பணத்தை ஈர்ப்பதற்காக நம்மில் பல பேர் வீட்டில் வைத்திருக்கும் செடி மணி பிளான்ட். இந்த செடியை வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. வாஸ்துப்படி இந்த செடியை வீட்டில் வைத்தால் பணம் வரும். ஆனால் இந்த செடியை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்? கட்டாயம் பூமியில் புதைத்து வைக்கும், மணி பிளானட்ற்க்கு சக்தி அதிகம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வேரானது நம் வீட்டு பூமியில் புதைந்து இருக்க வேண்டும். மாடி வீட்டில் குடியிருப்பவர்கள், இடம் இல்லாதவர்கள் என்ன செய்வது? தொட்டியில் அந்த செடியினை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த தொட்டியானது தரையில் தான் இருக்க வேண்டுமே தவிர, ஆணியில் மாட்டி தொங்க விடக்கூடாது. அழகிற்காக தொங்க விடுவதில் தவறில்லை. ஆனால் தொங்கவிடப்பட்ட மணி பிளான்ட் மூலம் நமக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது என்பதுதான் உண்மை.
அடுத்ததாக தொட்டாச்சிணுங்கி செடியை நம் வீட்டில் வைப்பது செல்வ வளத்தை தரும். இப்படிப்பட்ட பலன்தரும் செடிகளை பூமியில் இருந்து எடுக்கும்போது அப்படியே பிடுங்கி எடுக்க கூடாது. பூமியிலிருக்கும் வேரானது முழுமையாக தோண்டி எடுக்கப்பட வேண்டுமே தவிர, அரைகுறையாக பிடுங்கி எடுத்து நம் வீடுகளில் கொண்டு வந்து வைப்பது தவறு. தொட்டாச்சிணுங்கி செடியை வீட்டின் பின்பக்கமாக தான் வைக்கவேண்டும். ஏனென்றால் தனிமையை விரும்பும் செடி இது. முன்பக்கத்தில் வைப்பதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. நன்மையும் ஏற்படாது. பின் பக்கத்தில் வைப்பது நன்மை தரும்.
முடிந்தவரை துளசி செடியையும் வீட்டின் பின்புறம் வைப்பது நல்லது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் வீட்டு வாசலில் இருக்கும் துளசிச் செடியை வெளி நபர்கள் அனைவரும் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது. துளசி செடிக்கு தூய்மை முக்கியம். எல்லோரும் எல்லா நேரத்திலும் தூய்மையாக தான் இருப்பார்கள் என்று கூறிவிடமுடியாது. நம் வீட்டுத் துளசி செடியை பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு. முடிந்தவரை துளசிச் செடியையும் வீட்டிற்கு பின் புறத்தில் வைத்துக் கொள்வது நன்மை தரும்.
No comments:
Post a Comment