jaga flash news

Tuesday 5 August 2014

ஆடி 18 - ஆடி பெருக்கு ..

ஆடி 18 - ஆடி பெருக்கு ...
.
இந்த பண்டிகை எப்படி வழக்கத்துக்கு வந்தது 
என்று உங்களுக்கு தெரியுமா ... ?
.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்பொழுது என்னுடைய 
தமிழாசிரியர் சொன்ன விளக்கத்தை நான் இப்பொழுது 
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் ...
.
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் நாடு நகரம் அனைத்தையும் 
பணயம் வைத்து இழந்துவிட்டு பிறகு தங்களையே பணயம் 
வைத்து இழந்துவிட்டு 
.
இறுதியாக பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலியையும் 
பணயம் வைத்து இழந்துவிட்டனர் ...
.
துரியோதனன், பாண்டவர்கள் பாஞ்சாலியை சூதில் பணயம் 
வைத்து இழந்த செய்தியை பாஞ்சாலியிடம் தெரிவித்துவிட்டு,
பாஞ்சாலியை சபைக்கு அழைத்துவர தேர்பாகனுக்கு
கட்டளை இடுகிறான்.
.
பாஞ்சாலி வர மறுக்கிறாள்.
.
பிறகு துச்சாதனன் சென்று பாஞ்சாலியின் கூந்தலை 
பிடித்து சபைக்கு இழுத்து வருகிறான் ...
.
சபைக்கு இழுத்துவரப்பட்ட பாஞ்சாலியை பார்த்து 
துரியோதனன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்தவாறே ...
.
பாண்டவ பத்தினியே வாடி ..
.
வந்து என் தொடையில் அமரடி ...
.
என்று கொக்கரிக்கிறான் ... பாண்டவர்களோ கைகட்டி 
மவுனம் காக்கின்றனர் ...
.
பாஞ்சாலி சபதம் செய்கிறாள் ...
.
பாஞ்சாலியை தன் தொடையில் வந்து அமர சொன்ன 
துரியோதனின் தொடையை கிழித்து ...
.
அதிலிருந்து வெளிவரும் இரத்தத்தை என் கூந்தலில் பூசி 
புண்ணிய நதிகளாம் கங்கையிலும் காவிரியிலும் 
குளித்துவிட்டுத்தான் என் கூந்தலை அள்ளி முடிப்பேன் 
என்று தனது கூந்தலை கலைந்துவிடுகிறாள் ...
.
அவள் சபதம் எடுத்ததைபோலவே பாரத போரில், 
பஞ்சபாண்டவர்கள் துரியோதனனை வீழ்த்தி அவனுடைய 
தொடையை கிழித்தெரிகின்றனர்...
.
துரியோதனின் தொடையில் இருந்து பீரிட்டு வெளியே 
வந்த இரத்தத்தை அள்ளி, தன் கூந்தலில் பூசிக்கொண்டு ...
.
புண்ணிய நதிகளான காவிரியிலும் கங்கையிலும் 
தான் சபதமிட்டபடி குளிக்கவருகிறாள் ...
.
பாஞ்சாலி, காவிரியிலும் கங்கையிலும் குளிக்க 
வருவதை அறிந்த இந்த நதிகள் பெருக்கெடுத்து ஓடியதாம்.
.
அப்படி பெருக்கெடுத்து ஓடிய அந்த நல்ல நாளைத்தான்,
. 
இன்று நாம், ஆடி 18 - ஆடி பெருக்கு 
.
பண்டிகையாக நாம் கொண்டாடுகிறோம் ...

No comments:

Post a Comment