jaga flash news

Tuesday, 19 January 2016

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் ஆனைமலை, பொள்ளாச்சி.

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் ஆனைமலை, பொள்ளாச்சி.

மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் 
கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். 
இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை
 என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 
ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு 
மாசாணி 
அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.

மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும். மிகவும் 
சக்தி வாய்ந்த இந்த அம்மன், 15 அடி உயரமானபொதுவாக நாம் அனைத்துத் 
தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி 
கொடுப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் 
மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . 
நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு,மற்ற இரு 
கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் 

மண்டையோடு தாங்கியிருக்கும்.

அன்றாடம் ஆயிரக்கணக்கில் பகதர்கள் அன்னையை தரிசித்த வண்ணம் உள்ளனர். 
அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை
 பரவலாக உள்ளது. இந்தக் கோவிலில் ஒரு பிரத்யேகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் 
குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் 
பாதத்தில் பூசாரியின் மூலம் சமர்பிக்கும் போது, அன்னைத் தங்கள் உண்மையான 
ஆழ்ந்த பக்தியைக் கண்ணுற்று, தங்கள் குறைகளுக்குச் செவி சாய்த்து அதனை மூன்று 
வாரங்களில் நிவர்த்தி செய்து விடுவதாகவும் நம்பிக்கை பரவலாக உள்ளது.

இந்தக் கோவிலின் மிக சுவாரசியமான விசயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் 
சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் 
பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, 
வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் 
நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளாகாய் போட்டு 
அரைப்பர்கள்.அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் 
பூசுவார்கள்.இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் 
நம்புகின்றனர் .

இத்தலத்தின் வரலாறு
இது சங்க காலத்தில் உம்பற்காடான, ஆனைமலையில் நடந்த கதை. இந்தப் பகுதியை 
நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன்
 அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, 
காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று 
உத்தரவிட்டிருந்தான்.
ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெணகள் 
குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த 
ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து 
போனவளாக, அதனை உண்டுவிட்டாள். இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை 
உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்த்ரவிட்டான். அப்பெண்ணின் தந்தை அதற்குப்
 பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு
 களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் 
கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் 
கொன்றுவிட்டான்.பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான 
இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, 
போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் 
பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப் பட்டுள்ளாள். மக்கள் 
அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு , வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் 
பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போகில் அது மருவி, மாசாணி 
என்றாகி உள்ளது.
இதே மாசாணி அம்மன், ஸ்ரீ ராமர் காலத்துடன் சம்பந்தப்படுத்தி 
சொல்லப்படுகிறது.விசுவாமித்திர முனிவர் கடகனாச்சி மலையில் யாகம் நடத்துவதற்கு
 முடிவெடுத்த போது, தீய சக்திகள் கொண்ட தடகா என்ற அரக்கன், அந்த மலையை 
வேட்டையாடி, முனிவரின் யாகத்திற்கும் ஊறு விளைவித்தான். ஆகவே 
விசுவாமித்திரரின் வேண்டுதலின் பேரில், தசரத மன்னன் ராம, இலக்குவனை 
முனிவருடன், யாகத்தைக் காக்கும் பொருட்டு அனுப்பி வைத்தார். பார்வதி தேவி ராம 
இலக்குவன் முன் தோன்றி, அந்த அரக்கனை அழிப்பதற்கு சக்தியையும், ஆசியையும்
 வழங்கி, அந்த அரக்கன் கொல்லப்பட்டவுடன், அந்த சிலையை அழித்து விடும்படியும் 
கூறினார். ஆனால் ஸ்ரீராமரோ அந்தச் சிலையை அழிக்க மறுத்து மக்களைக் காக்கும் 
பொருட்டு அங்கேயே விட்டு வைத்தார். அந்த பார்வதி சிலைதான் மாசாணி அம்மன் 
என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீராமர் சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கைக்குச் செல்லும் 
வழியில் மாசாணி அம்மனை தரிசித்து, யாகம் நடத்தி, அந்த மயானத்தில் பூசை 
செய்யவும், மனம் குளிர்ந்த மாசாணி நேரில் தோன்றி ராவணனுடனான போரில் வெற்றி 

பெற ஆசி கூறி அனுப்பி வைத்தாராம்.
விசேடமான நாட்கள்

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மாசாணி அம்மனுக்கு உகந்த நாட்கள். அன்று 
அம்மன் வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு 
மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேட பூசைகள் 
நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் குண்டம் மிதிவிழா சிறப்புடன் 
நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் மிதி விழாவில் கலந்து 
கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாத பௌர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம்
 நாள், விசேட பூசைகளுடன், 16 ஆம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி 
அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் 
உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் 
ஏற்படுத்துவதில்லை என்கின்றனர். 18 ஆம் நாள் கொடி இறக்கி, 19 ஆம் நாள் விசேச 
அபிசேக, ஆராதனைகளுடன், விழா நிறைவு பெறும்.

திருவிழா நாட்கள்

வைகாசி விசாகம்,

ஆடிப்பெருக்கு

ஆடிப்பூரம்

தமிழ் வருடப்பிறப்பு

அம்மாவாசை

விநாயகர் சதுர்த்தி

தீபாவளி

கார்த்திகை தீபம்


மார்கழி தனுர் பூசை

நவராத்திரி

திறக்கும் நேரம்
கோவில் வளாகம், காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆனைமலை, கோவையிலிருந்து, 60 கிமீ தூரம் உள்ளது. கார் அல்லது பேருந்தில் செல்ல 1.30 மணி ஆகும்

No comments:

Post a Comment