jaga flash news

Tuesday 23 May 2017

கடவுள்

கடவுள்
கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேறு சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை இறைவன் அல்லது ஆண்டவன் எனவும் அழைக்கிறார்கள்.

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஒரே வரியில் சொல்வதென்றால், கடவுள் என்ற வார்த்தை *பரம்பொருள்* என அர்த்தப்படுத்துகிறது.

    ReplyDelete
  4. இரண்டாவதாக, கடவுள் என்றால்,

    கட = நகருதல், நெருங்குதல், செல்லுதல் இப்படி பல அர்த்தம் உள்ளது.

    உள்(வுள்) = உள்ளே. ஆக கடவுள் என்றால், *தான் யார்* என்று *நாம் நமக்குள்ளே* சென்று ஆராய்வதாகும்.

    ReplyDelete
  5. மேலும் ஒரு கருத்து,

    அறிவென்பது *ஆண்.*,
    மனம் என்பது *பெண்.-
    பஞ்ச இந்திரியங்கள் *அவர்களது மக்கள்*

    மாயையின் சேயான சபலத்தினால் உணர்ச்சி வசப்படாமல், *மனம் என்ற அன்னைக்கும்*, *அறிவென்னும் தந்தைக்கும்* கட்டுப்பட்டு, உலகத்தையே மறந்து, ஒன்றையே நோக்கி, *ஆத்ம* வேகத்தோடு(தாகத்தோடு) இதய சன்னிதானத்தின் உள்கடந்து செல்லும்.

    அப்படி உள்கட.....உள்கட..உள்கட...
    கட....வுள் என்ற அகப்பொருள் தான்
    *கடவுள்*.

    ReplyDelete
  6. *முழுமுதலோன் (கடவுள்)*.

    இதற்கு ஒரு சிறிய கதை.

    ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார். கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன. இடியும், மின்னலுமாய் இருக்கிறது. படகு ஆடுகிறது.*அவரின் மனைவி நடுங்குகிறாள்.*
    அமைதியாய், *புன்னகையோடு*, படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்கிறாள், *உங்களுக்கு பயமா இல்லையா?* என்று.

    கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்த *கத்தியை* எடுத்து அவள் கழுத்தில் வைக்கிறார். *அவளோ பயப்படாமல் சிரிக்கிறாள்.*
    கணவன், இந்த கத்தி பயங்கரமானது, உன்னை வெட்டிவிடும், நீயோ சிரிக்கிறாயே என்று.
    அதற்கு மனைவி சொல்கிறாள், *கத்தி பயங்கரமானது தான், ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர், என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர், அதனால் பயமில்லை என்றாள்.

    கணவன் புன்முறுவலோடு, இந்த அலைகளும், இடிகளும், மின்னல்களும் பயங்கரமானவை. ஆனால் அவற்றை *தன் வசம் வைத்திருக்கும் இறைவன் என் அன்புக்குரியவன், அதனால் எனக்கு பயமில்லை என்றார். ஆகவே, இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கைதான் இறைவன், வாருங்கள் சிவனின் அருளைப் பெற, நலமுடன் வாழ.

    ReplyDelete
  7. அய்யா!வெ.சாமி அவர்களும், என்போன்று ஒரு கதை, தங்கள் முகநூலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete