jaga flash news

Wednesday, 28 March 2018

வீடு


1. மனையின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம், எருக்கன் செடி இல்லாமல் இருக்க வேண்டும். 
 
2. கோவில் கோபுரத்தின் நிழல், அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழ கூடாது. 
 
3. மனையில் பாம்பு புற்று, ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் இருக்க கூடாது. 
 
4. பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன்/கணபதி கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது. 
 
5. ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம். 
 
6. மனை இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்க கூடாது. 
 
7. கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல்  வேண்டும். 
 
8. பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு உள்ள வார சூன்யம் என்ற நாட்களில் மனை முகூர்த்தம் செய்ய கூடாது. 
 
9. சூரியனின் காலற்ற நட்சரத்தில், செவ்வாயின் தலையற்ற நட்சரத்தில், குருவின் உடலற்ற நட்சரத்தில், மனை முகூர்த்தம்  செய்தால் வீடு கைமாறி அல்லது நின்று போகும். 
 
10. அஸ்வினி ,ரோகினி, ஹஸ்தம், அனுஷம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி, சதயம் நட்சரத்தில் செய்ய உத்தமம்  என்று நூல்கள் சொல்கிறது

தெற்குவீடு

வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள்.
 
வடக்கு, கிழக்கு மனைகளில் வசித்தாலும் காரணமில்லாமல் பல பிரச்னைகளோடு வாழ்பவர்களும் உண்டு. இதற்குக் காரணம் முறையான வாஸ்து சாஸ்திரப்படி அந்த மனைகள் அமையாததுதான். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை.
 
வாஸ்துப்படி அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. காரணம் தெற்கு  மனையை 'ஐஸ்வர்ய மனை' என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தையும், மக்கட் பேற்றையும் குறிக்கும்.
 
பல பெரிய தொழிலதிபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவை தெற்கு திசை நோக்கிய படி தான் இருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். 
 
தெற்குப் பார்த்த மனையானது பெரும்பாலும் ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மராசி அன்பர்களுக்கு யோகமுள்ள மனையாகின்றது என்று கூறப்படுகிறது

தெருக்குத்து





நன்மை தரக்கூடிய தெருக்குத்து,
வடகிழக்கு(வடக்கு) தெருக்குத்து.
வடகிழக்கு(கிழக்கு) தெருக்குத்து.
வடமேற்கு (மேற்கு) தெருக்குத்து.
நாம் வாஸ்து படி ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதில் முக்கியமாக, ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தில் ஏதேனும் தெருக்குத்து இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும்.  

–– ADVERTISEMENT ––