jaga flash news

Friday, 30 September 2022

பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா..! பின்தொடரும் வம்ச பாவங்கள்...

பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது தவறான கூற்றாகும். அப்படி பார்த்தால் நிறைய பேர் பாம்பை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும்.

எப்போதோ, என்றோ, முன்னோர்களோ அல்லது நீங்களோ செய்த பாவம் உங்களையும், உங்களுடைய வம்சத்தையும் பின் தொடர்வதாக கூறப்படுகிறது.இதில் சில விஷயங்களை செய்யும் பொழுது சர்ப்ப தோஷம் உண்டாகிறது அவை என்னென்ன? சர்ப்ப தோஷம் எதனால் உண்டாகிறது? மேலும் தீயை அணைத்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கூறுவது உண்மையா? அது என்ன தோஷம்? என்பது போன்ற அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா..! பின்தொடரும் வம்ச பாவங்கள்...

HoroscopeAstrologyHinduism
4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
10SHARES
Follow us on Google News

பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது தவறான கூற்றாகும். அப்படி பார்த்தால் நிறைய பேர் பாம்பை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும்.

எப்போதோ, என்றோ, முன்னோர்களோ அல்லது நீங்களோ செய்த பாவம் உங்களையும், உங்களுடைய வம்சத்தையும் பின் தொடர்வதாக கூறப்படுகிறது.

இதில் சில விஷயங்களை செய்யும் பொழுது சர்ப்ப தோஷம் உண்டாகிறது அவை என்னென்ன? சர்ப்ப தோஷம் எதனால் உண்டாகிறது? மேலும் தீயை அணைத்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கூறுவது உண்மையா? அது என்ன தோஷம்? என்பது போன்ற அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூமாதேவியின் சாபம்

பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா..! பின்தொடரும் வம்ச பாவங்கள்... | Astrology Tomorrow Today Horoscope Today Rasipalan

பத்தில் ஒருவருக்கு கட்டாயம் ஜாதகத்தில் சர்ப்பம் சம்பந்தப்பட்ட சர்ப்ப தோஷங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. இவை ஏன் ஏற்படுகிறது? பொறாமையால் அடுத்தவர்களின் குடியை கெடுப்பது, தம்பதிகளை பிரிப்பது, கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்களை ஏமாற்றுவது, திருடுவது, வைத்தியம் தெரியாமல் பொய் வைத்தியம் செய்வது, வதந்தி பரப்புவது, கலப்படம் செய்வது, சொத்தை அபகரிப்பது, பசு வதை செய்வது, இயற்கையை சீரழிப்பது, நோயை தேவையில்லாமல் பரப்புவது, கோவில் சொத்தின் மீது ஆசைபடுவது, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது போன்ற விஷயங்கள் செய்பவர்களுக்கு அவர்களுடைய சந்ததியினருக்கும் கூட பாவத்தில் பங்கு கிடைக்கும். அந்த வகையில் சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் பின் தொடர்கிறது.

ராகு, கேது ஆகிய இரண்டு பாவ கிரகங்களும் உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். இவர்களை வணங்கும் பொழுது செய்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைக்கிறது. தீயை அல்லது தீப்பிடித்துள்ள பொருட்களை கீழே தரையில் போட்டு மிதிக்க கூடாது. இவ்வாறு போட்டு மிதிப்பதால் பூமி தோஷம் ஏற்படுகிறது.பூமாதேவியை அவமதிக்கும் செயலாக இவை பார்க்கப்படுவதால் பூமாதேவியின் சாபத்தை பெற்று, அவர்களுக்கு மனை தோஷம் உண்டாகிறது. இதனால் அவர்களுக்கும், அவர்களுடைய வம்சத்திற்கும் பூமி, மனை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் காலதாமதம் ஏற்படும். சிலருக்கு அந்த பாக்கியமே கிடைக்காமல் கூட போகும் வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறது ஜோதிடம்ராகு, கேது தோஷம் ஏற்படுபவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக செய்த பாவங்களும் பின்தொடர்வதாக நம்பப்படுகிறது. இதற்கு காரணம் ராகு, கேது இரண்டும் மனிதனுடைய குரோமோசோம்களின் கலவையாக கருதப்படுகிறது.

23 குரோமோசோம்கள் தாயிடம் இருந்தும், 23 குரோமோசோம் தந்தையிடம் இருந்தும் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. இந்த 46 குரோமோசோம்களும் உயரம், தோல், தலைமுடி, கண் விழிகள், பேச்சாற்றல், தோற்றம், உடல் எடை, பரம்பரை வியாதி, திறமை ஆகியவற்றை நிர்ணயிக்கிறதுஇவை ராகு, கேது ஆகிய ரெண்டு நிழல் கிரகங்களிடம் சிக்கி 33 ஆண்டுகள் தோஷத்தின் பலன்களை அனுபவித்து பின்னர் நிவர்த்தியாகும் என்கிறது ஜோதிடம், எனவே கூடுமானவரை எவருக்கும் பாவம் செய்யாமல், யாரையும் ஏமாற்றாமல், நல்லவையை மட்டும் செய்து நன்மைகளை அனுபவிப்போம்

Monday, 26 September 2022

புரட்டாசிமாதம்...

புரட்டாசி எமனின் கோரைப்பல் மாதம்.எமன் அதிக உயிர்களை அறுவடை செய்யும் மாதம்..துலாம் ராசி லக்னத்தார் கவனம்...சிலர் பதவி இழப்பர் சிலர் திடீர்னு கடனாள் நோயாளி ஆகபோகிறார்கள்.புரட்டாசி முடியும் வரை புதிய முதலீடு வேண்டாம்.அதிகமான இருதய நோயாளிகளை உண்டாக்கும் மாதம்....வயதானவர்கள் அவசியம் ஜாக்கிரதையா இருக்கனும்

அதிகம் கோபப்பட்டால் அதிக வருத்தப்பட்டால் இதயம் தன் பணியை நிறுத்தி விடும் என்பதை மனதில் கொள்ளவும் ..இதயத்துக்கு இந்த மாதம் அதிக வலு இல்லை...

Wednesday, 21 September 2022

மகாளய பட்சம் 15 திதி தர்ப்பணத்திற்கான பலன்கள்:

முதல் நாள் - பிரதமை - பணம் சேரும்.
2ஆம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
3ஆம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறும்
4ஆம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ஆம் நாள் - பஞ்சமி - சொத்து சேரும்
6ஆம் நாள் - சஷ்டி - புகழ் வந்து சேரும்
7ஆம் நாள் - சப்தமி - பதவி பெறலாம்
8ஆம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி பெறலாம்
9ஆம் நாள் - நவமி - பெண் குழந்தைகள் பிறக்கும், திருமண தடை நீங்கும்.
10ஆம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறும்

11ஆம் நாள் - ஏகாதசி - கல்வி, கலை வளர்ச்சி, விளையாட்டில் திறன் சிறக்கும்
12ஆம் நாள் - துவாதசி - நகைகள், ஆடைகள் சேரும்
13ஆம் நாள் - திரயோதசி - விவசாயம் செழிக்கும், பசுக்கள் விருத்தியாகும், ஆயுள், அரோக்கியம் கூடும்
14ஆம் நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்கி, தலைமுறைகளுக்கு நன்மை சேரும்.
15ஆம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும்.