jaga flash news

Saturday 25 April 2015

ஊழ்வினை கிரகம் சந்திரன்

ஊழ்வினை கிரகம் சந்திரன்
ஊழ்வினை என்பது நம் பாவ புண்ணிய கணக்கு பெட்டகம். அது செய்த செயலை கூறிக்கும், பாவமோ புண்ணியமோ. ஊழ்வினை பொருத்தே சந்திரனின் நிலை கொண்டு நம் பிறப்பை நிர்ணயிக்கிறது. ஊழ்வினை பயனாகவே நம் பிறப்பும் அமைகிறது. அன்றைய தின கோச்சாரமே நம் பிறப்பு ஜாதகம். அது ஒரு குறிப்பிட்ட நாளில் தான் நிகழும். பாவத்தின் அடிப்படையில் நமக்கு தோஷங்களும், புண்ணியத்தின் அடிப்படையில் நமக்கு யோகங்களும் நம் ஜாதகத்தில் அமையும். நமக்கு அமைந்த தோஷங்களும் யோகங்களும் சந்திரனைக் கொண்டு மாற்றம் நிகழும். இதை ஜோதிட ஆன்றோர் அறிவார்கள்.
சந்திரனை மனதிற்கு காரகன் என்பார்கள் . அவரே சிந்தனைக்கு சொந்தக்காரர். நமது எண்ணப்படியே நமது வாழ்வு அமையும். காரணம் நமது எண்ணத்திலேயே நம் பாவ புண்ணிய கணக்கு ஆரம்பமாகிறது. இதனாலே சந்திரனை ஊழ்வினை கிரகமாக எண்ணக்காரணம்.
எதை செய்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்பது யாவரும் அறிந்ததே. நாள் நட்சத்திரம் சந்திரனை அடிப்படையாக கொண்டது. நம் எதை செய்கிறோமோ அது ஊழ்வினையாக மாறும் . அவ்வாறு இருக்க அதற்கு உருதுனையாக இருப்பவர் சந்திரனே.
விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. இதற்கு அர்த்தம் நமது ஊழ்வினை பயனாக நமது விதியை வெல்ல முடியும். சந்திரனை மதி என்பர்.
இயற்கை நமக்கு எளிதில் பல புரிதல்களை காட்டுகிறது ஆனால் நாமோ எளிய விசயங்களை எற்பதில்லை. சந்திரன் தேய்ந்து வளர கூடியவர் நிலையான தன்மை இல்லாதவர் . அதை போலத்தான் நம் ஊழ்வினையும் தேய்ந்து வளரக்கூடியது. சனியை ஊழ்வினை கிரகமாக நினைப்பவரும் உலர். சனி அசுபத்தன்மை அவ்வாறு சிந்திக்க தோன்றும். சனி நாம் செய்யும் தொழிலை குறிப்பவர் . ஊழ்வினை என்பது மாற்றத்துக்கு உட்பட்டது அது நாளுக்கு நாள் மாறக்கூடியது . சந்திரனின் நிலைபாடும் அவ்வாறே.
சந்திரனே நம் அருகில் இருக்கும் கிரகம் ஊழ்வினைப்போல் ஒட்டிக்கொண்டே வருவது. நம் பிறப்பும் இறப்பும் குறிப்பிட்ட நாளில் தான் நடக்கும். எந்த ஒரு சம்பவமும் குறிப்பிட்ட நாளில் தான் நடக்கும். சிலர் லக்னத்தின் முக்கியத்துவம் பற்றி யோசனை கொள்வர். லக்னம் சந்திரனின் நிலைபாட்டை பொருத்து அமையும்  10 பொருத்தம் திருமணத்திற்கு பார்க்கப்படுவதும் சந்திரனை மையப்படுத்தியே. விம்சோத்திரி திசையும் சந்திரனை அடிப்படையாக கொண்டே பலன்கள் தருகின்றன.
சூரியனிடம் இருந்து ஒளியை பெருபவர் சந்திரன். ஆத்மாவான நாம் சூரியனிடம் இருந்து ஊழ்வினை கிரகமான சந்திரன் மூலமாக பிறப்பு கொள்கிறோம். சிவன் தலையில் இருப்பதும் சந்திரனே, நம் தலை எழுத்தும் அவனே, அவனே ஊழ்வினை கிரகம்.

No comments:

Post a Comment