jaga flash news

Thursday 2 April 2015

பங்குனி உத்திரம்.............

பங்குனி உத்திரம் விரதம் ஏன்..?
பங்குனி உத்திரம் நாளில் விரதம் இருந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்..பங்குனி மாதத்தில் வரும் பெள்ர்ணமியுடன் கூடிய உத்திரம் நட்சத்திரம் மிக தெய்வீகமானது..முருகனின் திருக்கல்யாணம் நடந்த நாள்..வருட கடைசியில் வரும் இந்த விரத நாள் குடும்ப ஒற்றுமைக்கான விரத நாளாகும்..பல தெய்வ திருமணங்கள் நடந்த நாள் மாதம் என்பதால் இந்த பங்குனியில் நாம் எந்த விசேஷங்களும் வீடுகளில் வைத்துக்கொள்வதில்லை..ராமர் சீதையும் திருமணம் செய்ததும்,ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரெங்கரை திருமணம் செய்ததும்,சிவன் சக்தியோடு கலந்ததும் இந்நாளில்தான்..சபரி மலை ஐயப்பன் பிறந்த நாளும் இதுவே,
பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வம் வழிபாடு செய்வது குடும்பம் ஒற்றுமையாக கணவன் மனைவி மகிழ்ச்சியோடு வாழ வழி வகுக்கும்.சூரனை சம்ஹாரம் செய்ததற்காக இந்திரன் தன் மகள் தெய்வானையை பரிசாக கொடுத்து திருமணம் செய்து வைத்தது இந்த பங்குனி உத்திர நாளில்தான்..
கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் பிரம்மாவை வணங்குவதன் மூலம் கல்வி சிறப்படையும்.நம்மூரில் உள்ள முருகன் கோயில் சென்று வழிபாடு செய்து முருகன் அருள் பெறுவோம் என்றும் குன்றாத மனவலிமையை பெறுவோம்!! பாவங்களை போக்கி நல்லெண்ணம் குடிகொள்ள பிரார்த்திப்போம்!!

No comments:

Post a Comment