கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?
தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு
நடைபெற்று வருகிறது.கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும்
பதினாறு உபச்சாரங்களில் தீப
ஆராதனையும் ஒன்று.கோவிலில் காட்டப்படும் தீபம்
ஞானத்தின் அறிகுறியாகும்.
தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால்,ஒரு திரை போடப்படுகின்றது.தீபத்தை காட்டும்பொழுது திரை விலக்கப்படுகிறது.இதன் தத்துவம் என்னவென்றால்,நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து.நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.தெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது,முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும்,இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும்,மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும்.
பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.
நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.
ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.
அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலத்தில் மின்சார வசதி இல்லாததால் இறைவனின் முகம் தெளிவாக தெரிவதற்கு தீபம் காட்டபடுவதாக சிலரின் கருத்தாக இருக்கும்.எது எப்படி இருந்தாலும் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை தீபமாக காட்டுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கிருப்பது என்பதே உண்மை.

No comments:
Post a Comment