jaga flash news

Friday 27 January 2017

ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

ஓம் நமோ நாராயணாய
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஸ்ரீமத் பாகவதம் எனும் மகா புராணத்தில் 11 வது ஸ்கந்தத்தில் அவதூத - யது - ஸம்வாதம் என்ற 9 வது அத்தியாயத்தில் 24 வது சுலோகத்தில்
யதுவம்சோ அவதீர்ணஸ்ய பவக:
புருசோத்தம:
சரஸ்சதம் வ்யதீதாய பஞ்ச
விம்சாதிகம் ப்ரபோ:
பொருள்: “புருசோத்தமரே! பிரபுவே! யதுவம்சத்தில் அவதரித்த தங்களுக்கு 125 ஆண்டுகள் சென்று விட்டன.
இதில் கூறியிருப்பதன்படி ஸ்ரீ கிருஷ்ணன் பூலோக வாழ்க்கை 125 வருடங்கள்.
மகாபாரதம் ஆதிபர்வம் 115 வது அத்தியாயத்தில் பின் வரும் கால அட்டவணை இருக்கிறது.
திருதராஷ்டிரருடன் அஸ்தினாபுர வாசம் - 13 வருடங்கள்
அரக்கு மாளிகையில் - 1 வருடம்
பாஞ்சால மன்னன் வீட்டில் - 1 வருடம்
ஏகசக்ரபுரத்தில் - 1 வருடம்
மீண்டும் திருதராஷ்டிரனுடன் - 5 வருடங்கள்
இந்திரப்பிரஸ்தத்தில் தனி அரசு - 23 வருடங்கள்
வனவாசமும், அஞ்ஞாதவாசமும் - 13 வருடங்கள்
குருசேத்திர போருக்குப் பின்பு ஆட்சி - 36 வருடங்கள்
இதன் பிறகு பர்சித் மகா சக்கரவர்த்திக்கு பட்டாபிசேகம் செய்து விட்டு மகா பிரஸ்தானம்
இப்படி கணக்கெடுக்கும் போது, மொத்தம் 93 வருடங்கள்.
பாண்டவர்கள் அஸ்தினாபுரம் வந்த பொழுது;
யுதிஷ்டிரன் வயது - 16 வருடங்கள்
பீமன் வயது - 15 வருடங்கள்
அர்ச்சுணன் வயது - 14 வருடங்கள்
ஸ்ரீ கிருஷ்ணர் வயது அர்ச்சுணனை விட 3 மாதங்கள் அதிகம், தர்மரை விட பதின்மூன்றே கால் வருடம் குறைவு. இந்தக் கணக்குப்படி ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் வாழ்ந்தது 106 வருடங்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

1 comment:

  1. வேதாகமத்தில் கூட இதுபோன்று வயதுகள் கணக்கிடப்பட்டுள்ளன. அய்யா! வெ.சாமி. அவர்களே இந்த ஶ்ரீமத் பாகவதம் என்ற மகாபாரதம் நூல் எங்கு வாங்கலாம். எனக்கும் இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளன.

    ReplyDelete