூபம் பற்றி கூறுகிறது.

    *சிவ ரூபம் என்பது, எல்லா வடிவுகளும் தம் வடிவம் ஆகிய பராசக்தி வடிவமாக்கி எல்லாவற்றோடும் கலந்து நிற்கும் இறைவன்.... *ஆணவ மலத்தால் கவ்வப்பட்ட ஆன்மாவை உய்விக்கக் கருதி, "படைப்பை ஒடுக்கியும், மீண்டும் ஆக்கியும், படைப்புகளைப் பிறவிப் பெருங்கடல் விட்டு நீங்கவும் செய்து, பரிந்து அருளுகிறான் என்று உள்ளத்தில் செம்மையாக உணர்தலே* சிவருபம் ஆகும்.

    குறிப்பு : இவ்வாறு சிவத்தை உணர்த்துவன நூல்களும், குரு உபதேசமும் என அறிந்து கொள்ளுங்கள்.

    *பாடல் -4 அடுத்த பதிவில் !*

    மீண்டும் சந்திக்கலாம் !

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. Mon., 3, Jun, 2024, at 9.25 pm.

    *உண்மை நெறி விளக்கம் :*

    பாடல் : 4

    பரை உயிரில் யான்எனதுஎன்று அற நின்றது அடியாம்
    பார்ப்பிடம் எங்கும் சிவமாய்த் தோன்றல்அது முகமாம்
    உரைஇறந்த சுகமதுவே முடியாகும் என்றுஇவ்
    உண்மையினை மிகத் தெளிந்து பொருள்வேறுஒன்று ஒன்றித்
    தரைமுதலிற் போகாது தன்னிலைநில் லாது
    தற்பரையில் நின்று அழுந்தாது அற்புதமே யாகித்
    தெரிவுஅரிய பரமானந் தத்தில் சேர்தல்
    சிவன்உண்மைத் தரிசனமாய்ச் செப்பு நூலே.

    என்பது பாடல். இப்பாடல் சிவதரிசனம் பற்றிக் கூறுகிறது.

    இதனின் விளக்கம் :

    பராசக்தியின் ஆணையால், உடல் முதலியன பெற்ற ஆன்மா, *யான் என்றும், எனது என்றும் எண்ணாமல், செருக்கு இல்லாது நிற்பது தான் சிவனின் திருவடியைக் காணுதல் ஆகும். "பார்க்கும் இடம் எல்லாம் சிவமாகவே தோன்றும்படிப் பார்ப்பதுதான், சிவனின் திருமுகத் தரிசனம்* ஆகும்.

    *சொல்லால் விளக்க முடியாத இன்பத்தை அதாவது சிவானந்தத்தை உணர்வதே சிவனின் திருமுடித் தரிசனம்* ஆகும்.

    இந்த உண்மைகளை மிகவும் தெளிந்து, வேறு பொருள்களில் நாட்டம் செல்லாது, நிலம் முதலான தத்துவங்களில் ஈடுபடாது, ஆன்மாவின் சிற்றறிவில் நிற்காது, மாயையில் அழுந்தாது, துறவு நிலையாகிய அற்புத நிலையில் இருந்து, எளிதில் உணரவியலாத பரமானந்தமாகிய சிவானந்தத்தில் சேர்தலே, சிவனை உண்மையாகத் தரிசிப்பது ஆகும் என்று நூல்கள் கூறுகின்றன.

    அடுத்த பதிவில் பாடல்-5 பார்க்கலாம்.

    *மீண்டும் சந்திப்போம் !*

    திருச்சிற்றம்பலம்
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  13. Tue, 4, Jun, 2024, at 11.49 am.

    *இன்று கழற்சிங்க நாயனார் புராணத்தை தெளிவாக அறிந்து கொள்ளலாம் !*

    *கடல் சூழ்ந்த சருக்கம் :*

    *கழற்சிங்க நாயனார் :*

    *கழற்சிங்கர் − அரசர் − மலை நாடு − கொடுங்கோளூர் − லிங்க வழிபாடு − திருநட்சத்திரம் : வைகாசி − பரணி.*

    *குலம் − காடவர் (பல்லவர்) குலம்.* (சோழர்களில்"ஒரு பிரிவினரான மரபு)

    * கழற்சிங்கர் என்பது காரணப் பெயர். (கழலை அணிந்த சிங்கம் போன்றவர் ).

    * கழல் − இஃது அடைமொழி. சிங்கன் − இது பெயர். (போரில் சிங்கம் போன்றவன் என்பது திரண்ட பொருள்).

    * இக் கழற் சிங்க மன்னனை *மூன்றாம் நந்திவர்மன்* என்பர். இவரது பட்டத்தரசி *சங்கா* என்னும் பெயர் உடையவள்.

    * சமணச் சார்புடைய அழகுள்ள பெண்மணி. சிறந்த சமணப்பத்தியுடைய இரட்டப் பேரரசனாகிய *அமோக வர்ஷ நிருபதுங்கன் மகள்* என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

    இப்பட்டத்தரசியார் சமணச் சார்புடையவளாதலின் "சிவ வழிபாட்டில் ஈடுபடாது கோயிலழகில் ஈடுபட்டு நின்றாள்."

    * கழற்சிங்கர் மிகுந்த சிவ பக்தர்.
    சிவபெருமான் திருவருளாலே போர் முகத்துச் சென்று, வடபுலத்திலுளள பகை அரசர்களை போரில் வென்று, அவர் நாடுகளைக் கைக்கொண்டு, அறநெறி தவறாமல் நன்னெறியில் அரசாட்சி புரிந்து வந்தவர்.

    * காடவர்கோன் கழற்சிங்கர், உலகில் சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயில்கள் பலவும் சென்று, பேரன்போடு வணங்கி, உண்மைத் திருத்தொண்டுகளைப் புரிந்து வந்தார்.

    * அங்ஙனம் பல தலங்களை வழிபட்டு வரும்போது, *சிவநகர்* என்று கூறும்படி விளங்கும் *தென்திருவாரூரினை* அடைந்து பிறவியை அறுத்து அடிமை கொள்ளும் இறைவரின் கோயிலுக்குள் புகுந்து, ஐவகைக் குழுக்கள் சூழ இறைவரை வணங்கினார்.

    (குறிப்பு : ஐவகைக் குழுக்கள் என்பது, மந்திரியார், புரோகிதர், சேனாபதியார், தூதர், சாரணர் என்போர்.)



    *அரசியாரின் மூக்கைச் செருத்துணையார் அறுத்தல் :*

    * அப்போது பட்டத்தரசியார் *(சங்கா)* கோயிலை வலமாக வந்து அங்கு விளங்கும பெருமைகளை எல்லாம் தனித்தனியே பார்த்துக் கொண்டு வந்து, *திருமாலை கட்டும் திருமண்டபத்தின் அருகிலே ஒரு "புதிய பூ" அங்குக் கீழே வீழ்ந்து கிடந்ததனை எடுத்து மோந்தாள். அது கண்ட செருத்துணையார் என்னும் திருத்தொண்டர், அது பெருஞ் சிவாபராதமாகும் என்று துணிந்து விரைவாக ஓடிப்போய்க் கருவியினை எடுத்துக் கொண்டு வந்து, இலக்குமி போன்ற அவள் கூந்தலைப் பிடித்து இழுத்துத் தரையில் வீழ்த்தி அவளது மூக்கினை ஒருகையினால் பிடித்து அரிந்தார்.

    *பாடல் :*

    புதுமலர் மோந்த போதில்
    செருத்துணைப் புனிதத் தொண்டர்
    "இதுமலர் திருமுற் றத்துள்
    எடுத்துமோந் தனளாம்" என்று.
    கதுமென ஓடிச் சென்று
    கருவியைக் கொண்டு பற்றி
    மதுமலர்த் திருவொப் பாள்தன்
    மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.

    * அரிந்த மூக்கினிடத்திலிருந்து குருதி பெருகி வழியவும், கரிய கூந்தலும் அவிழ்ந்து அலையவும்"சோர்வடைந்து கலாபமயில் போல் பட்டத்தரசி நடுங்கிக் கீழே வீழ்ந்து அரற்றிப் புலம்பினாள்.

    அப்போது கழற்சிங்கர் புற்றிடங் கொண்ட பெருமானை வணங்கிக் கொண்டு, அங்கு வந்தார்.

    மலர்ந்த கற்பகத்தின் நறுமணங்கமழும் பசிய தளிர்களைக் கொண்ட பூங்கொம்பு ஒன்று நிலத்தின்மேல் விழுந்ததுபோல் மனம் வருந்தி, அழிந்து புலம்பும் தம் தேவியாரைப் பார்த்து, *இங்கு இக்கொடிய செயலைச் சிறிதும் அஞ்சாது செய்தவர் யாவர் ?* என்று வினவ அந்நிலையில் செருத்துணையார் மன்னர் அருகே வந்து, அங்கு மேற்கூறிய செயலை உள்ளவாறு எடுத்துக் கூறினார்.

    *குற்றத்திற்கேற்ற தண்டனை பிறகும் அளித்தல் :*

    * கழற்சிங்கர் செருத்துணையாராகிய அன்பரை நோக்கி "இச்செயலுக்குரிய தண்டனையை ஏற்ற முறையில் அன்றோ செய்யத்தக்கது" என்று கூறித் *தம் இடையிற் கட்டிய உடைவாளை உருவி, "புதுமலரினை எடுத்த கைதான் முன்னர்த் துணிக்கப்படுவது தகுதி" என்று சொல்லித் தமது "பட்டத்தரசியின் செங்கையினை அணீந்த வளையலோடும் அப்பொழுதே வெட்டி வீழ்த்தினார்.*

    * ஒப்பற்ற பெருந்தேவியின் *செங்கை* துணிவுபட்டுக் கீழே வீழ்ந்தபோது, அங்கிருந்த திருத்தொண்டர்கள் செய்த *ஹர ஹர* என்னும் முழக்கமும் கூடிப் பெருகியது.

    *கடல் சூழ்ந்த உலகெலாங்*
    *காக்கின்ற பெருமான்*
    *காடவர்கோன் கழற்சிங்கன்*
    *அடியார்க்கும் அடியேன்."

    *திருவிருத்தம் − 13*

    *மீண்டும் சந்திக்கலாம் !*
    Sivajansikannan@gmail.com



    ReplyDelete
  14. *Fri. 25, Oct. 2025 at 7.45 am.

    விபூதி அணியும் முறை :*

    பிரணவத்தில் மூன்று அட்சரங்கள் உள்ளன. அவை : அ , உ , ம .. என்பன. இந்த அட்சரங்களின் வடிவம் தான் மூன்று விரல்கள். அ காரத்தின் வடிவம் − மோதிர விரல். உ காரத்தின் வடிவம் நடுவிரல். ம காரத்தின் வடிவம் ஆள்காட்டி விரல்.

    இந்த மூன்று விரல்களாலும் விபூதியை அணிந்து கொள்ள வேண்டும்.

    கூர்ம புராணத்தில் பிரம்மதேவர் வாக்கு பார்த்தீங்கன்னா....

    நெற்றியை நீளவாட்டால் படைக்காமல், குறுக்கு வாட்டில் படைத்தது, விபூதியை மூன்று பட்டைகளாக இட்டுக் கொள்வதற்காகவே என்கிறது.

    ஸ்ரஸ்டா ஸ்ருஷ்டிச்ச்லே நாஹ
    த்ரிபுண்டரஸ்ய ப்ரசஸ்ததாம்
    ஸ ஸர்ஜ ஸ லலாடம் ஹி
    திர்ய கூர்த்வம் ந வர்துளம்

    இதன் கருத்தே மேற்கூறப்பட்டவை. Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  15. Fri. 01, Nov. 2024 at 8.25 am.

    ஶ்ரீ பார்வதி நாதனுடைய மகிமையை எப்படி அறிய முடியாதோ, அதுபோல... பஸ்மத்தின் (விபூதி) மகிமையையும் அறிய முடியாதென்று வேத வேதாந்தங்களில் திறமைசாலியான பெரியோர்களால் சொல்லப்படுகிறது.

    சத்தியம், ஞானம், தயை, சிரத்தை, தீ, காற்று, தண்ணீர், பூமி, ஆகாயம் முதலான எல்லாம் பஸ்மத்தின் அதாவது விபூதியின் வடிவங்களே என்கிறது ஸ்காந்த புராணம். ஸ்காந்த புராணத்தில் " *உபதேச காண்டம் : 9−11.*

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete