நமக்கு வேதத்தில் வஸ்திரத்தை குறித்து மிகவும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது. கரையில்லாத வஸ்திரத்தை அணியக்கூடாது. கரையுள்ள வஸ்திரத்தை மட்டுமே அணிய வேண்டும். ஸ்நானம் செய்து முடித்தவுடன் நாம் கட்டியிருக்கும் வஸ்திரத்தை கீழே போட்ட பிறகு அதை கால்களால் எடுக்கவோ மிதிக்கவோ கூடாது. ஏனென்றால் தேவதைகள் அனைவரும் வஸ்திரத்தில் குடியிருப்பார்கள். வேதத்தில் வஸ்திரத்தை செய்யும் முறை, வஸ்திரத்தில் தேவதைகள் எப்படி குடி புகுவார்கள் என்பதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான் வஸ்திரதம் மிகவும் மகத்தானது.
கரையுள்ள வஸ்திரத்தை யாருக்கேனும் அளித்தால் அவர்கள் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதற்கு சமம். அதே போல் யார் கொடுத்தாரோ அவரும் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று ஸங்கல்பம் ஆகும். இதனால் தான் வஸ்திரத்தை தரும் பொழுது கரையில்லா வஸ்திரத்தை தரமாட்டார்கள். கரையுள்ளவையே தருவார்கள்.
"சர்வம் சிவமயம் ஜகத்"(நெசவு)துணி நெய்யும் நெசவுக் கலையின் மூலமாகவும்;நெசவாளிகள் மூலமாகவும் நாம் பல தத்துவ விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.ஆணிலும் பெண்மை உண்டு;
பெண்ணிலும் ஆண்மை உண்டு.முன்பே அதனை கூறியது அறிவியல் அல்ல.முன்பே ஆன்மீகம் கூறிவிட்டது.(அர்த்த நாரீஸ்வரர் வடிவம் அதுதான்)வேட்டியோ புடவையோ;அவை இரண்டுக்குமே குறுக்கு நெடுக்கில்;குட்டையான குறுக்கிழையும் உண்டு.நீண்ட நெடுக்கிழையும் உண்டு.இதனை நேரிழை என்பர்.நேரிழை என்றால் பெண் என்று பொருள்.(நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்;சீச்சீ இவையும் சிலவோ விளையாடி...
மாணிக்க வாசகர்.திருவெம்பாவையில்)
ஆடையில் ஓடும் நீண்ட நூலிழை பெண்.அதில் குறுக்கே ஓடும் குட்டை நூலிழை ஆண்.(உலகியல் வாழ்வில் பெண்ணே அதிக பங்கு வகிப்பவள் என்பதை இது காட்டுகிறது.
அதனால்தான் இல்லற வாழ்வில் அனைத்து செயல்களிலும் பெண்ணுக்கே முன்னுரிமை தருகிறார்கள்.("Ladies first"என்ற ஸ்லோகனை ஆங்கிலேயன் நம்மை காப்பி அடித்து பின்னால் சொன்னான்.
முதலில் அதை நாம்தான் சொன்னோம்)அப்படியானால்.ஆணையும் பெண்ணையும் சேர்த்து நெசவு நெய்ததுதான் இல்லற வாழ்க்கையா?ஆமாம் அதுதான் உண்மை!.அதை கூறுவதே இந்த வேஷ்டி புடவை முதலான ஆடைகள்.அதனால்தான் விழாக்களில் ஒருவருக்கொருவர் வேட்டி வைத்து தருவது.புடவை வைத்து தருவது.குறைந்த பட்சம் ஓர் ரவிக்கை பிட்டாவது வைத்து தருவது எல்லாம் வந்தது)
ஆம் உலகில் நெருக்கமாய் பின்னிப்பிணைந்த முதல் இண்டர் நெட் வலைத்தள சேவையே இந்த புடவை வேட்டிதான்.அதனால்தான் பூர்வ அபர கிரியைகள் எல்லாவற்றிலுமே இந்த துணி என்ற பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் மிக அதிகமாய் உள்ளது.தானங்களில் வஸ்த்ர தானமும் இதனால்தான் வந்தது.
No comments:
Post a Comment