* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
* சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவழிபடவும்.
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு, சனிக்கிழமை தோறும் சாத்தி வழிபட்டு வரலாம்.
* சனிக்கிழமை அசைவ உணவை தவிர்ப்பது நன்மை தரும்.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் தீமைகள் குறையும்.
* ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாத்தி வழிபடுதல் வேண்டும். அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்பிறை அஷ்டமி தினத்தில் கால பைரவரை வணங்குவது பலன் தரும்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளை செய்யலாம்.
* கோமாதா பூஜை செய்வது நன்மை தரும்.
* ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம் கொடுத்து படிப்பு செலவிற்கு உதவலாம்.
* சனி பிரதோஷ வழிபாடு சிறந்த பலன் கொடுக்கும்.
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
* மாற்றுத் திறனாளிகளுக்கும், கணவரை இழந்தவர்களுக்கும் உதவிகள் செய்யலாம்.
* வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனி பகவானின் முழுமையான பாதிப்புகள் விலகும்.
* பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால், சனி பகவானின் பிடியில் இருந்து தப்பலாம்.
* சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, காக்கைக்கு உணவு வைக்க சனி பகவான் தோஷத்தில் இருந்து விலகலாம்.
பொதுவாகவே, பெருமாளை வணங்குபவர்கள், மாமிசம் சாப்பிட மாட்டார்கள். ஆண்கள் சனிக்கிழமை, எண்ணெய் தேய்த்து குளிப்பது நலம். (சனி நீராடு).
ReplyDelete