jaga flash news

Tuesday 12 July 2016

மகாபாரதத்தில், ஐந்து பாண்டவர்களின் வெவ்வேறு தந்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

குரு அரசாட்சியை ஆண்டு வந்து பாண்டு மன்னனின் புதல்வர்களே பாண்டவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருடைய முதல் மனைவியான குந்தி தேவிக்கு பிறந்தவர்களே யுதிஷ்டர், பீமன் மற்றும் அர்ஜுனன். அவருடைய இரண்டாம் மனைவியான மாதுரிக்கு பிறந்த இரட்டையர்களே நகுலனும் சகாதேவனும். ஆனால் இது முழுதான உண்மை கிடையாது. உண்மையிலேயே பாண்டவர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தெய்வீக தந்தை இருந்தனர். அதற்கு காரணம், ஒரு சாபத்தினால் பிள்ளை பெறும் தகுதியை பாண்டு இழந்திருந்தார்.
அதனால் யுதிஷ்டரின் தந்தை எமதர்மன் ஆவார்; பீமனின் தந்தை வாயு தேவன் ஆவார்; அர்ஜுனனின் தந்தை இந்திரன் ஆவார்; இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவனின் தந்தை இறைதன்மையுள்ள அஷ்வினி இரட்டையர்கள். பாண்டவர்கள் எப்படி பிறந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
யுதிஷ்டரின் பிறப்பு
பாண்டுவின் இயலாமைக்கு பிறகு, இயல்பற்ற முறையிலேயே கருவுற்றவன் தான் யுதிஷ்டர். தேவர்களை வழிபட்டு வேண்டி கொள்ளும் சக்தியை தன்னுடைய பாலிய பருவத்தில் குந்தி தேவிக்கு வரமாக அளித்திருந்தார் துர்வாசர் ரிஷி. ஒவ்வொரு தேவரையும் அவர் வழிபட்டு வேண்டும் போதும் ஒரு குழந்தையை அருளி வழங்குவர். அவளின் இந்த வரத்தை பயன்படுத்துமாறு பாண்டு வலியுறுத்தியதால், தீர்ப்பின் கடவுளான எமதர்மனை வழிபட்டு வேண்டி, யுதிஷ்டரை பெற்றெடுத்தார் குந்தி.
பீமனின் பிறப்பு
அவளின் வரத்தை பயன்படுத்துமாறு பாண்டு வலியுறுத்தியதால், காற்றின் கடவுளான வாயு தேவனை வழிபட்டு வேண்டி, பீமனை பெற்றெடுத்தார் குந்தி. மற்ற பாண்டவ சகோதரர்களுடன் சேர்ந்து சமயம், அறிவியல், நிர்வாகம் மற்றும் ராணுவ கலைகளை கிருபாச்சாரியா மற்றும் துரோணாச்சாரியா ஆகியோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டான் பீமன். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தன் கதத்தை பயன்படுத்துவதில் அவன் வலியவனாக திகழ்ந்தான். இந்த காவியம் முழுவதும் பீமனின் பலமாக திகழ்ந்தது அவனின் உடல் பலமே.
அர்ஜுனனின் பிறப்பு
அர்ஜுனன் பிறந்த போது கடவுள்கள் பாடினார்கள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் இந்திரனின் மகன் என இந்த தகவல் சுட்டிக் காட்டுகிறது. சமயம், அறிவியல், நிர்வாகம் மற்றும் ராணுவ கலைகளை குரு மற்றும் துரோணாச்சாரியா (அர்ஜுனனை தன்னுடைய சிறந்த மாணவராக கருதியவர்) ஆகியோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டான் அர்ஜுனன்.
நகுலன் மற்றும் சகாதேவனின் பிறப்பு
அஷ்வின் இரட்டையர்களே நகுலன் மற்றும் சகாதேவனின் தந்தை என கூறப்படுகிறது. சரி, யாரிந்த அஷ்வின்? பலருக்கு இந்த கேள்விக்கு விடை தெரியாது. ரிக் வேதத்தின் படி, கங்கை நதியில் தங்களின் பூர்வீக வீட்டை கொண்டிருந்தனர் அஷ்வின். பீஷ்மரின் தாய் மற்றும் சட்யபதியின் தாயை போல் அவர்கள் கங்கேயா அல்லது மத்ஸ்யாவாக இருக்கலாம். பீஷ்மரின் அதே இரத்தத்தை கொண்டவர்கள் தான் நகுலனும் சகாதேவனும். ரிக் வேதத்தில் வரும் பாடலில் கூறுவதை போல் அஷ்வினுக்கும் கங்கைக்கும், கங்கைக்கும் பரத்வாஜா மற்றும் திவோதாசா தொடர்பு இருப்பதால், நகுலனும் சகாதேவனும் புருவம்சி ரிஷியின் மகன்களாகவும் இருக்கலாம். ஒரு முறை நகுலனை கறுத்த நிறத்துடையான் என திரௌபதி குறிப்பிட்டாள். அதனால் பூமி புத்திர ரிஷியும் கூட அவனின் தந்தையாக இருக்கலாம். உடல் நிறத்தை வைத்து பார்க்கையில், வஹிஷ்டர் கூட அவர்களுக்கு தந்தையாக இருக்கலாம்.
அர்ஜுனனின் சில பெயர்கள்…
அர்ஜுன் – வெள்ளியை போன்ற மங்காத புகழ் மற்றும் பளபளப்பு ஃபல்குனா – ஃபல்குனா நட்சத்திரத்தில் பிறந்தவன் ஜிஷ்ணு – எதிரிகளை வெல்பவன் கிர்டி – இந்திரனால் கொடுக்கப்பட்ட வான கிரீடத்தை அணிந்தவன் ஸ்வேதவாஹணன் – தன் தேரில் வெள்ளை குதிரைகளை பூட்டியவன்
பாண்டுவின் சாபம்
தன் மனைவிமார்கள் உட்பட பெண்களிடம் உடலுறவில் ஈடுபட முற்படும் போது இறந்து போவான் என பாண்டுவிற்கு ஒரு முனிவர் சாபமிட்டார். ஒரு முனிவர் அவர் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மான் என நினைத்து தவறாக அவர்களை கொலை செய்ததால் பாண்டுவிற்கு இந்த சாபம் அளிக்கப்பட்டது.
உடனே சாவான்…
இந்த மிகக் கொடிய செயல் ஒரு மன்னனுக்கு உகந்ததல்ல என்பதால் இறக்கும் தருவாயில் இருந்த அந்த முனிவர் பாண்டு மன்னனை சபித்தார். மிக மோசமான மனிதன் கூட உறவில் ஈடுபட்டிருக்கும் மிருகத்தை கொல்ல மாட்டான் என அந்த முனிவர் கூறினார். எந்த ஒரு காரணமும் இன்றி பாண்டு அவர்களை கொன்றான். அதனால் அவன் பெண்களிடம் உறவு கொல்லும் போது அவன் உடனே மரணிப்பான் என சபித்தார்.

No comments:

Post a Comment