jaga flash news

Wednesday 30 September 2015

செவ்வாய் தோசத்திற்கான எளிய பரிகாரம்

செவ்வாய் தோசத்திற்கான எளிய பரிகாரம்
=====================================
குருவே சரணம் !!!
ஒருவரின் உடலில் செவ்வாய் பாதிக்கபட்டால், அந்த உடல் சூடு மற்றும் பித்த நோய்களை உருவாக்குகிறது. தலை சுற்றல், வாந்தி, மயக்கம், உடல் நடுக்கம் போன்றவை செவ்வாய் பாதிக்கபட்டால் ஏற்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்துக்கு, சந்திரனுக்கு அல்லது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருக்க செவ்வாய் பாதிப்புகள் உண்டாகிறது என்கிறது ஜோதிடம். செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம் மேலும் இவரே கால புருஷ சக்கரத்தின் லக்ன அதிபதி மற்றும் 8 என்ற அசுப ஸ்தானத்தின் அதிபதி. செவ்வாய் 4 இடமான கடகம் என்ற நீர் ராசியில் நீசம் பெறுவார் என்கிறது ஜோதிடம் இதன் மூலம், செவ்வாய் பாதிப்புகள் சந்திரன் மூலம் ஆதாவது நீர் மூலம் தீர்க்கலாம் என்பதை நம் வாழ்கையில் அறியலாம். ஆதாவது உடல் சூட்டை தணிக்க, நீர் முக்கிய காரணி என்பது எல்லோரும் அறிந்ததே.
சித்த மருத்துவம் கூறும் எளிய செவ்வாய் தோச பரிகாரம்
====================================================
இங்கே செவ்வாய் என்பது பித்தம் ஆதாவது நெருப்பு உடலில் உருவாக்கும் காரகத்துவம் கொண்டது. உடலில் சக்தி ஓட்டம் நெருப்பு ஆதாவது அனல் அல்லது வெப்பம் என்ற நிலையில் எடுத்து செள்ளப்டுகிறது என்பது தற்போதைய நவீன விஞ்ஞானம் ஒத்துகொள்கிறது. எனவே உடலில் ஏற்படும் சூட்டு வியாதிகளுக்கும், இரத்தம் அசுத்தம் பெறுவதால் ஏற்படும் கண் மற்றும் தோல் வியாதிகளுக்கும், உயர் மற்றும் குறைவான ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும் செவ்வாய் ஒரு காரணி. இதில் இருந்து உடலில் செவ்வாய் காரகதுஅம் என்பது நெருப்பு அல்லது பித்த வடிவில் இருப்பதாய் ஜோதிடம் மூலம் அறியலாம்.
செம்பு என்பது செவ்வாய் என்ற கிரகத்துக்கான உலோகம். நீர் என்பது சந்திரன் காரகதுவதில் ஒன்று. சித்த மருத்துவத்தில் பித்தம் என்ற நெருப்பை கட்டுபடுத்துவதில் செம்பின் பங்கு அளப்பரியது.
எனவே மேற்கண்ட உடல் உபாதைகள் உள்ளவர்கள், ஒரு நாள் இரவு முழுவதும் செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை, அதிகாலையில் அருந்தும் பழக்கம் கொண்டால், செவ்வாய் பாதிப்புகள் விரைவில் விலகி நலம் பெறுவார்கள். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளும் விரைவில் சரியாகும் என்பது அனுபவ உண்மை.
மேலும் செவ்வாயால் ஏற்படும் செவ்வாய் தோசத்துகான பரிகாரமாகவும் இதனை செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
இந்த மருத்துவ குறிப்பை கொடுத்த திரு ரகுராம் அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment