jaga flash news

Saturday, 5 March 2016

அசுரர்களின் அடிமைகள் நாம்

அசுரர்களின் அடிமைகள் நாம்
--------------------------------------------
புராண காலத்தில் பத்துதலை இருபது கைகளுடன் அகோர ரூபத்துடன் அசுரர்கள் 
வந்தனர் என்று குறுவது வழக்கம். அவர்களை அழிக்க இறைவனும் அவதாரம் 
எடுப்பாராம். ஆனால் கலியுகத்தில் தெய்வ அவதாரங்கள் இல்லை என்பது நியதி. ஆகவே 
அசுர ராக்ஷசர்களும் நேர் உருவம் எடுக்காமல் மறைமுகமாக பல வடிவம் கொண்டு 
நம்மை நாம் அறியாமலேயே அவர்களது அடிமைகளாக்கி வைத்துள்ளனர். அவர்கள் 
என்ன சொல்கிறார்களோ அதுவே நமக்கு வேதவாக்காகி விட்டது.

அசுரர்கள் என்றால் முதலில் யார்ரென்று தெரிந்துகொள்ளுங்கள்.
எது ஒருவனை நன்னெறியில் இருந்து நழுவசெய்கிறதோ, புத்துயையும் அறிவையும் 
மழுங்கடித்து காலத்தை அவன் வீணாகும்படி செய்கிறதோ, தெய்வ சிந்தனை சிறிதும் 
எழாமல் செய்கிறதோ, மிக மிக மிக முக்கியமாக எது ஒருவனது அமைதியை 
கெடுக்கிறதோ அது அசுரன்.

இப்பொழுது நம்மை அடிமையாக்கிய சில அசுரர்களின் பெயரை கூறவா?!!!
television, Facebook, twitter, wats-app, i-phone,.................
என்ன சிரிப்பாக உள்ளதா?
என் வார்த்தையை நகைச்சுவையாக நினைக்காதீர்.
ஒருவன் இக்காலத்தில் எழுந்தவுடன் தாயின் முகதைப்பார்கிரானோ இல்லையோ 
முகப்புத்தகத்தை தான் பார்கிறான்.
நம் காலத்தையும் நேரத்தையும் சிரத்தையையும் இவ்வசுரர்கள் எப்படில்லாம் 
விழுங்குகிறார்கள்.
நம் நிலை "அந்தோ பரிதாபம்"!!!

1 comment:

  1. அய்யா! வெ.சாமி அவர்கள் இப்படிச்சொன்னால், நாங்கள் எப்படி உங்கள் முகநூலைப் பார்ப்பது, இந்த விஷயங்களை எப்படி தான் தெரிந்து கொள்வது...?

    ReplyDelete