மூக்குத்தி குத்துவது ஏன் தெரியுமா? பெண்கள் இடது பக்கம், மூக்கு குத்த காரணமே இதுதானா? அடடே ஆச்சரியம்
நம்முடைய முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல.. ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு அறிவியல் காரணங்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.. அப்படித்தான் பெண்களுக்கு மூக்கு குத்துவதும்.
காது குத்துவது போலவே, அறிவியல் காரணங்களையும், மருத்துவ காரணங்களையும் கொண்டிருக்கிறது மூக்குத்திகள்.. ஆண்களுக்கு மூக்கு குத்தாமல், பெண்களுக்கு ஏன் மூக்கு குத்துகிறார்கள் தெரியுமா? அதுவும் இடப்பக்கத்தில் பெண்களுக்கு மூக்கு குத்துவது ஏன் தெரியுமா?
Amazing Health Benefits to wearing Nose Pin and Do you know why women should wear nose rings on the left side
பழக்கம்: ராஜா காலத்திலிருந்தே மூக்குத்தி குத்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.. அப்போதெல்லாம் தங்கத்தில், பெரிய பெரிய வளையமாக, மூக்குத்திகளை அதுவும் 2 பக்கத்திலும் அணிந்திருக்கிறார்கள்.. நாளடைவில்தான், மூக்குத்திகள், சிறிய கல் அளவுக்கு சுருங்கிவிட்டன.
America கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி.. உச்சகட்ட பதட்டத்தில் செங்கடல்
தங்கத்துக்கு ஒருசில இயல்புகள் உள்ளன.. குறிப்பாக, நம்முடைய உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்துகொண்டு, நீண்ட நேரம் தன்னுள் வைத்திருக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அதனால்தான், மூக்கில் உள்ள துவாரத்தில், தங்கத்தில் மூக்குத்தி அணியும்போது, அந்த தங்கமானது, நம்முடைய உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து ஈர்த்து கொள்ளும்..
நரம்புகள்: மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் (Hippotelamas) என்ற பகுதி இருப்பதால், நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய, மூளை செயல்பட துணையாக இருக்கக்கூடிய பகுதிகளை சிறப்பாக செயல்பட தூண்டவும், மூக்கு குத்தப்படுகிறது.
அதேபோல, ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு வலிமை அதிகம்.. அதிலும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கு தலைப்பகுதியில் குறிப்பாக, நரம்பு மண்டலத்தில் இதுபோன்ற சில கெட்ட வாயுக்கள் சேர்ந்துவிடும். இந்த வாயுக்களை வெளியேற்றுவதற்காகவே, பருவ வயது எட்டிய பெண்களுக்கு மூக்கு குத்தப்படுகிறது.
மூக்கு குத்துவதனால், பெண்களுக்கு சளி, ஒற்றைத்தலைவலி, போன்ற சுவாச கோளாறுகள் நீங்குகின்றன.. அத்துடன், பார்வை கோளாறுகள, நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்குகின்றன.. மனம் தடுமாறாமல், ஒரே நேர்க்கோட்டில் மனது குவியவும் உதவுகின்றன..
இடது பக்கம்: வலது பக்கமும் சிலர் மூக்கு குத்திக் கொள்கிறார்கள்.. எனினும், இடப்பக்கம் மூக்கு குத்துவதுதான் அதிக பலன்களை தருகிறதாம். குறிப்பாக, இடது பக்கத்தில் மூக்கு குத்திக் கொள்வதால், பெண்களின் வலது பக்க மூளை சிறப்பாக இயங்குகிறது..
இடப்பக்கத்தில் குத்தி கொள்வதால், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளும் சீராக செயல்படுகிறது.. மூக்கு குத்தியுள்ள பெண்களுக்கு, குறைவான பிரசவ வலியை அனுபவிக்கிறார்களாம்.. இதனால், குழந்தை சிரமமின்றி எளிதாக பிறக்கும் என்கிறார்கள்.. அதேபோல, மாதவிடாய் பிரச்சனைகளின் அவதியும் குறைகிறதாம்.
ஆன்மீக காரணம்: அறிவியல், மருத்துவ காரணங்கள் இவ்வாறு இருந்தாலும், ஆன்மீக காரணங்களும் சொல்லப்படுகின்றன. லட்சுமி தேவியின் அம்சமாகவே மூக்குத்தி கருதப்படுகிறது.. மூக்கு குத்தும் பெண்களுக்கு லட்சுமியின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஜாதகத்தில் சந்திரன் அல்லது புதன் ஆறாம் வீட்டில் இருந்தால், மூக்கு குத்தினால், ராசியில் உள்ள புதன் வலுப்பெறுமாம்.. அதனால்தான், மூக்கு பகுதி குருவின் அம்சமாகவும், மூக்கின் முனை புதனின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.. மூக்கு வழியாக பாயும் காற்று குரு ஆவார். அதனால் தான் மூக்கை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்
செவ்வாய் : தங்கத்தில் மூக்குத்தி அணிவதால், குரு மற்றும் செவ்வாயின் அருளாசி கிடைப்பதுடன், அந்த பெண்ணின் சந்திரன், புதன் கிரகங்கள் வலுப்படுவதாக கூறுகிறார்கள். இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. மூக்கு குத்தும் பெண்களுக்கு, அன்பு நிறைந்த சகோதரன் அல்லது வாழ்க்கைத்துணை கிடைக்குமாம்..
பெண்களுக்கு மூக்கு குத்த வேண்டுமானால் அல்லது புதிதாக மூக்குத்தி அணிய வேண்டுமானால், புதன்கிழமை மாலை முகூர்த்தம் மற்றும் புதனின் நட்சத்திரம் உள்ள நாள் மிகவும் சிறந்தது.
வைரம்: தங்கத்தில் நகை அணிவது போலவே, வெள்ளி, வெண்கலத்திலும் மூக்குத்தி அணியலாம்.. இதனாலும், சில ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கின்றன..
அதேபோல, வைரத்திலும் மூக்குத்தி அணிவார்கள்.. இது கூடுதல் பளபளப்பையும், ஜொலிஜொலிப்பையும் தரும்.. ஆனால், ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருப்பவர்கள் வைரம் அணியக்கூடாது... அதிலும், ஜாதகத்தில் சனி பாதகமான நிலையில் இருப்பவர்கள் வைரம் அணிய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். ஆஹாங்..மூக்குத்தி பதிவு அருமை அய்யா.
ReplyDeleteSun. 24, Mar. 2024 at 9.54 pm.
ReplyDelete*இன்று பார்க்கப் போவது நன்னூல்...!*
*நன்னூல் :*
ஒரு நல்ல நூலின் இயல்பானது, அதாவது நூலின் தன்மையானது, இருவகைப் பாயிரங்களை உடையதாய், மூவகை நூல்களுள் ஒன்றாகி, நால்வகைப் பொருள்களைப் பயப்பதாய், எழு வகை மதங்களைத் தழுவி, பத்துக் குற்றங்களை நீக்கி, பத்து அழகுடனே, முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு, ஒத்து, படலம் என்னும் உறுப்புகளோடு, சூத்திரம், காண்டிகை, விருத்தி என்னும் வேறுபட்ட நடைகளை பெற்று வருவதாகும். இதுவே, ஒரு நூல் இன்னது என்பது தெரியும்.
* இருவகைப் பாயிரம் என்பது, *பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம்.*
* பாயிரத்தின் வேறு பெயர்கள்... முகவுரை, பதிகம் முதலியன.
* இருவகைப் பாயிரத்தில், பொதுப் பாயிரம் என்பது, *நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, அவர் நூலைக் கூறும் இயல்பு, மாணாக்கனின் இயல்பு, அவன் நூலைக் கேட்கும் இயல்பு, ஆகிய இவ்வைந்தையும் கூறுவதே *பொதுப் பாயிரம்* என்பது.
*அடுத்து... *மூவகை நூல்கள் என்பது, முதல் நூல், வழி நூல், சார்பு நூல்.*
* மூவகை நூல்களுள் முதல் நூல் என்பது, *வினைகளினின்று நீங்கி, விளங்கிய அறிவினையுடைய முதல்வன், தொடக்கத்தில் அருளியதாகும்.*
* வழி நூல் என்பது, *முன்னோர், நூலில் முடிந்த பொருள்களை முழுவதும் ஒத்து, பின்னோன் தான் விரும்பும் வேறுபாடுகளை, அறிஞர்கள் ஒப்புக்கொள்ளக் கூடிய வகையில் புகுத்திச் செய்வது, வழி நூலாகும்.*
* சார்பு நூல் என்பது, *முதல் நூல், வழி நூல் ஆகிய இருவகை நூல்களுக்கும், பொருள் முடிபு ஒரு பகுதி ஒத்து, ஒழிந்தன எல்லாம், ஒவ்வாமை உடையது...சார்பு நூல் எனப்படும்.*
* இந்த வழிநூல், சார்பு நூல்களுக்கான சிறப்பு விதி யாதெனில்.... *முதல் நூல் செய்த தம் முன்னோர் கூறிய பொருளை மட்டும் அல்லாமல், அவர் மொழியையும் பொன் போலப் போற்றுவோம் என்பதற்கு அடையாளமாகவும், முன்னோரினும் வேறு நூல் செய்தாலும், மேற்கோள்களை அதாவது ஆசிரிய வசனங்களை ஆங்காங்கு எடுத்தாளுதல் மரபாதலின், இந்நூலில் அவை எழுத்தாளப்படவில்லை என்னும் குற்றம் நீங்குவதற்காகவும், பழஞ் சூத்திரங்களிலிருந்து மேற்கோள்களைக் கூறுதல் வேண்டும்.*
சரி..அடுத்து, *நூற்பயன்* பார்ப்போம்.
*அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய இந் நான்கு உறுதிப் பொருள்களையும் தருவதாய் நூல் அமைதல் வேண்டும்.*
* அடுத்ததாக... *எழு மதம்* பார்ப்போம் !
1. பிறர் கொள்கையை உடன்பட்டு ஏற்றல்.
2. அதை மறுத்தல்
3. பிறர் கொள்கையை முதலில் உடன்பட்டு ஏற்றுப் பின்னர் மறுத்தல்.
4. தான் ஒரு கொள்கையைக் கூறி, இறுதிவரை அதை நிலை நாட்டுதல்.
5. இருவர் மாறுபடக் கூறிய கொள்கைகளுள் ஒன்றைத் துணிந்து ஏற்றல்.
6. பிறருடைய நூலில் உள்ள குற்றம் காட்டல்.
7. பிறருடைய கொள்கைக்கு உடன்படாமல், தன் கொள்கையையே கொள்ளுதல்.
*இவையே எழுவகை மதங்கள்.*
*பத்து குற்றங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் !*
Sivajansikannan@gmail.com
Tue. 26, Mar. 2024 at 1.23 pm.
ReplyDeleteநன்னூல் :
*ஒரு நூலினுடைய இயல்பு பற்றி, அதாவது ஒரு நூலின் தன்மை, பின்னும் கூறப்போனால், ஒரு நூல் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி பார்த்து வருகிறோம்.
* கடந்த பதிவை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்..!
* தொடர்ந்து *பத்துக் குற்றம்* பற்றி இன்று பார்க்கலாம்.
*பத்துக் குற்றங்கள் :*
1. குறித்த பொருளை விளக்குவதற்கு ஏற்ற சொற்களில், குறைவு படக் கூறுதல்.
2. குறித்த பொருளில் விளக்க வேண்டிய சொற்களை மிகுதிப்படக் கூறுதல்.
3. சொன்னதையே திரும்பச் சொல்லுதல்.
4. முன் பின் முரணாகக் கூறுதல்.
5. குற்றமுடைய சொற்களைச் சேர்த்தல்.
6. ஒரு சொல்லின் பொருளை தெளிவற்ற முறையில் கூறுதல். (அதுவா அல்லது இதுவா இதன் பொருள் என மயங்குதல்).
7. பொருளோடு பொருந்தாத வெறும் சொற்களை பிதற்றுதல்.
8. ஆரம்பித்த சொல்லைத் தவிர்த்து, இடையில் வேறொரு சொல்லுக்கு தாவுதல்.. அதாவது சம்பந்தமில்லாத பொருளை விரித்துக் கூறுதல்.
9. ஒரு சொல்லை முதலில் விரிவாகவும், விறுவிறுப்பாகவும் கூறத் தொடங்கி , நேரம் செல்லச் செல்ல, சொல்லின் நடையும், பொருள் நடையும், படிப்படியாகத் தேய்ந்து குறைந்து முடிதல்.
10. ஒரு சொல்லின் சொற்கள் இருந்தும், அவற்றின் பொருட்பயன் இல்லாது கூறுதல்.
இப்பத்தும் நூலுக்குரிய குற்றங்கள் ஆகும்.
*அடுத்த பதிவில் *பத்து அழகு* பற்றி பார்க்கலாம் !
Sivajansikannan@gmail.com
Wed. 27, Mar. 2024 at 8.19 pm.
ReplyDelete*நன்னூல் :*
நன்னூல் பற்றி பார்த்து வருகிறோம்.
*தொடர்ந்து நூலின் 10− அழகுகள் பற்றி பார்க்கலாம் :*
*பத்து அழகுகள் :*
1. கூறும் பொருளைச் சொற்கள் விரியாமல் சுருங்கக் கூறுதல்.
2. சுருங்கக் கூறினும், பொருளைத் தெளிவாக விளங்க வைத்தல்.
3. படிப்பவர்க்கு இனிமை தருதல்.
4. நல்ல சொற்களைச் சேர்த்துக் கூறுதல்.
5. சந்த இன்பம் உடையதாக அமைத்தல்.
6. ஆழ்ந்த கருத்தை உடையதாக இருத்தல்.
7. சொல்லப்படும் கருத்துகளைக் காரண, காரிய முறைப்படி, கோவைப் படுத்திக் கூறுதல்.
8. மேலானோர் வழக்கோடு மாறுபடாமல் கூறுதல்.
9. சிறந்த பொருளைத் தருதல்.
10. தான் கூறக் கருதும் பொருளை விளக்குதற்குரிய எடுத்துக் காட்டுகளோடு அமைதல்.
ஆகிய *இப் பத்தும் ஒரு நூலுக்குரிய அழகு ஆகும்.*
*மீண்டும் அடுத்த பதிவில், 32− உத்திகள் பற்றி பார்க்கலாம் !*
Sivajansikannan@gmail.com
Thu. 28, Mar. 2024 at 4.07 pm.
ReplyDelete*நன்னூல் :*
நன்னூல் பார்த்து வருகிறோம். தொடர்ந்து இன்று *32 − உத்திகள்* பற்றி பார்க்கப் போகிறோம்.
*உத்தி என்றால், *தந்திரம்* என்று பொருள். மேலும் பல பொருள் உண்டு. அவை : கருதலளவை, பாம்பின் படப்பொறி, தேமல், சேர்க்கை, இசைவு, இணக்கம், தலைக்கோலம் என பல பொருள் உண்டு.
ஏன் இவ்வாறு உத்தி (தந்திரம்) என்று பெயர் வந்ததென்றால்...
ஒரு இலக்கண நூலின் பொருளை, உலக வழக்கு, நூல் வழக்குகளோடு பொருந்தக் காட்டி, அப்பொருளை மற்றோர் இலக்கிய நூலிலும், ஏற்ற இடம் அறிந்து, இவ்விடத்திற்கு இப்படியாகும் என்று நினைததுத் தக்க வகையில் நடத்துவது உத்தி (தந்திரம்) ஆகும்.
*32−உத்திகள் :*
இதனைப் பாடலோடு கூற விரும்புகிறேன். எனவே, பாடலை நன்கு கவனியுங்கள்...!
நுதலிப் புகுதல் ஒத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடம் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
சொற்பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல்
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந் தொழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தில் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்ன தல்லது இதுவென மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
பிறநூல் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்கம் மிகவெடுத் துரைத்தல்
சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
ஒன்றினம் முடித்தல் தன்இனம் முடித்தல்
உய்த்துணர வைப்புஎன உத்திஎண் ணான்கே.
இதுவே இப்பாடல்.
சரி, இப்போது 32− உத்திகள் இப்பாடல் மூலம் அறிவோம்.
1. சொல்லித் தொடங்குதல்
2. இயல்களைக் காரண காரிய முறைப்படி வைத்தல்.
3. கூறக் கருதும் பொருள்களைத் தொகுத்துக் கூறுதல்.
4. பின்னர் அவற்றை வகுத்துக் காட்டல்.
5. தான் கூறுவதை, மேலோர் கூறியவாறு முடித்துக் காட்டுதல்.
6. தான் கூறும் கருத்துக்கு இலக்கியம் தோன்றும் இடம் கூறல்.
7. முன்னோர் கூறிய கருத்துகளை ஏற்ற இடங்களில் எடுத்துக் கூறல்.
8. பிறருடைய கோட்பாடுகளை எடுத்துக் கூறல்.
9. தான் கூறிய சொற்களின் பொருள் விளங்க, உருபு முதலியவற்றை விரித்துக் கூறல்.
10. பொருள் விளங்க, ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களைச் சேர்த்துக் கூறல்.
11. இருபொருள் படக் கூறுதல்.
12. முன்பு காரணம் விளங்காமல் கூறியதைப் பின் காரணம் காட்டி முடித்தல்.
13. ஒன்றிற்குரிய இலக்கணம் மற்றொன்றிற்கும் பொருந்தி வருமானால், அதற்கு இதுவே இலக்கணமாக முடித்துக் காட்டல்.
14. ஒன்றிற்குரிய இலக்கணத்தை, அதனைப் பெறுவதற்குரிய மற்றொன்றினோடு மாட்டிவிட்டு நடத்தல்.
15. முற்காலத்தில் வழங்கியவற்றுள், பிற்காலத்தில் வழக்கிழந்ததை நீக்குதல்.
16. முற்காலத்தில் வழங்காது, பிற்காலத்தில் வழங்குவனவற்றுள், ஏற்புடையவற்றை மேற்கொள்ளுதல்.
17. பின்பு, வேண்டும் இடந்தோறும் எடுத்தாளுதற்கு உரியதை முன்னே சொல்லி வைத்தல்.
18. ஒரு பொருளுக்குக் கருவியாய் முன்னர்க் கூற வேண்டுவதை, பின்னர் நிறுத்திக் கூறுதல்.
19. வெவ்வேறாக முடித்துக் கூறல்.
20. வெவ்வேறாக முடிந்ததை உணர்த்த அல்லது புலப்படுத்த, தொகுத்துக் கூறுதல்.
21. பின்னே சொல்லப்போவதை ஒரு காரணம் கருதி, முன்னே குறிப்பிட நேர்ந்தால், பின்னே விளக்கிக் கூறுவோம் என்பது தோன்றக் கூறுதல்
22. முன்னே சொன்னதைப் பின்னே, ஒரு காரணம் கருதிக் குறிப்பிட நேர்ந்தால், முன்பே உரைத்தோம் என்பது, தோன்றச் சொல்லாது விடுதல்.
23. மாறுபட்ட இரு கருத்துகளுள் ஒன்றை, துணிந்து மேற்கொள்ளுதல்.
24. தான் சொல்வதற்குத் தக்க இலக்கியத்தை எடுத்துக் கூறல்
25. தான் சொல்லும் இலக்கணத்தைத் தான் கூறிய இலக்கியத்தில் பொருந்த வைத்தல்.
26. இதுவோ, அதுவோ என ஐயம் வருவதற்குரிய இடத்தில் இப்படிப்பட்டது அல்லாதது இது என எடுத்துக் கூறல்.
27. சொல்லாது விட்டவற்றிற்கு, சொல்லப்பட்டதனால் இலக்கணம் பொருந்தச் சொல்லுதல்.
28. பிறநூலில் முடிந்த முடிவைத், தான் ஏற்றல்.
29. தான் புதிதாக வழங்கியதைக் குறித்து, பல இடங்களிலும் எடுத்துச் சொல்லுதல்.
30. சொல்லின் முடிவிலே, அதன் பொருளையும் முடித்துக் காட்டல்.
31. விதிகளால் ஒன்றுபட்டவற்றை ஓரிடத்துச் சேர்த்துக் கூறுதல். அவ்வாறே, ஒன்றைக் கூறுமிடத்து அதற்கு இனமாகிய மற்றொன்றையும் கூட்டி முடித்தல்.
32. சில சூத்திர விதிகளைக் கொண்டு ஆராய்ந்து அறியும்படி , ஒரு பொருளை வைத்தல்.
இவை யாவும் *முப்பத்திரண்டு தந்திர உத்திகள்* ஆகும்.
*
நுதல் (நுதலி) என்றால் சொல் என்று பொருள்.* மேலும் பல பொருள் உண்டு. (நெற்றி, புருவம், மேலிடம்).
ReplyDelete* இரட்டுறு (இரட்டுற) என்றால் இரு பொருள்படுதல். மேலும் பல பொருள் உண்டு. அவை மாறுபடு, ஐயுறு என்று பொருள் படும். (6−வது வரி).
* கோடல் என்றால்(9−வது வரியில்) கொள்ளுதல், (மேற்கொள்ளுதல்). மேலும் பல பொருள் உண்டு. பாடம் கேட்டல், கருதுதல், நெட்டி, வளைவு, வெண் காந்தள் என்று பல பொருளுண்டு. (காந்தள் என்றால் தோன்றி, கோடல், கோடை, கார்த்திகைப் பூ, வேலன் வெறியாடல் அதாவது, புறத்துறையில் வரும். காந்தள் மலர் அணிந்து வேலன் வெறியாடுவான் என புறத்துறையில், முருகக் கடவுளுக்கு உரிய காந்தளைச் சிறப்பித்து இப்புறத்துறைக் கூறும். சவுக்காரம் என பல பொருள் உண்டு.
* விகற்பம் ( பாடலில் 10−வது வரி) என்றால், வேற்றுமை என்று பொருள். *விகற்பித்தல் என்றால் வேறுபடுத்துதல். விகற்பம் என்பதற்கு மேலும் பல பொருள் உண்டு. அவை மனமாறுபாடு, மனக்கோணல், பிழை, ஐயம், இனம் என பல பொருள் உண்டு.
*பாடலைக் கூர்ந்து கவனித்து வாசித்தால், 32−உத்திகள் பாடலிலேயே பொருளும் அறிந்து கொள்ள முடியும். அதற்கேற்றவாறு, 32−உத்திகளையும் அளித்துள்ளேன்.
மீண்டும் அடுத்த பதிவில் *ஒத்து, படலம் என மேற்கொண்டு பார்க்கலாம் !*
Sivajansikannan@gmail.com
This comment has been removed by a blog administrator.
ReplyDelete* சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு (கொன்றை வேந்தன்).
ReplyDeleteசிவத்தை என்றால் சிவபெருமானை என்பதாகும்.
பேணில் (ன்) என்றால் வணங்கினால் என்பதே.
தவத்திற்கு என்றால், தவம் செய்வதற்கு என்பதே.
அழகு என்பதற்கு, அழகாகும் என்று பொருள்.
இதனின் கருத்து, *தவம் செய்கிறவர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும் என்பதே* இதனின் கருத்து.
Sivajansikannan@gmail.com
Fri. 29, Mar. 2024 at 7.29 pm.
ReplyDelete*நன்னூல் :*
நன்னூல் பற்றி பார்த்து வருகிறோம். தொடர்ந்து பார்க்கலாம் !
* *ஒத்து :*
* ஒத்து என்பதன் பொருள் ஒருவகைக் கைவளை, ஒத்திசை இன்னும், இசையில் தாளம், ஓர் ஊதுகுழல், அந்தரக் கொட்டு என பல பொருள் உண்டு.
இங்கு *ஒத்து என்பதற்கு, ஒரு வகையான எனப் பொருள் கொள்வோம்.*
எனவே, ஒத்து என்பதற்கு, *ஒருவகையான மணிகளை ஓரிடத்து நிரல்படப் பதிப்பதிபோல, ஒருவகையான பொருட்களை, ஓரிடத்து ஒரு சேரத் தொகுத்து, நிரல்படக் கூறுவது "ஒத்து" எனப்படும்.*
* நிரல்பட என்றால், ஒழுங்கு, (ஒழுங்கு படுத்தி அல்லது வரிசைப்படுத்திக் கூறுவது) அதாவது வரிசை பட எனப் பொருள்.
* *படலம் :*
* *படலம் என்பதற்கு, ஒர் இனப்பொருள் அல்லாத பல வகைப் பொருள்களும் தொடர்ந்து வரப் பொதுவாக கூறுவது "படலம்" எனப்படும்.*
படலம் என்றால் கூட்டம் என்று பொருள். மேலும், பரப்பு, மேற்கட்டு, அடுக்கு, கண்படலம், நூலின் உட்பிரிவு எனப் பல பொருள் உண்டு.
* *சூத்திரம் :*
* சூத்திரம் என்பதன் பொருள், தந்திரம், இரகசியம், நூற்பா, (சூத்திர வடிவில் அமைந்த நூல்) பஞ்சு நூல், இயந்திரம் எனப் பல பொருள் உண்டு.
* எனவே, சூத்திரம் என்பதற்கு, ஒரு சிறிய கண்ணாடி, பெரிய உருவை எவ்வாறு தன்னுள் அடக்கித் தெளிவாகக் காட்டுகிறதோ, *அதுபோல, சில எழுத்துக்களால் ஆகிய சொற்களில், பல பொருள்களை அடக்கி, பொருள் இனிது விளங்கத் "திட்ப நுட்பம்" சிறக்க அமையும் "யாப்பே" சூத்திரம் எனப்படும்.*
* திட்ப (திட்பம்) என்றால் உறுதி, வலிமை, கால நுட்பம் என பல பொருள் உண்டு.*
* நுட்பம் என்றால், நுண்ணிய ஆய்வு தோன்ற எழுதப் பெற்ற உரை. மேலும், நுண்மை, அறிவு நுட்பம் எனப் பல பொருள் உண்டு.
* யாப்பு என்றால் செய்யுள். மேலும், உறுதி, சூழ்ச்சி, கட்டு, அன்பு எனப் பல பொருள் உண்டு.
இந்த சூத்திர நிலையிலே 6− வகை உண்டு. அவை :
1. பிண்ட சூத்திரம்
2. தொகைச் சூத்திரம்
3. வகைச் சூத்திரம்
4. குறிச் சூத்திரம்
5. செய்கைச் சூத்திரம்
6. புறனடைச் சூத்திரம் என்பன.
மீண்டும் அடுத்த பதிவில், தொடரந்து காண்டிகைப் பற்றி பார்க்கலாம் !
Sivajansikannan@gmail.com
Thu. 4, Apl . 2024 at 6.11 am.
ReplyDelete*பாடல் :*
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை − சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவா தளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.
*இதனின் பொருள் :*
மரம் − மரமானது
பழுத்தால் − பழுக்குமானால்
வெளவாலை − வெளவால் பறவையை
வா − வருக
என்று − என
கூவி − கூச்சலிட்டு
இரந்து − வேண்டி
அழைப்பார் − கூப்பிடுபவர்கள்
யாவரும் − யாரும்
அங்கு − அம் மரத்தில்
இல்லை − கிடையாது
(அவை தாமே போய்ச்சேரும். அதுபோல)
கன்று − கன்றையுடைய
ஆ − பசுவானது
அமுதம் − பாலை
சுரந்து − சுரக்க விட்டு
தரல்போல் − தன் கன்றுக்கு தருதலைப் போல
கரவாது − தம்மிடத்திலுள்ளதை மறைக்காது.
அளிப்பரேல் − பிறருக்கு கொடுப்பாரேல்
உலகத்தவர் − உலகத்தில் உள்ளாரனை வரும்
உற்றார் − அவருக்கு உறவினராவர்.
*இப்பாடலின் கருத்து :*
*தம்மிடத்தில் உள்ளவற்றை மறைக்காமல் பிறருக்கு் கொடுப்பவர்கட்குப் பலரும் உறவினராவார்கள் என்பதே இப்பாடலின் கருத்து. (நல்வழி).*
மீண்டும் சந்திக்கலாம் !
Sivajansikannan@gmail.com
Thu. 4, Apl. 2024 at 6.33 am.
ReplyDelete*திருமந்திரம் :*
*பாடல் −4*
அகல்இடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்,
புகல் இடத்து என் றனைப் போதவிட் டானைப்
பகல் இடத்தும்இர வும் பணிந்து ஏத்தி
இகல்இடத்தே இருள் நீங்கி நின்றேனே.
*இப்பாடலின் கருத்து :*
*இறைவனை வழிபடின் அறியாமை நீங்கும் என்பதே இப்பாடலின் கருத்து.*
இங்கு ஆசிரியர், திருமூலர் தம் உடலை மறைவித்ததைக் குறிப்பிடுகிறார் .
அகலிடம் என்றால் அனைத்துலகம்.
வான் உலகத்துக்குக் காரணமானவன் இறைவன். எனவே, *அண்டத்து வித்து* என்றார்.
வித்து என்றால் விதை. (அதாவது மூலப்பொருள்.)
புகலிடம் என்றால் அடைக்கலமான இடம். அடைக்கலமான இடத்திலே என்னைச் செல்ல விட்டவன். அதாவது பொதிந்து வைத்த இடம் .
இகல் என்றால் வேறுபாடு. அதாவது இத்தகைய இயல்பு வாய்ந்த இறைவனைப் பகலிலும், இரவிலும் வணங்கித் துதித்து மாறுபாடுடைய(வேறுபாடு) இவ்வுலகில், நான் *அறியாமை என்னும் இருள் நீங்கப் பெற்றேன் என்பதே இப்பாடலின் விளக்கம் + பொருள்.*
மீண்டும் சந்திக்கலாம் !
Sivajansikannan@gmail.com
Fri. 5, Apl. 2024 at 8.47 pm.
ReplyDelete*திருமந்திரம் :*
*பாடல் − 5*
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே !
*இப்பாடலின் கருத்து, தனக்கு ஓர் உவமை இல்லாத சிவபெருமான் சகஸ்ரதளத்தில் விளங்குகிறான் என்பதே.*
*அதாவது இதனின் விளக்கம் :
* சிவபெருமானைப் போன்ற ஒரு கடவுளை எங்கு தேடினும் காண இயலாது. ஏனெனில், அச் சிவப் பரம் பொருளை ஒத்த இறைப் பண்புடையவர் வேறு எவருமே இல்லை. அப்பெருமான் அண்டத்தைக் கடந்து பொன்போல, அதாவது, நெருப்புச் சுடர்போல செந்நிறமாக பொன்ஒளி போன்று ஒளிர்ந்து (பிரகாசித்து) விளங்குபவன்.
அதாவது, சிவனது சடைமுடி(கோலத் திருமுடி) அவ்வாறு செந்நிறம்போல் ஒளிர்கின்றதாம்.
*இதன் முழுமையான பொருள்... இறைவன் மேல்நோக்கிய சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவன் என்று பொருள்.*
தவனம் என்றால் கற்பூரம் (கற்பூரச் சுடர்போல்)
புவனம் என்றாம் உலகம்.
மீண்டும் சந்திக்கலாம் !
Sivajansikannan@gmail.com
Sat. 6, Apl. 2024 at 4.43 am.
ReplyDelete*உண்மை விளக்கம் :*
இன்று நாம் அறிந்து கொள்ளப் போவது "உண்மை விளக்கம்" பற்றி.
*உண்மை என்பது வடமொழியில் தத்துவம் என்று பொருள். தத்துவம் என்பதற்கு பொருள்களது உண்மையை உணர்விப்பவை என்பதாகும்.* எனவே, முப்பொருள் உண்மையை நன்கு விளக்குவதால், *உண்மை விளக்கம்* எனப்படும்.
*உண்மை விளக்கம் என தலைப்பைப் பார்த்ததும் ஓ.... இதுவா.. என ஒரு சலிப்பு தோன்றுகிறது அல்லவா ? ஆனால், இதிலிருந்து ஒரு விளக்கம் கேட்டால், முழுமையாக நம்மால் கூடுமானவரை கூறத் தெரியாது. பதிலை கூறினால்...ஆமாம்... ஆமாம் ஆனால், உடனே கூற வரவில்லை என்போம். இது தானே உண்மை.
* காரணம், தெளிவின்றி நாம் படித்தது தான் காரணம். எனவே, ஒன்றை, திரும்ப திரும்ப நாம் படிக்கும்போது, நம்மால் நன்கு(அடியேனையும் சேர்த்தே) அறிய முடியும் என்கிற நோக்கத்திலேயே, "உண்மை விளக்கம்" என்ற நூலைப் பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
*உண்மை விளக்கம் இந்நூலை அருளிச் செய்தவர் பற்றின குறிப்பு :*
* சாத்திரங்கள் 14−ல் ஆறாவதாக வைத்து எண்ணப்படுகிறது *உண்மை விளக்கம்* எனும் நூல்.
* உண்மை விளக்கத்தை, *திருவதிகை மனவாசகம் கடந்தார்* என்பவர் அருளிச் செய்தார்.
* திருவதிகை (திரு + அதிகை) என்னும் திருத்தலத்தில், மனவாசகம் கடந்தார் அவதரித்தார்.
* இவரது காலம் 1225 − 1275.
* சிவஞானபோத ஆசிரியரான மெய்கண்ட தேவரின், 49− மாணவர்களில் ஒருவரானவர் மனவாசகம் கடந்தார்.
* இந்நூல் வினா − விடை வடிவில் அமைந்துள்ளது.
* இந்நூல் 53− வெண்பா பாடல்களால் ஆனது. (கடவுள் வாழ்த்துப் பாடலும், கடைசியில் நூலாசிரியரின் முறை கூறும் பாடலும் நீங்கலாக)
* இந்நூல் அமைந்துள்ள விதம்... *சைவ சித்தாந்த உண்மைகளை, மிக எளிய முறையில் கூறுகிறது.*
* அதாவது, மாணவர் ஒருவர் கேள்வி கேட்பது போலவும், ஆசிரியர் அதற்கு பதில் கூறுவது போலவும் அமைந்துள்ளது.
* இந்நூல், 36−தத்துவங்கள், பதி, பசு, பாசம், சிவனது திருநடனம், திருவைந்தெழுத்து, போன்ற பல செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.
* மனவாசகம் கடந்தான் என்று, திருவாசகத்தில், திருப்பெருந்துறையில் அருளிய உயிருண்ணிப்பத்து பதிகத்தில், 3−வது பாடலில்....
* எனை நான் என்பது அறியேன்
பகலிரவு ஆவதும் அறியேன்
மனவாசகம் கடந்தான் எனை மத்தோன் மத்தன் ஆக்கிச்
சினமால் விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் எனைச் செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே.
இதனின் பொருள் :
மத்து உன் மத்தனாக்கி என்றால் என்னைப் பெரும் பித்தனாக்கி, அதாவது களிப்பு மிகுந்த பக்தனாக்கி
சினமால் என்றால் வலிமையுடைய மால்
பனவன் என்றால் பிராமணன் (பார்ப்பனன்)
படிறு என்றால் வஞ்சனை மேலும், கொடுமை, பொய், திருட்டு, பாவம் என பல பொருள் உண்டு.
இதன் கருத்து, என்னைப் பெரும் பித்தனாக்கி எனக்குச் செய்த வஞ்சனையை அறியேன். என்னை, நான் என்று உணர்வதையும் அறியேன். இரவும், பகலும் கழிவதையும் அறியேன்.. என சிவபெருமானிடத்திலேயே தான் லயித்திருப்பதை உணர்த்துகிறார்.
* சைவ சித்தாந்தம் என்றும் அழியா உண்மைப் பொருள்களாக 3−பொருள் களைக் கொள்ளுகிறது. அப்பொருள்கள் , மேற் பொருள், இடைப் பொருள், கீழ்ப் பொருள்.
* மேற் பொருளாய் இருப்பது *இறை.* ( பதி )
* இடைப் பொருளாய் இருப்பவை *உயிர்.* ( பசு )
* தளை. கீழ்ப் பொருளாய் இருப்பவை உயிர்களைப் பற்றி உள்ள *மலங்கள்.* ( பாசம் ).
தொடர்ந்து அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்..!
மீண்டும் சந்திக்கலாம்.
Sivajansikannan@gmail.com.
Sat. 6, Apl. 2024 at 10.57 am.
ReplyDelete*திருவருட்பயன் :*
*உமாபதி தேவநாயனாரால் திருவருட்பயன் அருளிச் செய்யப்பட்டது.*
* சாத்திரங்கள் பதினான்கினுள் எட்டாவதாக அமைந்துள்ளது. (சித்தாந்த அட்டகம்)
* திருவருட்பயன் 100−குறட்பாக்களைக் கொண்டது.
* கணபதி வணக்கக் குறளையும் சேர்க்க 101− குறட்பா ஆகும்.
*இதன் அமைப்பு : 10− அதிகாரங்கள் , அதிகாரத்துக்குப் 10− பாக்கள் என்கிற விதத்தில் அமைந்துள்ளது.*
* திருக்குறள் போலவே அமைந்திருப்பதால், இதனை *வீட்டுநெறிப் பால்* என்று குறிப்பிடுவர்.
*திருக்குறள்... அறம், பொருள், இன்பம் என முப்பால் உண்மைகளைக் கூற, நான்காவதான வீடுபேறு குறித்துக் கூற, இந்நூலைப் பொருத்துவது உண்டு.*
* உமாபதி சிவம், சிவப்பிரகாசை நூலை, சைவ உலகம் விளங்கிக் கொள்ளுவதற்குத் துணையாக மற்றொரு நூலான, திருவருட்பயனையும் அருளிச் செய்தார்.
*சிவப்பிரகாச நூலானது, சிவாகமம் ஆகிய கடலை கடத்தற்கு உதவும் "மரக்கலம்" என்றால்... திருவருட்பயன் அம் மரக்கலத்தைச் செலுத்தும் "மாலுமி" போலானது.*
* எனவே, மாலுமி இல்லாத மரக்கலம் திசைகெட்டுத் தடுமாறும்.
* அதுபோல, முன்னே திருவருட் பயனைப் பயிலாமல், அதன் உதவியின்றிச் சிவப்பிரகாசத்தைக கற்க புகுந்தால், அக்கல்வி தெளிவைத் தராது; முழுமைப் பெறாது.
திருவருட்பயன் : காப்புச் செய்யுள்
*கணபதி வணக்கம்.*
நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம்
கற்கும் சரக்கன்று காண்.
* குஞ்சரம் என்றால் யானை என்று பொருள். "எனவே குஞ்சரக் கன்று என்றால், யானை முகத்தினை உடைய பிள்ளையாரை *யானைக் கன்று* என நமது ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
* நண்ணில் என்றால் பொருந்துதல். அதாவது புகலிடமாக அடைதல் அல்லது சேர்தல்.
* கலை ஞானம் என்பது மெய்ந் நூலறிவு.
* இந் நூல்கள் 2−வகைப்படும். ,அவை : உலக நூல்கள், மெய்ந் நூல்கள் என்பன.
* உலகியல் பற்றி எழுந்தவை "உலக நூல்கள்."
* வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள்
* கற்கும் என்றால், வருந்திக் கற்று பெறும்
* சரக்கு என்றால் பொருள்.
* அன்று என்றால் ஆகாது. (அது எளிதில் வரும்)
* காண் என்றால், மனமே இதனை உணர்வாயாக.
*இக் கணபதி வணக்கத்தின் கருத்து : யானைக் கன்று போல் விளங்கும் விநாயகரை வழிபட்டால், ஞான நூல்களை வருந்திக் கற்க வேண்டிய நிலை இல்லாது எளிதில் வரும் என்பதே இப்பாடலின் கருத்து.*
*மீண்டும் சந்திக்கலாமே !*
Sivajansikannan@gmail.com