முதலில், செவ்வாய் தோஷம் உள்ள நபர், தோஷம் இல்லாத நபரை திருமணம் செய்து கொண்டால், பொருத்தத்துடன்
திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையை விட, இவர்களின்
வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாக இருக்கும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் சார்ந்த
சான்றோ அல்லது ஆராய்ச்சியோ இல்லை.
சாஸ்திரங்களின் அடிப்படையில் தான்
ஜோதிடம் அமைந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மரபுகள் மூலமாக ஒரு
தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு இது கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள்
செவ்வாய் தோஷத்துடன் பிறந்தால் உங்கள் திருமண வாழ்க்கையில் பல சிக்கலான
பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பல இந்துக்கள் நம்புகின்றனர்.
சொல்லப்போனால், இதனால்
உங்களுக்கு விவாகரத்து ஆகும் அல்லது உங்கள் கணவனின் உயிர் பறிபோகும் எனவும் சில
இந்து பூசாரிகள் கூறுவார்கள்.
வேத ஜோதிட
சாஸ்திரத்தின் படி, செவ்வாய் கிரகம் சந்திர அட்டவணையில் 1,
2, 4, 7, 8 அல்லது 8 ஆவது வீட்டில் இருந்தால்,
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கக்கூடும். இந்த ஒவ்வொரு
வீடும் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சங்களை வெளிப்படுத்தும். உதாரணத்திற்கு மனநிறைவு
மற்றும் மன அமைதி (4), திருமணம் (7) மற்றும்
நீண்ட ஆயுள் (8).
செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய்
கிரகத்துடன் தொடர்புடையது. செவ்வாய் கிரகம் சுய மரியாதை, மனப்போக்கு, ஈகோ மற்றும் விவாதத்தை குறிக்கும். ஜாதக கட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில்
இருக்கும் போது, நீங்கள் மூர்க்கத்தனமாகவும், உக்கிரமாகவும் செயல்படலாம். இதனால் உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனை
ஏற்படலாம். இப்படி வந்தது தான் செவ்வாய் தோஷ கோட்பாடு.
செவ்வாய் தோஷ தாக்கத்தினால்
மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் இடையே உள்ள பொருத்ததில் லேசான தடைகள் ஏற்படலாம் என செவ்வாய்
தோஷத்தை நம்புபவர்கள் நம்புகின்றனர். உங்கள் ஜாதகத்தை பொறுத்து தான் உங்களுக்கு
செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். நீங்கள் பிறந்த
தேதி, வருடம், நேரம் மற்றும் பிறந்த
இடத்தை பொறுத்து தான் உங்கள் ஜாதகம் கணிக்கப்படும்.
திருமணமாக போகும்
பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதற்கு இவ்வளவு
முக்கியத்துவம் கொடுப்பதை போல், சில பொய்யான நம்பிக்கைகளும் இருக்கவே
செய்கிறது. அப்படிப்பட்ட பொய்களில் சில, இதோ!
செவ்வாய் கிரகத்தால்
ஆளப்படும் நாளான செவ்வாய்க்கிழமையில் நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கு செவ்வாய்
தோஷம் இருக்கும் என சில தவறாக கூறுவார்கள். இருப்பினும் ஜோதிட சாஸ்திரப்படி அது
உண்மையல்ல.
இப்படிப்பட்ட
புகழ்பெற்ற நம்பிக்கைக்கு பின், எந்த ஒரு அறிவியல் சார்ந்த அல்லது பகுத்தறிவு
சார்ந்த சான்றும் இல்லை. இது ராம் கோபா வர்மா ஷோலே படத்தை ஆக் என ரீ-மேக் செய்ததை
போல் தான் - முரண்பாடானது, அடிப்படையற்றது
செவ்வாய் தோஷத்தால்
ஏற்படும் பிரச்சனைகள் முதல் திருமணத்துடன் தொடர்புடையது என்ற காரணத்தினால் தான்
இதனை பொதுவாக புரோகிதர்கள் சொல்வார்கள். அதனால் நீங்கள் உங்கள் கணவனை திருமணம்
செய்யும் போது,
முதல் திருமணத்தில் ஏற்பட இருந்த பிரச்சனைகள் இல்லாத, இரண்டாம் திருமணம் போன்றதாகும் அது.
உண்மையற்ற மற்றொரு
புகழ் பெற்ற நம்பிக்கை இது. நீங்கள் செவ்வாய் தோஷம் உடையவர் என்ற காரணத்தினால்
உங்கள் கணவரோ அல்லது நெருங்கிய உறவினரோ இறந்து போக மாட்டார்.
உங்கள் திருமணம்
வெற்றியடைவது உங்கள் வாழ்க்கை துணை மற்றும் உங்கள் கையில் தான் உள்ளது.
அது உங்கள்
இருவருக்கும் இடையே உள்ள புரிதல் மற்றும் பொருத்தம் ஆகியவற்றினாலேயே
தீர்மானிக்கப்படும். உங்கள் செவ்வாய் தோஷ பலன் உங்கள் திருமண வாழ்க்கையில் ஆயுளை
முடிவு செய்யாது!
செவ்வாய் தோஷம் என்பது இந்துக்களுக்கு
மட்டும் தான் என்பதில்லை.
ஜோதிடம் என்பது மனிதன் வாழும் உலகத்திற்கும், வானியல்
நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள உறவின் அடிப்படையாகும். அதனால் செவ்வாய் தோஷம் என்பது
ஜோதிடத்தில் இருந்தால், அது அனைத்து மதத்திற்கும் பொருந்த
வேண்டும். இருப்பினும் அது அப்படி இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே அதை
நம்புகிறது. அதனால் செவ்வாய் தோஷம் என்பது ஜோதிடத்தையும் தாண்டி மதத்துடன் தொடர்பை
கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
* செவ்வாய் தோஷத்துடன் தொடர்பில் உள்ள அனைத்து தீய தாக்கங்களையும் போக்க
இந்து பூசாரிகள் பல வழிகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் திருமணம் என்பது இரு
மனதுக்கு இடையே ஏற்படும் காதலும் புரிதலும் என்பதை மறந்து விடாதீர்கள். ஜாதகத்தில்
பொருத்தங்கள் அருமையாக இருந்த போதிலும் கூட பல திருமணங்கள் தோல்வியில்
முடிந்துள்ளன. அதே போல், ஜாதகத்தில் பொருத்தங்கள் சரியாக
இல்லாத போதிலும் கூட பல திருமணங்கள் வெற்றிகரமாய் முடிந்துள்ளன
No comments:
Post a Comment