jaga flash news

Wednesday 8 April 2020

சர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா? ஒரே குழப்பமா இருக்கா அப்ப இத படிங்க!*

*சர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா? ஒரே குழப்பமா இருக்கா அப்ப இத படிங்க!*

சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்வது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை பெரும்பாலானோர் நிறைய பேர் சொல்லி தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், எந்த வகையில் இது உடலுக்கு நல்லது. சர்க்கரையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இதில் அப்படி என்ன இருக்கிறது? இவை அனைத்துமே அனைவரது மனதிலும் ஓடக் கூடிய சில அடிப்படை சந்தேகங்கள். இவற்றிற்கான விடையை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

இது குறித்து தற்போது நடந்த ஆய்வின் படி உங்களுடைய சிந்தனைகள், புரிந்து கொள்ளும் திறன் பலவீனப்படுகிறது என்கிறார்கள். இதற்கு விஞ்ஞானிகள் 'ஓவர் ட்ரெய்னிங் சிண்ட்ரோம்' என்று பெயரிட்டுள்ளனர். அதிக உடற்பயிற்சி உடலை பாதிக்கிறதோ இல்லையோ உங்க மூளையை பாதிக்கிறது. இதனால் உங்க மூளை நரம்புகள் சோர்வாகக் கூடும். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக காணலாம்.

சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் கௌரவ் தனேஜா கூறுவது என்றவென்றால், வெல்லமானது, நமது உடலை நச்சு பொருட்களிடம் இருந்து காத்து, சளி மற்றும இருமல் தொல்லை நெருங்காமல் பாதுகாக்கும். அதுமட்டுமல்லாது, உடலில் இரும்புச்சத்தை சமன்படுத்த உதவும். மிக முக்கியமாக, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கூட குறிப்பிட்ட அளவு இதனை சேர்த்துக் கொள்ளலாம்.

 வெல்லம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதுவே, சர்க்கரையில் கொழுப்பு கலோரிகள் உள்ளதால் அவை உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும். வெல்லம், சர்க்கரை இரண்டிலுமே கலோரிகள் இருந்தாலும், வெல்லம் தான் இயற்கை முறையிலான சர்க்கரையாகும். சர்க்கரை, வெல்லம், இரண்டில் எதை அதிகமாக சாப்பிட்டாலும், உடல் எடை அதிகரித்துவிடும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம். ஆனால், வெல்லத்தில் ரசாயனங்கள் எதுவும் இல்லாததால், உடலுக்குள் வேறு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, ஒட்டுமொத்தமான வெல்லம் உடலுக்கு நன்மை தான், அதுவும் சரியான அளவில் சேர்த்துக் கொள்ளும் போது மட்டும் தான். ஏனென்றால், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.

வெல்லத்தில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், குடலுக்கு வலு சேர்க்க உதவும். ஒவ்வொரு 10 கிராம் வெல்லத்தில், சுமார் 16 மி.கி. அளவிற்கு மக்னீசியம் உள்ளது. இது தினசரி உடலுக்கு தேவையான தாதுக்களில் 4 சதவிகிதம் ஆகும். நிறைய வல்லுநர்கள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஒரு ஆரோக்கியமான மனிதர், நாளொன்றிற்கு 25 கிராமிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளவே கூடாது. சிறந்த அளவு என்னவென்றால், 10 முதல் 15 கிராம் வரை தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment