jaga flash news

Saturday 18 May 2024

தாரா பலன் என்றால் என்ன?



தாரா பலன் என்றால் என்ன? மற்றும் தாரா பலன் அட்டவணை


 தாரா பலன் என்றால் என்ன? இந்த தாரா பலன் எதற்காக பார்க்கப்படுகிறது. மற்றும் தாரா பலன் அட்டவணை போன்றவற்றை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

தாரா என்றால் என்ன?
தாரை, தாரா போன்ற சொற்கள் யாவும் சந்திரனை பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நட்சத்திரத்தை குறிக்கக்கூடியதாகும். சந்திரன் கோசார ரீதியாக தன்னுடைய பலாபலன்களை தாரை மூலமாக அவர் வழங்கிக் கொண்டே இருக்கின்றார்.


பொதுவாக ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றாரோ அந்த நட்சத்திரமே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஜென்ம நட்சத்திரம் என்பது எப்பொழுதும் மாறக்கூடியது அல்ல. இப்பிறவியில் ஜென்ம நட்சத்திரம் என்பது ஒன்றேயாகும்.



ஆனால், மனோகாரகனான சந்திரன் தினம் தினம் வெவ்வேறு  நட்சத்திரங்களில் பயணம் செய்துகொண்டே இருப்பார்.

நமது வாழ்நாளில் முக்கியமான செயல்களை மேற்கொள்ளும்போது அந்த நாளில் அவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு சந்திரன் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய நட்சத்திரம் நட்பா? சாதகமா? சேமமா? அல்லது வதையா? விபத்தா? என்பதை அறிந்து செயல்படுவதே தாரா பலன் ஆகும்.


ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது வருகின்ற 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ள எண்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது 9க்கு மேல் வந்தால் 9ஆல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.



தாரா பலன் அட்டவணை:தாரா பலன் அட்டவணை
தாரைகள் பெயர்கள் தாரா பலன்
1. ஜென்ம தாரை மனக்குழப்பம் மற்றும் பதற்றத்தை தரும்.
2. சம்பத்து தாரை பொருள்வரவு, காரிய சித்தி, சுபகாரியம் தொடர்பான செயல்களை மேற்கொள்ளலாம்.
3. விபத்து தாரை கோபத்தால் காரிய இழப்பு, வாய்ப்புகள் தவறுதல் போன்றவை உண்டாகும்.
4. சேமத் தாரை ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான நாள்
5. பிரத்தயக்கு தாரை சிக்கல்கள், கவனச்சிதறல், வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும்.
6. சாதக தாரை எண்ணம் ஈடேறுதல், முயற்சிகள் பலிதமாகுதல் மற்றும் செயல்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
7. வதை தாரை உடலில் சோர்வு, மனதில் இனம் புரியாத கவலைகள், பணிகளில் நாட்டமில்லாமல் இருப்பது போன்றவை உண்டாகும்.
8. மைத்திர தாரை தெய்வகாரியம் செய்தல், புதிய முயற்சி, புதிய செயல்கள் செய்யலாம்.
9. பரம மைத்திர தாரை அனைத்து சுபசெயல்களுக்கும்  உகந்தது.
 


No comments:

Post a Comment