jaga flash news

Tuesday 18 May 2021

செர்ரி பழம்....


கண்பார்வையின் நலத்திற்கு மிகுந்த பலன் தரும் செர்ரி பழம்.:

செர்ரி பழத்தில் வைட்டமின் “ஈ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது.

செர்ரி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய சத்துகள் அதிகம் உள்ளன. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் செர்ரி பழம் பேருதவி புரிகிறது.

பலருக்கும் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செர்ரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “எ” மற்றும் “ஈ” சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில்  செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.

செர்ரி பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும். எனவே இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்க ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்க செர்ரி பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த வழிமுறையாகும்.

செர்ரி பழம் உடல் எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

No comments:

Post a Comment