தாரபலத்தைப் பற்றி ஆய்வு செய்யலாம்.
ஜனனப் பத்திரம் என்பது, நாம் பிறக்கும் போது, எந்தெந்த திசைகளில், எந்த இராசிமண்டலத்தில், எந்த நட்சத்திரச் சாரத்தில் கிரகங்கள் இருந்தன என்பதை அறியும், காலக்கண்ணாடியாகும். சூரியனின் இராசி இருப்பிலிருந்து, பிறப்பு நேரம் வரை உள்ளதொலைவே இலக்கினமாகப் பாவிப்பதால், இது உயிர் என அழைக்கப்படுகிறது. சந்திரன்பெறும் நட்சத்திரச் சாரமே, உடலின் இயக்கத் தொடர்புடன் இணைந்த, ஜென்மநட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இந்த ஜென்ம நட்சத்திரத்தை மட்டும் அடிபடையாகக்கொண்டு, இன்றைய கோட்சாரத்தில் சந்திரன் பெறும் நட்சத்திரச் சாரத்தைக் கொண்டும்,ஒரு ஆய்வை நம்பெரியவர்கள் செய்துள்ளனர்.
முதலில் நம் ஜென்மநட்சத்திரம் எதுவென்று அறிந்துகொள்ளவேண்டும். அதேபோல் இன்றுசந்திரன் கோட்சாரத்தில் எந்த நட்சத்திரத்தில் உள்ளதுஎன்பதையும்தெரிந்துகொள்ளவேண்டும். இன்றைய ஜென்மநட்சத்திரம் முதல் கோட்சாரசந்திரன் நிற்கும் நட்சத்திரம் வரை எண்ணி வர, எத்தனை நட்சத்திரம் வருகிறதோ,அதுவே பட்டியலில் கொடுத்துள்ள தாரபல நட்சத்திரமாகும்.
இன்றைய நட்சத்திரம்.
|
ஜென்மசாரம்
|
கேதுநட்சத்திரம்
|
சுக்கிரன்நட்சத்திரம்
|
சூரியன்நட்சத்திரம்
|
சந்திரன்நட்சத்திரம்
|
செவ்வாய்நட்சத்திரம்
|
இராகுநட்சத்திரம்
|
குருநட்சத்திரம்
|
சனிநட்சத்திரம்
|
புதன்நட்சத்தி
| |||||
கேது
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
| |||||
சுக்கிரன்
|
9
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
| |||||
சூரியன்
|
8
|
9
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
| |||||
சந்திரன்
|
7
|
8
|
9
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
| |||||
செவ்வாய்
|
6
|
7
|
8
|
9
|
1
|
2
|
3
|
4
|
5
| |||||
இராகு
|
5
|
6
|
7
|
8
|
9
|
1
|
2
|
3
|
4
| |||||
குரு
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
1
|
2
|
3
| |||||
சனி
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
1
|
2
| |||||
புதன்
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
1
| |||||
இப்போது, உதாரணமாக, ஜென்மநட்சத்திரம் உத்ராடம் என்று வைத்துக் கொள்வோம்.இந்த உத்ராடம் சூரியனின் நட்சத்திரமாகும். இன்றைய கோட்சார சந்திரன் நிற்கும் நட்சத்திரம், குருவின் நட்சத்திரமான விசாகம் என்றால், இப்போது, கொடுத்துள்ளஅட்டவணையில் இடமிருந்து வலமாக உள்ள பட்டியலில் சூரியன் என்று குறித்துள்ளகட்டத்திலிருந்து, மேலிருந்து கீழாக உள்ள கிரகவரிசையில் குரு எனும் கிரகம் இருக்கும்இடம்வரை விரலை நகர்த்தி வர, எண் “6” என்று குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த ஆறு என்றஎண்ணுக்கு, தாரபலப் பட்டியலைப் பார்க்க, சாதகதாரை என வந்திருக்கும்.
1. ஜென்மத்தாரை _ ஒரே நட்சத்திர சாரம். நன்மை தராது.
2. சம்பத்துத்தாரை _ பொருள் வரவு.
3. விபத்து தாரை _ எதிர்பாராதக் கெட்ட நிகழ்வுகள்
4. ஷேமதாரை _ நலமானது
5. பிரத்யக்தாரை _ மறைவு, பிரிவு
6. சாதகதாரை _ தான் விரும்பிய படி
7. வதை தாரை _ தான் வருந்தும் படியாக,
8. மைத்ர தாரை _ உயிரானவன் போல்,
9. அதி மைத்ர தாரை _ தனக்கு உயிரைத் தருபவனைப் போல்,
தன் ஜென்ம நட்சத்திரம் எந்த கிரகச்சாரம் பெற்றுள்ளதோ, அந்த கிரகத்தின் மற்ற இருநட்சத்திரங்களும், ஜென்ம நட்சத்திரத்தின் மூன்றாவது, ஐந்தாவது, ஏழாவதுநட்சத்திரங்களின் சார நாதன்களின் மற்ற நட்சத்திரங்களும், ஜாதகனுக்குப் பாதிப்பைத்தருகிறது. ஜென்ம நட்சத்திரத்திற்கு இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது நட்சத்திரத்தின்அதிபதிகளின் மற்ற இரு நட்சத்திரங்களும், ஜாதகனுக்கு நன்மையைத் தருகின்றன.
இப்போது உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட சூரியனின் நட்சத்திரமான உத்ராடம்ஜாதகனின் ஜென்ம நட்சத்திரமாகும். சூரியனோட சாரம் பெற்ற மற்ற இருநட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரத்தில் சந்திரன் கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் போது,ஜாதகனுக்கு அலைச்சலைத் தருகிறது. அதேபோல், ஜென்மநட்சத்திரத்தில் இருந்துமூன்றாவது நட்சத்திரமான, செவ்வாயின் நட்சத்திரங்களான, மி.சீரிடம், சித்திரை,அவிட்டம் முதலிய நட்சத்திரங்களில் சந்திரன் கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் போது,ஜாதகனுக்கு எதிர்பாராதக் கெட்ட நிகழ்வுகளைத் தரும். அதேபோல்,ஜென்மநட்சத்திரத்திலிருந்து ஐந்தாவது நட்சத்திரமான, குருவின் நட்சத்திரங்கள் மூன்றிலும்சந்திரன் கோட்சாத்தில் சஞ்சரிக்கும் போது, மறைவு, அல்லது பிரிவைத் தரும். மேலும்,ஏழாம் நட்சத்திரமான புதனின் நட்சத்திரங்கள் மூன்றிலும், கோட்சாரத்தில் சந்திரன்சஞ்சரிக்கும்போதும், ஜாதகன் வருந்தும்படியான நிகழ்வுகள் ஏற்படும்.
இதேபொல், ஜென்மநட்சத்திரத்திற்கு இரண்டாம், நான்காம்,,ஆறாம், எட்டு, ஒன்பதாம்நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகனுக்கு நன்மையே ஏற்படுகிறது.ஆனால், இவையெல்லாம் பொதுப்பலன்களே.
நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் பெற்றுள்ள வலுவைப் பொறுத்தே, சாரங்களும் வலுஉள்ளதாக அறியப்படும். எந்த பாவகத்தில் கிரகம் அமர்ந்துள்ளதோ, அந்த பாவகமும்,அதன் அதிபதியும் இலக்கினாதிபதிக்கு என்ன உறவாக உள்ளாரோ என்பதைப் பொறுத்தே,அக்கிரகம் நன்மையோ, தீமையோ செய்யும். கிரகங்களுக்கும், பாவகங்களுக்கும் உண்டானசுபாவகங்களைக் கொண்டே கிரகத்தின் பலத்தை நிர்ணயிக்கவேண்டும்.
No comments:
Post a Comment