பொதுவாக சாதகம் , பாதகம் என்ற இந்த இரு சொற்களின் பொருள் நேர் எதிரானவை, ஒரு விடயம் நமக்கும், நம்மை சார்ந்த அனைத்திற்கும் நன்மை, வளர்ச்சி, முன்னேற்றம் தரும் வகையில் இருந்தால் அது சாதகமான அமைப்பு என்றும், அதே விடயம் நமக்கும், நம்மை சார்ந்த அனைத்திற்கும் தீமை, தடை, பின்னடைவை தரும் வகையில் இருந்தால் அது பாதகமான அமைப்பு என்றும் கருதுகிறோம்.
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு எற்படும் கடன், நோய், எதிர்ப்பு போன்ற துன்பங்களை 6ம் பாவகம் குறிக்கிறது. கண்டம், விபத்து , மரணம் போன்ற துன்பங்களை 8ம் பாவகம் குறிக்கிறது. நஷ்டம், இழப்பு, மறைந்து வாழ்தல் போன்ற துன்பங்களை 12ம் பாவகம் குறிக்கிறது.
இந்த முன்று பாவகங்கள், இதன் அதிபதிகள், இதில் அமர்ந்த கிரகங்கள் , அதிபதிகளின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகங்கள் அதிபதிகளின் பார்வை போன்ற இன்னும் பல காரணிகள் மூலம் துன்பங்களை அனுபவிக்கும் நிலை உள்ளது.
ஆனால் இவர்களை எல்லாம் மிஞ்சும் அமைப்பில் வருபவர் ஒருவர் உண்டு என்றால் அவரே பாதகாதிபதி.
எந்த ஜாதகத்திலும் இலக்கினாதிபதியை விட பாதகாதிபதி வலு பெற்றால் சொல்ல வேண்டியாதே இல்லை, சொல்லான துயரத்தினை தருவார் அவருடைய திசா புக்தியில்,
6,8,12 ம் பாவக அதிபதிகள் கூட சில குறியீடுகள் மூலம் அவர்களின் தன்மையை முன்னேரே காட்டிவிடுவர், உதாரணத்திற்கு ஒருவருக்கு நோய் வருகிறது என்றால் அதன் வெளிப்பாடு சிறிது அளவேனும் தெரிந்துவிடும்,மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து தேவையான சிகி ச்சையை பெற்று கொள்கிறார், பின்னர் நோயின் தன்மையை பொருத்து குணமாக காலத்தை எடுத்து கொள்கிறது.
பாதகாதிபதியோ உடன் இருந்து குழி பறிப்பு, நண்பர்களும் எதிரியாவது, ,நம்பிக்கை துரோகம், எதிர்பாரா துன்பம், விழ்ச்சி என ஒரேயடியாக அதல பாதாளத்திற்கு கொண்டு சொல்லும் வேலையை திறம்பட செய்வதில் வல்லவராக இருப்பார்.
அதிலும் பாதகாதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம் பெற்றாலும், இலக்கின பாவிகள் தொடர்பு , 6,8,12 ம் பாவக அதிபதிகள் தொடர்பு பெற்று விட்டால் தன்னுடைய பணியை திறம்பட செய்வார்.
இந்த பாதகாதிபதியால் நன்மையே இல்லையா ?

பாதகாதிபதியால் ஏற்படும் துன்பம் குறைந்தாலே நன்மை தானே ! பொன், பொருளொடு வழிப்பறி திருடனிடம் அகப்பட்டவன் அவற்றை இழந்தாவது உயிரை கைப்பற்றி கொள்ள தானே கருதுவான்
இதற்கு பாதகாதிபதி நீசம், பகை, மறைவு, அல்லது இலக்கின சுபரின் சாரம் ஆகிய நிலைகளில் இ ருக்க வேண்டும்,
இவையெல்லாம் பாதகாதிபதியின் பொது தன்மை
பாதகாதிபதிகளை சர, ஸ்திர, உபய அடிப்படையில் பிரித்துள்ளனர் நம்முடைய முன்னோர்கள்
சர இலக்கினத்திற்கு 11ம் அதிபதி
ஸ்திர இலக்கினத்திற்கு 9 ம் அதிபதி
உபய இலக்கினத்திற்கு 7 ம் அதிபதி
மேஷம், கடகம், துலாம், மகரம் இலக்கினங்களு க்கு 11ம் பாவக காரகமான நண்பர்கள், மூத்த ச கோதரம், லாபம், வெற்றி மூலம் பாதகத்தை செய்வார்
ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இலக்கினங்களுக்கு 9ம் பாவக காரகமான தந்தை வழி, பயணம், பிறருக்கு உதவுதல் (தருமம் ) பொதுப்பணி மூலம் பாதகத்தை செய்வார்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இலக்கினங்களுக்கு 7ம் பாவக காரகமான மனைவி, தொழில் கூட்டாளீகள், வியாபாரம் மூலம் பாதகத்தை செய்வார்.
இதில் சர லக்கினங்களுக்கு 11ம் அதிபதி பகை கிரகமாக தான் வரும், எனவே பாதகம் சற்று வலிமையாக இருக்கும்.
ஸ்திர லக்கினங்களுக்கு 9ம் அதிபதி நண்பர்களாக தான் வரும், மேலும் திரிகோனாதிபதியாக இ ருப்பதால் பாதகம் சற்று குறைவாக இருக்கும்.
உபய லக்கினங்களுக்கு 7ம் அதிபதி பகை கிரகமாக இருப்பதால் பாதகம் மற்ற இரண்டு பிரிவுகளை (சர, ஸ்திர ) விட சற்று அதிகமாக , அதாவது வலிமையான பாதகமாக இருக்கும்.
இலக்கினம் - பாதகாதிபதி
மேஷம் - சனி
ரிசபம் - சனி
மிதுனம் - குரு
கடகம் - சுக்கிரன்
சிம்மம் - செவ்வாய்
கன்னி - குரு
துலாம் - சூரியன்
விருச்சிகம் - சந்திரன்
தனுசு - புதன்
மகரம் - செவ்வாய்
கும்பம் - சுக்கிரன்
மீனம் - புதன்
பன்னிரு இலக்கினங்களுக்கும் பாதகாதிபதிகள் எவ்வாறு, எந்த வகையில் பாதகத்தை தருவர் என்று இலக்கின ரீதியாக இனி வரும் பதிவுகளில் ஆராய்கிறேன்.

No comments:
Post a Comment