jaga flash news

Thursday 2 July 2015

கடவுள்??!!!

கடவுள்??!!!
---------------------------
பிரபஞ்சம் துவங்கிய காலம்தொட்டு இன்றுவரை உள்ள தீர்கமான விடை இல்லா கேள்வி, "கடவுள் உள்ளார? 
இல்லை என்றால் படைப்புகள் எவ்வாறு நிகழ்ந்தன?
இருக்கிறார் என்றால், ஏன் அவரை நம்மால் காண இயலவில்லை?" 
முதலில் கடவுள் என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. பல அறிஞர்கள் மேலோட்டமாக சொல்வது "கடந்து உள்ளே இருப்பது கடவுள்" என்பது. அந்த சொற்றொடருக்கு பொருளை அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், முழிப்பார்கள். வேதாந்தமாக பதில் தெரியும் ஆனால் அந்த பதிலுக்கு விளக்கம் தெரியாது. இப்பிரபஞ்சத்தில் சூரியன் சந்திரன் போன்றவை தனித்தனியாக இருப்பதைப்போன்று கடவுள் என்ற பொருளோ, நபரோ எங்குமே தனியாக இல்லை. 
இப்பொழுது உங்கள் சரீரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மனித சரீரம் என்ற ஒரு தனிப்பொருள் இருப்பதைப்போல தோன்றினாலும், இங்கு மனித சரீரம் என்ற ஒரு பொருள் இல்லவே இல்லை. தலை, கால், கை, உடல் போன்றவற்றின் ஒருங்கிணைப்பே சரீரம். அதுவும் உள்ளுறுப்புகள் பல பல உள்ளன. அவற்றையும் ஆராய்ந்தால் அங்கு பல உறுப்புகள் கிடையாது. ஒரே உயிரனுக்கல் பலவற்றின் ஒருங்கிணைப்பே உறுப்புகள் ஆகும். உயிரணுக்கள் பல சேர்ந்து உறுப்புகள் ஆகின்றன. உறுப்புகள் பல சேர்ந்து சரீரம் ஆகின்றது. 
அதே போன்றே, இங்கு, இப்பிரபஞ்சத்தில் நிஜத்தில் உள்ள மலை, மடு, ஆறு, குட்டை, குளம், கடல், மிருகம், நீங்கள், நான், சூரியன், சந்திரன், விண்மீன்கள்,............................... போன்ற அனந்த கோள்கள், பால்வெளிகள், இன்னும் என்னென்ன உண்டோ, அவை அத்தனையும் ஒருங்கினந்தால் எதோ ஒன்று இருக்குமே அதற்க்குப் பெயர்தான் கடவுள், ப்ரஹ்மம், சத், சித், ஆனந்தம், அனந்தம், பூரணம்,................. என்றெல்லாம் பெயர்கள் வழங்கப்படுகின்றன. 
இப்பிரபஞ்சத்தில் தனிப்பொருள் என்று எதுவுமே இல்லை. அனைத்துமே ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு உள்ளன. நான் எந்த தரையில் உள்ளானோ அதே தரையில் தான் நீங்கள் எல்லோருள் உள்ளீர்கள். என்னை எந்த தென்றல் வறுடுகிறதோ அதே தென்றல்தான் உங்கள்மீதும் விழுகிறது. நாய் எந்த காற்றை சுவாசிக்கிறதோ அதே காற்றைத்தான் நானும் சுவாசிக்கிறேன். எந்த வெளியுள்(space) கோள்கள் அனைத்தும் நிலைத்துள்ளனவோ, அதே வெளியில் தான் நாம் அனைவரும் நிலைத்துள்ளோம். எனவே இங்கு எதுவுமே தனித்து இல்லை. 
கடவுளுக்கு உள்ளேயே, கடவுளின் ஒரு அங்கமாகவே இருந்துகொண்டு கடவுளைத்தேடினால் எவ்வாறு நாம் கடவுளை காணமுடியும்?
நமக்கு அயலான ஒரு பொருளைத்தான் நாம் காண முடியும். நம்மையே நம்மால் காண முடியுமா? முடியாது. 
ஒரு தாயின் வயிற்றில் குழந்தை உள்ளது. இங்கு தாய் குழந்தை என்று இரண்டு இல்லை. தாயின் ஒரு அங்கமே அக்குழந்தை. இந்த நிலையில், தாய் தன கருவில் உள்ள குழந்தை காணவேண்டும் என்றோ, அல்லது அக்குழந்த தன் தாயை காணவேண்டும் என்றோ கதறினாலும், புலம்பினாலும் காணமுடியுமா? 
கட்டாயம் முடியாது. ஏனெனில், தாயும் குழந்தையும் தனித்தனியாக, அவர் வேறு இவர் வேறு என்று இருந்தால் தான் காண முடியும். ஆனால் இங்கு குழந்த என்ற ஒன்று தாயைப்பிரிந்து இல்லை. தாய்க்குள் குழந்த அடக்கம். இருதயம் குடல் போன்று கருவில் உள்ள குழந்தையும் இங்கு தாயின் ஒரு அங்கம். 
அதே போன்று, கடவுளின் கருவில் இருக்கும் நாம், கடவுளின் அங்கமாகவே இருக்கும் நாம், ஏன் கடவுளாகவே இருக்கும் நாம், கடவுள் எங்கோ இருக்கிறார் என்று தேடி தேடி ஓடி ஓடி எங்கு சென்றாலும் எவ்வாறு நம்மால் கடவுளை காண முடியும்???
எவ்வாறு நம்மை நாம் தேடி அடைய முடியும்???!!!

No comments:

Post a Comment