அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். அவற்றை விரட்ட விலையுயர்ந்த பொருட்களைத் தான் வாங்கி வைக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. நம்முடைய வீட்டில் உள்ள ஒரு சில பொருள்களைக் கொண்டு அவற்றை மிக எளிதாக விரட்ட முடியும்.
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்கவே பிடிக்காது. அதனால் எலி அடிக்கடி சுற்றும் இடங்களில் புதினா இலைகளைக் கசக்கிப் போடுங்கள். அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வையுங்கள். அதற்குப் பிறகு எலி உங்கள் வீட்டில் அண்டவே அண்டாது.
வீட்டுச் சுவரை பல்லிகள் ஆக்கிரமித்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும். வீட்டின் மூலையில் ஆங்காங்கே முட்டையின் ஓடுகளை வையுங்கள். பல்லிகள் ஓடிவிடும்.
சில வீடுகளில் ஈக்கள் மிக அதிகமாக மொய்க்கும். அப்படி இருந்தால் துளசிச் செடியை வீட்டின் ஜன்னல்களுக்கு வெளியே வைத்து வளருங்கள். லாவண்டர் ஆயில், லெமன் ஆயில் ஆகியவற்றை நீரில் கலக்கியோ அல்லது அப்படியேவோ தெளித்து விடலாம்.
இது எல்லாவற்றையும் விட இந்த கொசுத்தொல்லை தான் தாங்கவே முடியாத ஒன்றாக இருக்கும். கொசுவை விரட்ட சிறந்த வழி வேப்பிலை தான். கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது. காய்ந்த வேப்பிலைகளை எரித்து வீடு முழுவதும் புகை போட்டால் கொசுக்கள் அழிந்துவிடும்.
கரப்பான் பூச்சி பார்ப்பதற்கே அருவருப்பான ஒன்று. அதுவும் அப்படியொன்று வீட்டுக்குள் வந்தால்?... கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருக்கும். கரப்பான் பூச்சி அடிக்கடி வரும் இடங்களில் சிறிதளவு மிளகுதூள், வெங்காயப்பேஸ்ட், பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது தண்ணீரில் கலந்து தெளித்துவிடலாம்.
மூட்டைப்பூச்சி பெரும்பாலும் தலையணை உறை, கெட்டில் மெத்தைகளில் அதிகம் இருக்கும். வெங்காயச்சாறினை தெளித்துவிட்டால் போதும். அந்த வாசத்துக்கே மூட்டைப்பூச்சி அண்டாது.
This comment has been removed by the author.
ReplyDelete