jaga flash news

Thursday, 2 July 2015

"நீ யார்"

ஒரு நாத்திகனுக்கும், ஒரு மகரிஷிக்கும் இடையே நடக்கும் சிறிய சம்வாதம்!!!
ஒரு ஞானி தனது சிறிய குடிலில் மெளனமாக அமர்ந்திருக்கையில், வெறிகொண்ட நாத்தீகவாதி ஒருவன் எப்படியேனும் அந்த ஞானியை தன் நாதீகவாத கேள்விக்கணைகளைத் தொடுத்து தோர்கடிக்கேவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருகின்றான்!!!
நாத்தீகன்:- (வெறியுடனும், ஆணவமான உரத்த குரலுடனும்,)
கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை நம்புகின்றவன் மூடன். கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி. வேதங்களும் உபநிடதங்களும் பொய். சடங்குகளும் ஆசாரங்களும் பொய். எதோ ஒரு தரப்பினர் மட்டும் பிழைப்பு நடத்த உருவாக்கப்பட்ட மதங்கள் அனைத்தும் பொய். பொய். எல்லாம் பொய். 
என்ன சொல்கின்றீர்கள்???!!!
.
மகரிஷி:- (சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, சாந்தமான புன்னகையுடன்),
ஆம்!! உண்மை. முற்றிலும் உண்மை. நீ சொல்வது எல்லாம் உண்மையிலும் உண்மை. அனைத்தும் பொய்யே!!!
.
நாத்தீகன்:- (மகரிஷியின் பதிலால் திகத்துப்போய், மேலும் வாதம் செய்யும் திறன்இழந்து,)
பிறகு ஏன் இந்த கலாசாரமும், வேதங்களும், மார்கங்களும், யோகங்களும், ஆலயங்களும், பொய்யான தெய்வங்களும், வர்நாஸ்ரமங்களும்,........... உருவாக்கப்பது???
.
மகரிஷி:- இவை அனைத்தும் "நீ யார்" என்பதனை நீ அறிய உருவாக்கப்பது!!!
.
நாத்திகன்:- (கர்வம்மிகு சிரிப்புடன்)
என்ன "நான் யார்?" என்பதனை அறியவா???
ஹ ஹ ஹ !! மிகு விந்தை. நான் யார் என்பதனை என்னை விட அதிகமாக யாரால் கூட முடியும். என்னைப்பற்றி என்னைவிட யாரால் கூற முடியும்? 
அப்போது அனைத்தும் காலத்தைப் போக்கவோ???
.
மகரிஷி:- சரியப்பா! உன்னைப்பற்றி சற்று கூறு பார்ப்போம்!!!!
.
நாத்திகன்:- என் பெயர் ராஜவேலு!!
.
மகரிஷி:- நிறுத்து நிறுத்து. நான் உன் பெயரையே கேல்கவில்லையே. "நீ யார்?'
.
நாத்திகன்:- நான் ஒரு ஜமீன் பரம்பரையில் பிறந்தவன். எனக்கு ஏன் இந்த கலாசாரம் பிடிக்கவில்லை என்றால்..................
.
மகரிஷி:- அடக்கடவுளே!! நிறுத்தப்பா. நான் உன் குளம், கோத்திரம், பற்றி எல்லாம் கேட்கவில்லை. "நீ யார்?" என்பதனை சுருக்கமாக கூற்று!!
.
நாத்திகன்:- நான் காங்கிரஸ் நடத்தும் சுயராஜ்ய போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவன்.
.
மகரிஷி:- உன்னை புத்திசாலி என்று நினைத்தேன். இவ்வளவு முட்டாளாக உள்ளேயே!!!
நீ போராடுவது நாட்டிற்காக. அது சுதந்திர போராட்டத்தில் உன் பங்கு. நான் "உன்னுடயதைப்" பற்றி கேட்கவில்லை. "நீ யார்?" மூச்சுக்கு முன்னூறுதரம் "நான் நான் நான்" என்று கூறுகின்றாயே, அந்த "நான் யார்?" நான் என்பதன் பொருள் தான் என்ன? 
.
நாத்திகன்:- (வெகுநேரம் யோசித்தான். அவனிடம் கூற அவனைப்பற்றி எதுவும் இல்லை. எதைக்கூற முற்பட்டாலும் அது "அவனுடையதாகவே" இருந்தது!!!)
சுவாமி!! என்னைப்பற்றி கூற எனக்கே தெரியவில்லை. 
"நான் யார்?" என்பதனை கூரியருளால் வேண்டும்!!!
.
மகர்ஷி:- (சிங்கதப்போன்ற கர்ஜனைமிகு, கம்பீரமான சிரிப்புடன்,)
ஹ! ஹ!! ஹ!!!
உன்னைப்பற்றி அனைவரையும்விட உனக்கே அதிகம் தெரியும் என்றாய்? இறுதியில் உனைப்பற்றி என்னிடம் கேட்கிறாய்??!!!
அனைத்து மதங்களின், அனைத்து வேதங்களின் நோக்கமும், ஒவ்வொருவரும் தனக்குள் "நான் யார்?" என்னும் மகா விசாரனனையை செய்து, தான் அந்த முழுமையே என்னும் உண்மையை கண்டறிவதே ஆகும்.
உன்னுள் நீயே விசாரம் செய். "நான் யார்?" என்று. 
முடியாவிடில் ஒரு சத்குருவின் துணையை நாடு. 
சத்குருவும், கடவுளும் கூட "நீ யார்?" என்பதனை நீ அறிய ஒரு வழியைக்காண்பிப்பார்களே தவிர உனக்கு உணர்த்த அவர்களாலும் முடியாது. நீதான் குரு காட்டிய பாதையில் சென்று உன்னை நீ அறிய வேண்டும்.





No comments:

Post a Comment