Motel Vs Hotel: மோட்டல், ஓட்டல்- இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதில் குறைந்த கட்டணம்?
Motel, Hotel ஆகிய இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஹோட்டல் என்றால் சாப்பிடும் இடம் என்று சொல்லலாம். ஊரில் இருந்து தூரப் பகுதிகளுக்குச் செல்லும் போது தங்கும் இடமாகவும் இது அறியப்படுகிறது.
ஆனால் மோட்டல் என்றால் என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அந்த சொல் ஏன் வந்தது, மோட்டலுக்கும் ஓட்டலுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.
motel vs hotel
மோட்டல் என்ற சொல் மோட்டரிஸ்ட்ஸ் ஹோட்டல் என்ற ஆங்கில சொல்லாகும். மோட்டார் + ஹோட்டல்= மோட்டல் என்பதாகும். இது முக்கியமாக சாலை பயணிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்டதாகும்.
இந்த மோட்டல்கள் நெடுஞ்சாலைகளின் ஓரமாகவும், நகரங்களுக்கு வெளியேயும் அமைக்கப்படுகின்றன. இவை முதல்முறையாக அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
இங்கு வருவோர் வாகனங்களை அறைகளுக்கு நேராக நிறுத்திவிட்டு தங்கலாம். மேலும் குறைந்த செலவில் தங்கும் வசதியும் உள்ளது. ஹோட்டல், மோட்டல் ஆகிய இரண்டும் தங்கும் வசதிகளை வழங்கினாலும் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
ஹோட்டல்கள் பொதுவாக பல மாடிகளை கொண்டது. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதிகள் கிடைக்கும். இங்கு எல்லா விதமான வசதிகளும் இருக்கும். உணவகங்கள், ஜிம், ஸ்விம்மிங் பூல், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்டவை கிடைக்கும். அது போல் அறைகளும் காசுக்கேற்ற வகையில் இருக்கும்.
ஆனால் மோட்டல்கள் நிறைய மாடிகளில் இருக்காது. இங்கு வருவோர் தங்கள் அறைகளுக்கு அருகே நிறுத்திவிட்டு செல்லலாம். அறைகளும் குறைந்த வாடகையில் கிடைக்கும். இங்கு ஸ்விம்மிங் பூல், ஜிம், மசாஜ் உள்ளிட்ட வசதிகள் இருக்காது. இரவில் தங்கிவிட்டு காலையில் காலி செய்துவிட வேண்டும்.
வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு
ஓட்டல்கள் சகல வசதிகளுடன் கூடிய நீண்ட கால தங்கும் இடமாகும். ஆனால் மோட்டல்கள் இரவில் ஓய்வெடுத்துவிட்டு பகல் பொழுதில் பயணம் செய்யும் குறுகிய தங்கும் இடமாகும். மோட்டல்களில் கட்டில், கழிப்பிடம், டிவி உள்ளிட்டவை மட்டும் இருக்கும். லிப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகள் இருக்காது.
தமிழகத்தில் எத்தனை மோட்டல்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரங்கள் தெரியவில்லை. ஆனால் ராணிப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, தொப்பூர் ஆகிய பகுதிகளில் Highway Motel, Motel Tamil nadu ஆகிய பெயர்களில் உள்ளன.
இவை மட்டுமல்லாது என்எச் 44, 45, 48 போன்ற வழித்தடங்களிலும் காணப்படும். இவை சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படுகிறது. இங்கு வாடகை தோராயமாக 100 முதல் 300 ரூபாய் வரை இருக்கும். ஒரு சில இடங்களில் ரூ 800 முதல் ரூ 1500 -க்கும், ஏசி வசதி கொண்ட அறைகள் ஒரு நாள் இரவு தங்க ரூ 1500 முதல் ரூ 2500 வரையும் கிடைக்கின்றன. அது போல் இரவு முழுவதும் தங்காமல் சில மணி நேரங்கள் மட்டும் ஓய்வெடுக்கும் குறைந்த கட்டண மோட்டல்களும் உள்ளன.
No comments:
Post a Comment