jaga flash news

Thursday, 14 January 2016

மகிழம்பூ

வாடிப்போன பூவுக்கு வாசனை கிடையாது என்கிற விதிக்கு விலக்கு மகிழம்பூவுக்கு மட்டுமே உண்டு. வாட வாட வாசனை தரும் பூ மகிழம்பூ
இலைகள் கரும்பச்சை வண்ணத்திலும் துளிர்கள் இளம்பிச்சை வண்ணத்திலுமாக அடர்த்தியாக வளரும் மரம் மகிழ மரம். அழகும் குளுமையும் அடர்த்தியான அமைப்புமாக மரமே பார்க்க அழகாக இருக்கும். இலைக்காம்புகளுக்கு இடையில் சிறிது சிறிதாக வைத்த மொட்டுக்கள் மாலை நேரத்தில் மலரும். இரவு நேரத்தில் கீழே உதிர்ந்துவிடும். கோப்பதற்கு வசதியாக இயற்கையிலேயே துளையுடன் கூடிய பூ இது.  இதமான மென்மையான வாசம் காற்றில் மிதந்து வரும்.
download
மருத்துவ குணம் நிரம்பியது மிகழ மரம் இதயக் கோளாறு தலைவலி உடல்வலி ஜூரம் பல்வலி வாய்ப்புண் வாய்துர் நாற்றம் ஆகிய உபாதைகளுக்கு மகிழம்பூ கைகண்ட மருந்தாகும்.
download (2)
மகிழம்பூவினால் அம்பிகையை அர்ச்சித்தால் ஐஸ்வர்யம் பெருகும். மகிழமொட்டுக்களை யாகத்தில் சேர்ப்பதுண்டு. இதன் பயன் சத்ரு நாசம். சகல காரிய சித்தி  அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்டு வளர்த்துப் பேணீ பாதுகாக்க வேண்டிய மரம் மகிழ மரம். இதன் மணம் மன அமைதியைத் தரும். கேரளாவில் மகிழம் பூவுக்கு இலஞ்சி என்று பெயர். திருச்சூர் பூரத் திருவிழாவில் ‘இலஞ்சித்தரா மேளம்’ என்று உலக  நாடுகளில் பிரசித்தமான மேளக் கச்சேரி கோவில் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடியில்தான் நடைபெறுகிறது.
download (1)
குற்றாலத்துக்கு சமீபத்தில் உள்ள பிரபலமான முருகன் தலத்தின் பெயர் இலஞ்சி  கண்ணபிரானுக்கும் உகந்த மலர் மகிழமலர். வகுளாபரணன் என்றே கண்ணனுக்குப் பெயர் உண்டு. திருப்பதி வெங்கடாசலபதியின் வளர்ப்புத்தாயின் பெயர் வகுளமாலிகா [ மகிழம்பூ மாலை அணிந்தவள் என்று பொருள் ] எத்தனை தெய்வ சம்பந்தம்?

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மகிழமலர் எனது வீட்டிலும் வைத்துள்ளேன் அய்யா வெ.சாமி. அவர்களே!

    ReplyDelete