jaga flash news

Saturday, 11 April 2020

இலவங்கம்

இந்தியாவிலும், இலங்கையிலும், இலவங்கம் மருத்துவ மற்றும் உணவு உபயோகங்களுக்காக பயிர் செய்யப்படுகின்றது. அஞ்சுகம், உறகடம், கருவாய், வராங்கம் போன்ற பெயர்களும் இலவங்கத்திற்கு உண்டு.

இலவங்கம் காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. பசித் தீயைத் தூண்டி உடலைத் தேற்றும். இசிவையும், துடிப்பையும் தடுத்து வாந்தியை நீக்க வல்லது.
மேலும் தோல் நோய்களையும் கட்டுப்படுத்த வல்லது. “பித்த மயக்கம் பேதியொடு வாந்தியும் போம்….” என்கிற அகத்தியர் குணபாட நூல்.
பித்தத்தைக் கட்டுப்படுத்துதல், விந்து ஒழுகுதல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்துவதற்காக செய்யப்படும் மருந்துகளில் முக்கியமாகவும், லேகியம், சூரணங்கள் போன்றவற்றில் துணை மருந்தாகவும் இலவங்கம் சேர்க்கப்படுகின்றது.

இலவங்கத்தை வாலையிலிட்டு வடித்து இலவங்க எண்ணெய் அல்லது கிராம்பு தைலம் தயாரிக்கப்படுகின்றது. இது நல்ல மணமுள்ளது. அழுகலை அகற்றும்: அரிப்பைத் தடுக்கும்: பசியைத் தூண்டும்: உடலைப் பலமாக்கும்.
இலவங்கம் மலைப் பகுதிகளில் உள்ள‌ மர வகையைச் சேர்ந்த‌ தாவரம் ஆகும்.மரத்தில் தோன்றும் மொக்குகளைப் பறித்து காய வைத்து, கடைகளில் இலவங்கம் அல்லது கிராம்பு என்கிற பெயரில் விற்பனையாகின்றது.
இலவங்கம் எல்லா நாட்டு மருந்து மற்றும் மளிகை கடைகளிலும் கிடைக்கும். கிராம்பு கறி மசாலாவில் முக்கிய இடம் பெறுகிறது. சுவையும், மணமும் தரும். இதை ஊறுகாய், பற்பொடி, வாசனைப் புகையிலை ஆகியவற்றிலும் சேர்க்கிறார்கள்.

இலவங்கத்தின் மொத்தப் பகுதியும் நல்ல மருத்துவ குணம் ஒளிந்துள்ளது. அதாவது இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம்பு எனப்படும்  இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது.

இலவங்கத்தில் அடங்கியுள்ள “யூஜினால்” என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். பரம்பரை மருத்துவத்தில் இலவங்கத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால்  செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது.

வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது. வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது. வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க  கூடியது.

வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது. தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கக் கூடியது. வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம்  பயன்படுகிறது. 

பல்வலி ஏற்பட்ட போது இலங்கதைலத்தைப் பஞ்சில் நனைத்து மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் ஒரு வலி மறுப்பானாக  பயன்படுகிறது. இலவங்கம் இயற்கையில் நமக்குக் கிடைத்த வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் விளங்குகிறது

இலவங்கப்பூ பொடியை பற்பொடியுடன் சிறிதளவு சேர்த்து பல்தேய்த்து வர வாய்நாற்றம், பல்வலி, ஈறுவீக்கம் முதலியவை குணமாகும். இவை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது.

இலவங்கத்தை உணவாகப் பயன்படுத்தும் போது தோல் புற்று நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் நுரைஈரல் புற்று நோயை தடுத்து நிறுத்தவல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. 

இலவங்க எண்ணெய் ஒரு கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது.

இலவங்கப்பொடியை 2 கிராம் அளவு எடுத்து பனைவெல்லத்தில் கலந்து சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரச் சிக்கலும் அதனால் ஏற்படும் வலியையும் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment