jaga flash news

Saturday, 31 January 2015

கார் பிரேக் பிடிக்கவில்லை



 அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.
கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்துவிடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.
அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment