Vastu For Fridge : வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் ஃபிரிட்ஜை வைக்கும் திசை மிகவும் முக்கியம். அது உங்கள் வீட்டு பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட திசை உண்டு. அதேபோல, ஃபிரிட்ஜை வைக்கும் திசையும், அதன் கதவு திறக்கும் திசையும் வீட்டுக்கு பாசிட்டிவ் எனர்ஜியையும், குடும்பத்தினருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும். பெரும்பாலும் ஃபிட்ஜை கிச்சனில் தான் வைப்பார்கள். அங்கு சரியான திசையில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம். ஒருவேளை சரியான திசையில் வைக்காவிட்டால் பணக்கஷ்டம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதனால் ஃப்ரிட்ஜ் வைக்க சரியான திசை என்ன என்பதை பார்க்கலாம்.
ஃபிரிட்ஜ் ஒரு எலக்ட்ரானிக் சாதனம் என்பதால், அதை அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு (South-East / Agneya) திசையில் வைப்பது மிகச் சிறந்தது. இது வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றி, பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.
ஃபிரிட்ஜின் கதவைத் திறக்கும்போது, அது கிழக்கு (East) அல்லது வடக்கு (North) திசையை நோக்கி இருக்க வேண்டும். இப்படி செய்வதால், வீட்டில் லட்சுமி தேவியின் அருள் பெருகி, பண வரவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மேம்படும்
ஒருவேளை தென்கிழக்கு திசையில் இடம் இல்லை என்றால், மேற்கு (West), வடமேற்கு (North-West) அல்லது தெற்கு (South) திசையிலும் ஃபிரிட்ஜை வைக்கலாம். ஆனால், ஃபிரிட்ஜை சுவரோடு முழுமையாக ஒட்டி வைக்காமல், குறைந்தபட்சம் 2 இன்ச் இடைவெளி விடுவது நல்லது.
வடகிழக்கு (North-East) மற்றும் வடக்கு (North) திசைகளில் ஃபிரிட்ஜை வைக்கவே கூடாது. வடகிழக்கு என்பது 'ஜல மூலை' (Water Element) மற்றும் தெய்வீகமான திசை. அங்கு வெப்பத்தை உருவாக்கும் இயந்திரங்களை வைத்தால், வீட்டில் பண நஷ்டம் ஏற்படும், குடும்பத்தினருக்கு நோய்கள் வரும்.
ஃபிரிட்ஜில் கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை (Stale Food) வைத்திருக்க வேண்டாம். ஃபிரிட்ஜை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால், வாஸ்து தோஷங்கள் (Vastu Dosh) நீங்கும். மேலும், கிச்சனில் இருக்கும் கேஸ் ஸ்டவ்வுக்கு (Stove) நேர் எதிராக ஃபிரிட்ஜை வைக்கக்கூடாது.
No comments:
Post a Comment