jaga flash news

Saturday 16 January 2021

சாந்தி முஹூர்த்தம் முக்கியம்

சாந்தி முஹூர்த்தம் முக்கியம்



இது கொஞ்சம் அடல்ட் சப்ஜெக்ட்… 

கல்யாணத்துக்கு பெண்/பையன் தேடுபவர்கள் இலை மறை காய் மறையாக கேட்கும் கேள்வி இப்படி இருக்கும்..

வயிறு பொருத்தம் இருக்கா?
குழந்தை பாக்கியம்  இருக்கா?
சற்று கூச்சத்துடன் யோனி பொருத்தம் இருக்கா? என்று கேட்பார்கள்.. 

தாம்பத்யம் எப்படி இருக்கும் என்பது தான் மூலக்கேள்வி..

நட்சத்திர பொருத்தத்தில் இதை அறிய முடியாது என்பது ஒரு புறம் இருக்கட்டும்.. திருமணத்துக்கு முகூர்த்தம் குறிப்பவர்கள் கூட சாந்தி முஹூர்த்தம் எனப்படும் நிஷேகத்திற்கு பெரிய முக்கியத்துவம் தருவதில்லை..

நடந்த ஒரு சம்பவம்.

அலங்கரிக்கப்பட்டிருந்த அறையில் காத்திருந்த அந்த ஆணுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி   காத்திருந்தது..

புது மனைவி பால் சொம்புடன் கால்குலேட்டருடன் ஒரு பைலும் கொண்டு வந்திருந்தாள்..
ஆசை வார்த்தைகள் பேச வேண்டியவள் சூப்பராக வாழ்க்கை கணக்கை பேசினாள்.

“எனக்கு ஹோம் லோன் கமிட்மெண்ட் 15 வருஷம் இருக்கு, கார் லோன் 5 வருஷம் , பெர்சனல் லோன் அப்பப்ப போட்டது கொஞ்சம் இருக்கு, கரியர் ல முன்னேறனும், அதனால இதெல்லாம் கொஞ்ச வருஷம் தள்ளி வெச்சுக்கலாம்..” அணுகுண்டுகள் வரிசையாக இறங்கியதை உணர்ந்த அவன் “எத்தனை வருஷம் கழிச்சு? குழந்தைக்கு வேணும்னா பிளான் பண்ணிக்கலாம்” குரல் தாழ்ந்து போயிருந்த்தது.

கால்குலேட்டரை தட்டி கணக்கு போட்டவள் “அந்த ரிஸ்க்கே வேணாம். அடுத்த வருஷம் ஆன் சைட் கிடைக்கும், போனா 5 வருஷத்துல எல்லா லோனும் முடிஞ்சுரும், அப்புறம் சந்தோஷமா இருக்கலாம்…இவ்வளவு கமிட்மென்ட்ஸ் வெச்சிட்டு என்னால வேற எதுலயும் சந்தோஷமா இருக்க முடியாது..வெரி சிம்பிள்”

“இன்னும் 10 வருஷம் கழிச்சி குழந்தை பிறக்கலனா ??”

“ ஐ, வி, எப், ஐ, யு, எப் நிறைய இருக்கு, அதுக்கு லோன் கூட கிடைக்கும், சிபில் ஸ்கோர் கரெக்டா இருந்தா போதும்..”
கடைசி அஸ்திரத்தை உபயோகித்தான்.

“அம்மா, அப்பாக்கு பேர பிள்ளைகள் வேணும் னு கேப்பாங்க” தன்னுடைய ஆசையை பெற்றோர் ஆசையாக வெளிப்படுத்தியவனுக்கு அடுத்த பதில் தான் பேரிடி..

“ அவங்க இன்னும் எவ்ளோ நாள் இருக்க போறாங்க, அதுவும் இல்லாம அவங்க நம்ம கூட ஆன்சைட் வர போறதில்ல..”

அந்த இரவின் நீளம் இன்னும் முடியவே இல்லை..விவாகரத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது..

இத்தனைக்கும் 10 க்கு 9 பொருத்தம் இருந்து சிறப்பாக முஹூர்த்தம் தேர்ந்தெடுத்து திருமணம் மற்றும் சாந்தி முஹூர்த்தம் நடந்தது.. (எதுவும் நடக்கவில்லை என்பது தான் உண்மை..)

இதில் தவறுகளை இப்படி பட்டியல் இடலாம்..
1, தவறான திருமண பொருத்த முறை.
2, உடல் சார்ந்த எதிர்பார்ப்புகளை கணிக்க ஜோதிடரை சரியாக அணுகாதது.
3, இருவருக்கும் உகந்த திருமண மற்றும் நிஷேக முஹூர்த்ததினை தேர்ந்தெடுக்காதது.

சாந்தி முஹூர்த்ததுக்கு எதுக்கு சார் முக்கியத்துவம் கொடுக்கணும்? திருமணமான இரவும் தனிமை சூழலும் போதுமே ? அதான் கல்யாணம் நல்ல நேரம் பார்த்து செஞ்சுட்டோமே?

விஷயம் இருக்கு,

ஆணும் , பெண்ணும் இணையும் அந்த இயற்கை சங்கமத்திற்கு நமது கலாசாரம் அருமையாக பெயர் வைத்திருக்கிறது, முதல் இரவு. முதல் உறவு (ருது சாந்தி)என்பதை நாசூக்காக சொல்லி வைத்திருக்கிறார்கள்..  ஆனால் இந்த உறவு தடாலடியாக உடனடியாக நடப்பதில்லை.. இந்த  அற்புதமான விஷயத்திற்கு ஆணும் பெண்ணும் சுமார் 12 வயதிலிருந்து படி படியாக தயாராகி வருகின்றனர்..

உடல் ரீதியாக பெண்ணுக்கு ஏற்படும் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் போதிலிருந்து சத்தான உணவுகள் கொடுப்பதில் தொடங்கி , மாதம் தோறும்  சுகாதாரமான சூழ்நிலையில் கர்ப்பபை தன்னை சுத்திகரித்து கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும்  எப்படி செய்ய வேண்டும் என்று நமது பல ஆயிர வருட பாரம்பரியம் இன்னும் நம் பாட்டிகளின் வழியே நமக்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறது..  

முதன் முதலாக சினை முட்டை வெடித்து வெளியேறிய நேரத்தை குறித்து கொண்டு அதற்கு ருது ஜாதகம் என்று பெயர் வைத்து அதன் பலன் பார்ப்பது உண்டு, 

இன்று அதிலும் பெரும் குழப்பம் உண்டு, 

திருமண பொருத்தத்திற்கு கூட ருது ஜாதகத்தினை உபயோகிக்கும் அவலம் நடக்கிறது.

ஒரு சம்பவத்தின் வளர்ச்சி, தரம், முடிவு போன்றவைகளை அது ஆரம்பிக்கும் இடம் / நேரம்  தான் தீர்மானிக்கிறது, கிரகங்கள் அதை தெளிவாக சுட்டி காட்டுகிறது.. இது ஜோதிடத்தின் அடிப்படை உண்மை,, (மறுபடியும் சொல்கிறேன்,  கிரகங்கள் சுட்டி காட்டுமே தவிர எதையும் இயக்குவதில்லை, ஆனால் இங்கே பல ஜோதிடர்கள் கிரகங்களை  Activate செய்வதாக புரூடா விட்டு கொண்டு திரிகிறார்கள்..)

திருமண உறவை  தொடங்கும் நேரமாக தாலி கட்டும் தருணத்தை எடுத்து கொண்டால், அதன் அடுத்த படி நிலை தொடக்கமான சாந்தி முஹூர்த்ததிற்கு உண்மையில் நேரம் ஒழுங்காக குறிக்கப்ப்டுகிறதா? அப்படியே நேரம் குறித்தாலும் அதை தம்பதிகள் முறையாக பயன்படுத்துகிறார்களா ?? இல்லை, இல்லவே இல்லை..

கண்ட நேரத்தில் / இடத்தில் கூடுவதும்,  கர்ப்பம் தரிப்பதும், பின் கலைப்பதும் இன்றைய நிலை..

குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் ஒவ்வொரு கூடலின் போதும் எழுகின்ற எதிர்பார்ப்பும், மன வலியும்…

இதுக்கெல்லாமா சார் நேரம் பார்க்கணும்? என்ற உங்கள் கேள்விக்கான பதில் எனது தேடலில்..

1, கர்ப்ப தானம் (ஆணின் சுக்கிலம் வெளிப்படும் நேரம்)  நடக்கும் நேரம் தான் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆயுள் , ஆரோக்கியத்தினை தீர்மானிக்கும். இந்த நேரத்தில் இருவரின் மலக்குடல் மற்றும் சிறுநீர்பை சுத்தமாக இருக்க வேண்டும்..  எனவே பெருஞ்சீரகம், குங்குமப்பூ சேர்த்த பசும் பால் கொடுத்தனுப்பும் பழக்கம் தோன்றியது)

2, சுமார் 30 கோடி உயிரணுக்கள் போட்டியிட்டு முன்னேறி சென்று, சினை முட்டையை அடைய நடத்தும் ஒரு மிகப்பெரிய ஓட்டபந்தயம் தான் ஒரு ஆண் பெண் கூடல்..

3, சினைமுட்டையை துளைத்து உள்ளேறிய பின், கரு நின்று பெலோப்பியன் குழாய் வழியே பயணித்து கர்ப்பபையை அடையும், ரத்தம் உறைந்த பிண்டமாக கரு கிடக்கும் அந்த முக்கியமான முதல் மாதத்தினை சுக்கிரன் நிலை காட்டும்..

4, கரு விதை போல் மாறும் இரண்டாவது மாதத்தின் நிலைமையை செவ்வாய் காட்டும்.

5, முளை போல் கரு மாறும் நிலையை மூன்றாம் மாத நிலையை குருவும்,    எலும்பும், உடம்பும் உருவாகும் நான்காம் மாத நிலையை சூரியன் காட்டும்.

6, தோல், கொழுப்பு, ரத்தம், உற்பத்தி ஆகும் ஐந்தாம் மாத நிலையை சந்திரனும், சகல உறுப்புகளும் உருவாகும் ஆறாம் மாத நிலையை சனியும், பஞ்ச இந்திரியங்களை தோற்றுவிக்கும் ஏழாம் மாத நிலையை புதன் காட்டும்..

7, பசி தாகம் ஏற்படும் எட்டாம் மாதத்திற்கு கரு உருவான நேரத்து லக்ன அதிபதியின் நிலையும், ஒன்பதாம் மாதத்திற்கு சந்திரனின் நிலையும், பிறக்கும் பத்தாம் மாத நிலையை சூரியன் காட்டும்.

இப்படி நம் முன்னோர்கள் கரு உருவான கணம் முதல் வெளிவரும் நொடி வரை உள்ள அனைத்திற்கும் பயன்படும்படி உருவாக்கி வைத்திருக்கும் ஜோதிட சாஸ்திரத்தை முறையாக பயன்படுத்தாமல், அரைகுறையாக முஹூர்த்தம் பார்த்து விட்டு, பின் கலவி கொண்டு புத்திர சோகம் பெறுவது, திருப்தியின்மை, மலட்டு தன்மை என பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கொண்டு நவீன மருத்துவர்களை வாழ வைத்து கொண்டிருக்கிறோம்…

முதல் / கூடலுக்கான நேரம் எது?
1, மாதம் இரண்டு முறை என்று சாஸ்திரம்  சொன்னாலும், அது இன்று காலத்துக்கு ஆகாது..
2, பிறந்த கால ஜாதகத்தின் 5 அல்லது 12ம் அதிபதி மீது சந்திரன் போகும் காலம்.
3, பிறந்த கால ஜாதகத்தின் சுக்ரன் மீது சந்திரன் போகும் காலம்.
4, குரு, சுக்ர ஓரைகளில்
5, தசா புத்தி நடத்தும் கிரகத்தின் மீது சந்திரன் போகும் காலம்
6, ஜென்ம நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 6வது மற்றும் அதன் அனு, திரி ஜென்ம நட்சத்திரங்களில் சந்திரன் போகும் நாள்.

குழந்தை உண்டாவதற்கான கூடலுக்கான விதிமுறைகள் தனியே உண்டு, அது இருவரின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப மாறும் என்பதால் இங்கே விளக்குவது கடினம்..







No comments:

Post a Comment