jaga flash news

Thursday, 9 April 2020

முளைகட்டிய வெந்தயம்

வெந்தயம் பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெந்தயத்தை தங்களது அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

பழங்கால மருத்துவ முறையிலும் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனுடைய விதைகள்,இலை எல்லாமே மிகவும் பயனுள்ளதாகும். சாதரண விதைகளை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது.

முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறு நாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

சத்துக்கள் :
முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி,ப்ரோட்டீன்,நியாசின்,பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.

சர்க்கரை நோயைக் குறைக்கும் :
சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய வெந்தயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திடும்.வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.

முளைகட்டிய வெந்தயத்தில் polysaccharide அதிகமாக இருக்கிறது. இவை நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும். அதோடு முளைகட்டிய வெந்தயத்தில் 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன.

No comments:

Post a Comment