jaga flash news

Wednesday 6 March 2019

யார் ரிஷி? யார் முனி? யார் த்விஜன்? யார் விப்ரன்? யார் பிராம்மணன்? தெரிந்து கொள்வோமே...

யார் ரிஷி? யார் முனி? யார் த்விஜன்? யார் விப்ரன்? யார் பிராம்மணன்? தெரிந்து கொள்வோமே...

ஒரு பிராம்மண தகப்பனுக்கும், பிராம்மண தாய்க்கும் பிறப்பதால் 'பிராம்மணன்' என்ற பெயரை மட்டுமே பெறுகிறான்.
வெறும் பிறப்பினால் மட்டும், ஒருவன் பிராம்மணத்துவம் அடைவதில்லை. 
பிறக்கும்போது ப்ராம்மணனும் நாளாம் வர்ணத்தவன் தான். சூத்திரன் தான் (employee)


உபவீதம்(பூணுல்) என்ற சம்ஸ்காரம் செய்து, தன் தகப்பானரிடம் மந்திர உபதேசம் பெற்ற பின், "த்விஜன்" என்ற அடுத்த பிறவியை அடைகிறான்.
ப்ரம்மத்தை (பரவாசுதேவனை) உபாசனை செய்ய உலக ஆசைகளை துறக்க தயாராவதால், உபவீதம் அணிந்த பின், இரண்டாம் பிறவி (த்விஜன்) எடுக்கிறான்.
அலங்காரங்கள் ஆசைகள் விட்டு, வேஷ்டி, குடுமி, நெற்றியில் திலகம் வைத்து கொண்டு, கடல் போன்ற வேதத்தை 12 வருடங்கள் அத்யயணம் குருவிடம் இருந்து கற்று, குருவுக்கு பணிவிடை செய்து,  வேதியனாக ஆகும் போது, "விப்ரன்" என்று பெயர் பெறுகிறான்.
வேத மந்திரங்கள் கற்ற வேதியன், வேத மந்திரங்களை ஜபித்து, அந்த மந்திரங்களுக்கு உரிய தெய்வங்களை ஆகர்ஷிக்கும் சக்தி பெறும் போது "ரிஷி" என்ற பெயர் பெறுகிறான்.

 பிராம்மண குடும்பத்தில் பிறக்காது போனாலும், "பிராம்மணத்துவம் பெற்றே தீருவேன்" என்று, பல வருடங்கள் ஓங்கார ஜபம் செய்து, காயத்ரி மந்திரத்தை ஆகர்ஷிக்கும் சக்தி பெற்ற பின், க்ஷத்ரியனாக பிறந்த இவர், விஸ்வாமித்ர "ரிஷி" என்று ஆனார்.
ரிஷியாக உள்ளவன், "எங்கும் பாண்டுரங்கனான ஸ்ரீ கிருஷ்ணரே (நாராயணன்) உள்ளார்" என்று எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவன், "முனி" என்ற பெயர் பெறுகிறான்.

ரிஷிகளும் மதிக்ககூடியவர்கள் முனிகள்.
ரிஷிகளை முனி என்று சொல்வதில்லை. முனியை ரிஷி என்றும் சொல்லலாம்.
அகத்தியர் முனி, பிரம்மாவின் மானஸ புத்ரன் "நாரத முனி" போன்றவர்கள், ரிஷிகளுக்கும் மேலானவர்கள்.
தன் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன் "ப்ராம்மணன்" (ப்ரம்மத்தை உபாசிக்கும்) ஆகிறான். ப்ராஹ்மணத்துவம் பெறுகிறான்.
ப்ரஹ்ம-பதத்தால் (வேதத்தால்) குறிப்பிடப்படும் பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தில்(அறிவில்) ஸித்திஅடையும்போதே ‘ப்ராம்மணன்’ ஆகிறான்.

வெறும் பிறப்பால் பிராம்மண குலத்தில் பிறந்து, உலக ஆசைகளோடு வாழ்பவன் பிறரால் ப்ராம்மணன் என்று மதிப்பு பெற மாட்டான்.

சப்த ப்ரஹ்மமாகிய வேதத்தால் குறிப்பிடப்படும் பரமாத்மாவிலேயே ரமிக்கும் ப்ராம்மண குலத்தில் பிறந்தவர்கள் இன்றும் மதிக்கப்படுகிறார்கள்.  

No comments:

Post a Comment