jaga flash news

Wednesday, 20 May 2015

அணைத்து ராகு கேது தோஷங்களையும் போக்கும் நாச்சியார் கோவில் கல் கருடர்

ஓம் கருட பகவானே போற்றி
அணைத்து ராகு கேது தோஷங்களையும் போக்கும் நாச்சியார் கோவில் கல் கருடர் ஒரு முறை கருடரை நேரில் சென்று வணங்கி வர அணைத்து ராகு கேது தோஷங்கள் நீங்கும்
எழு வகையான சர்பங்களை தன உடம்பில் வைத்து காரணத்தால் கருடரை நேரில் சென்று வணங்கினால் அணைத்து சர்ப்ப தோஷங்களும் நீங்கும்
திருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் வருடத்தில் இரு முறை நடைபெறுகின்றது,
மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.
நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் . முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.
.

No comments:

Post a Comment