பித்தப்பை கல்.. இதுதான் பெரிய தவறு! இந்த அறிகுறிகள் இருக்கா? பித்தப்பையில் கற்கள் கரைய பெஸ்ட் டிப்ஸ்
பித்தப்பையில் கல் இருக்கிறதா? இந்த கல் எதனால் ஏற்படுகிறது? இதற்கு இயற்கையான முறையில் தீர்வு இருக்கிறதா?
பித்தப்பையில் கற்கள் உண்டாக நிறைய காரணங்கள் உள்ளன.. அதாவது, ஈரலுக்கு கீழே அமைந்திருக்கிறது இந்த பித்தப்பை.. இந்த ஈரலில் எதேனும் தொந்தரவு இருந்தால் கற்கள் வரலாம்.
Super 6 Tips to avoid Gallbladder Stones and What are the Fantastic foods to eat to prevent form Gallstones
சத்துக்கள் குறைவான உணவே, கல் உண்டாக அடிப்படை காரணமாகும்.. குறிப்பாக, மாவுச்சத்து நிறைந்த உணவுகளிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரையாகவே உடலில் மாறும்... இந்த கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பையில் கல் வரும். அதிக கொழுப்பான உணவை சாப்பிடுவதும் கற்கள் தோன்ற காரணமாக இருக்கலாம்..
போதுமான உடலுழைப்பு இல்லாதவர்களுக்கு பித்தப்பையில் கல் வரலாம்.. ஆரோக்கியமற்ற உடல்நிலையும் இதற்கு இன்னொரு காரணமாகும். அனைத்தையும்விட, உடல் எடை அதிகமாக இருப்பதும் முக்கியமான காரணம்..
பித்தநீர்: உடலில் உஷ்ணம் அதிகமானாலும் கற்கள் தோன்றலாம்.. மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கும் பித்தப்பையில் கல் வரலாம்.. அதேசமயம், சரியான நேரத்தில் சாப்பிடாமல் போனாலும், பித்தநீர் பித்த கற்களாக மாறலாம். அதேபோல, உடலில் பித்தம் அதிகமாகிவிட்டாலும், பித்தப்பையில் கற்கள் வரலாம்.. சுருக்கமாக சொல்லப்போனால், ஜீரணமாவதற்கு பித்த நீரின் அளவு அதிகமாக சுரந்துவிடும்போது, இந்த கற்கள் வருகிறதாம்..
பித்தப்பையில் கல் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா? ஆரம்பக்கட்டத்தில் இந்த அறிகுறி நமக்கு தெரியாது.. பித்தப்பை கல் பெரிதாகும்போதுதான், வயிறு வலியை உணர முடியும்.. அல்லது முதுகு கீழ்ப்பகுதியிலும் வலி தோன்றலாம்.. அதுவும் நீரிழிவு நோயாளிகளுக்கு, பித்தப்பை கற்கள் தீவிரமாகிவிட்டால், மஞ்சள் காமாலையாகவும் மாறிவிடும்.. அல்லது நீரிழிவு நோய் வரக்கூடும்.
அறிகுறிகள்: இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல முறையான உணவுப்பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்..
சரியான நேரத்துக்கு, சரியான சத்துக்கள் கொண்ட உணவை சாப்பிட வேண்டும். எண்ணெய் அதிகம் சேர்க்காத உணவுகளை தவிர்க்க வேண்டும்.. கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.. சிவப்பு இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.. காஃபின் அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உப்பு குறைவாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
மன உளைச்சல்: ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யாமல், உடலுழைப்பு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. மன அழுத்தம், மன உளைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்.. நார்ச்சத்து நிறைந்த நிறைந்த காய்கறிகளும், சரியான அளவு தூக்கமும் கட்டாயம் வேண்டும்.
No comments:
Post a Comment