jaga flash news

Wednesday, 8 April 2020

குழந்தைகள்காசை_விழுங்கிவிட்டால்

#குழந்தைகள்காசை_விழுங்கிவிட்டால் #உடனே_இந்த_தவறுகளை #செய்யாதீங்க.!

உங்கள் குழந்தை திடீரென நாணயத்தை விழுங்கி விட்டால் பதறாமல் நன்கு கவனியுங்கள். நாணயம் நேரடியாக வயிற்றுக்குள் சென்று விட்டால் அவ்வளவாக பயப்பட வேண்டாம். ஏனெனில் இது குழந்தை மலம் கழிக்கும் போது வெளியேற வாய்ப்பு அதிகம். ஆனால் நாணயம் தொண்டைக்குள் சிக்கி கொண்டால்,மிகவும் கவனம் தேவை. ஒரு வேளை காயின் உணவு குழாய்க்குள் சிக்கி விட்டால் கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

#அறிகுறிகள்
குழந்தை தொடர்ச்சியாக உமிழ் நீர் வெளியேற்றும். தொடர்ச்சியாக குழந்தைக்கு ஜொல்லு நிற்காமல் வடித்தால் கவலை பட வேண்டிய விஷயம் தான்.

உணவு சாப்பிட குழந்தை மறுக்கும். அதற்கு விழுங்க கஷ்டமாக இருப்பதால் பசியாக இருந்தாலும் உணவை மறுக்கும். வாந்தி, குமட்டல் உண்டாகும்.

குழந்தையின் நெஞ்சு அல்லது கழுத்து பகுதியில் வலி என அழலாம்

திடீர் காய்ச்சல் ஏற்படலாம்.

குடலில் மாட்டிக்கொண்டால்

குடலில் மாட்டிக்கொண்டால்
ஒரு வேளை காயின் குடல் பகுதியில் சிக்கி கொண்டால், குடல் சுவற்றில் காயினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

இரத்தத்துடன் மலம் வெளியேறுதல், மலம் வெளியேற்றும் போது ஏற்படும் அசாதாரண சத்தம், வயிற்று வலி, வாமிட் போன்றவைகள் ஏற்படும். சில நேரங்களில் குழந்தை நாணயத்தை விழுங்கி விட்டால் கூட அது எந்த தொந்தரவும் செய்யாமலேயே இயல்பாக சாப்பிடும், தண்ணீர் குடிக்கும். ஆனால் விடாத தொடர் இருமல் இருக்கும். சிக்கி கொண்ட காயின் குழந்தையின் உணவு குழாய் திசுக்களில் தொடர்ச்சியாக பாதிப்புகளை ஏற்படுத்தி, உணவு குழாயை மேலும் சேதப்படுத்தி ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.

#எவ்வளவு_நாள்_பொறுத்திருக்கலாம்?

இப்போது உங்கள் குழந்தை நாணயத்தை அல்லது ஏதேனும் ஒரு சிறிய பொருளை விழுங்கி விட்டான். நீங்கள் உச்சகட்ட பதற்றத்துடன் இருப்பீர்கள். பெரும்பாலும் 80-90% முறை நாணயம் எந்த தொந்தரவும் செய்யாமல் மலத்துடன் வெளியேறிவிடும். செரிமான மண்டலத்தில் நுழைந்து அதிகபட்சமாக இரண்டு நாள் இடைவெளியில் வெளியேறிவிடும். இருந்தாலும் நீங்கள் உங்கள் குழந்தையை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். கீழ்காணும் அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தெரிகிறதா என பாருங்கள்.

3)உண்டாகும் பிரச்னைகள்
1. உங்கள் குழந்தையால் பேச அல்லது அழ முடியாத நிலைமை மற்றும் மூச்சு விட சிரமம்

2. அவனுக்கு நிற்காமல் உமிழ்நீர் வடிந்து கொண்டே இருத்தல் மற்றும் உணவு, தண்ணீரை கூட விழுங்க சிரமம்

3. சத்தமுடன் இருமல் மற்றும் மூச்சு விடுதல்

4. அவனுக்குள் அடைத்து இருந்தால் நம்மாலேயே உணர முடியும்

5. சுய நினைவு இழத்தல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.

#சுயமருத்துவம்

குழந்தை காயினை விழுங்கினாலும் அதற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் மலத்துடன் அது வெளியேறும் வரையில் பொறுமையோடு காத்திருங்கள். நீங்களாக குழந்தைக்கு மலம் விரைவில் வெளியேற மருந்து ஏதும் கொடுத்து சுய மருத்துவம் செய்து பிரச்சினையை பெரிதுபடுத்தி விடாதீர்கள். குழந்தையை உணவு உண்ண சொல்லி வற்புறுத்தவும் வேண்டாம். உங்களுக்கு ரொம்ப பயமாக இருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசியுஙகள்.

விழுங்கிய காயின் வயிற்றுக்குள் சென்று விட்டால் அதிகபட்சமாக 4-5 நாளுக்குள் குறைந்தபட்சமாக 2 நாளுக்குள் வெளியேறிவிடும். ஆனால் காயின் சிக்கி விட்டால் வயிற்று வலி, நெஞ்சு வலி, வாமிட், உமிழ்நீர் வடிதல், உணவு விழுங்க சிரமம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதே மாதிரி இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்வது நல்லது.

#முதலுதவி
உங்கள் குழந்தை காயினை விழுங்கி அது சிக்கி கொண்டால் எக்காரணத்தை கொண்டும்

4) 1. குழந்தையை வாமிட் எடுக்க வற்புறுத்த வேண்டாம்.

2. குழந்தையை உணவு உண்ண சொல்லி அல்லது தண்ணீர் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்.

விஷமற்ற பொருள்களை விழுங்கினால்...

* குழந்தையின் மலத்தை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள் சோதனை செய்யுங்கள். அதற்குரிய டப்பாவில் மலம் கழிக்க செய்து, அதில் சுடுநீரி தெளித்து குழந்தை விழுங்கிய பொருள் வந்து விட்டதா என பாருங்கள். அப்படி வந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம்.

* குழந்தையை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

* மிருதுவான மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகளை கொடுக்க வேண்டும். வாழைப்பழம் மிக நல்லது.

* குழந்தைக்கு போதுமான தண்ணீர் கொடுக்க வேண்டும். இதனால் மலம் விரைவாக வெளியேற வாய்ப்பு உள்ளது.

#சிகிச்சை
உங்கள் குழந்தை விழுங்கிய காயின் இரண்டு நாளுக்கு மேல் வெளியேறா விட்டால், அது எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தா விட்டாலும் நீங்கள் மருத்துவமனைக்கு கூட்டி செல்வது சிறந்தது. சில நேரம் மருத்துவர் உங்களை மேலும் காத்திருக்க சொல்லலாம் அல்லது குழந்தைக்கு மலம் சீக்கிரம் வெளியேற சில மருந்துகள் தரலாம் மற்றும் மருத்துவர் எக்ஸ் ரே எடுத்து குழந்தையின் வயிற்றில் காயின் எங்குள்ளது மற்றும் அது எதை விழுங்கியது என மிக சரியாக தெரிந்து கொள்ள உதவி 
செய்வார். குழந்தை காயினை விழுங்கினால் ஆப்பிரேஷன் செய்யும் நிலைமை பெரும்பாலும் வராது. ஒரு வேளை குழந்தை கூர்மையான ஏதேனும் பொருளை விழுங்கி அது குழந்தையின் வயிற்றுப் பகுதியை கிழிக்கும் அபாயம் இருந்தால் அவர் எண்டாஸ்கோபி பரிந்துரை செய்வார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
1. உங்கள் குழந்தைகளை காயின் அல்லது ரூபாய் தாளுடன் விளையாட அனுமதிக்க வேண்டாம். ஒரு வேளை ரூபாய் தாளை குழந்தை விழுங்கி அது செரித்து விட்டால் கூட பெரிய பிரச்சினை ஆகி விடும். அது மட்டுமல்லாமல் ரூபாய் தாள் பலபேர் கை மாறுவதால் நிறைய கிருமி தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.

2. உங்கள் குழந்தைகளை சிறிய பொருட்களுடன் விளையாட அனுமதிக்காதீர்கள். பொம்மை, காருகள், விளையாட்டு பொருட்களின் உடைந்த பாகங்கள் போன்றவைகளை வைத்து குழந்தைகள் விளையாடும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

3. குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் குழந்தைகளை தோட்டத்திற்கு கூட்டி செல்லும் போது, ஒரு வெட்டுகிளியை பார்த்தால் அதையும் உங்கள் குழந்தை பிடிக்க முயற்சிக்கும்.

4. பார்க்கும் எல்லா பொருட்களையும் உங்கள் குழந்தை தொட்டு பார்க்க, சுவைத்து பார்க்க முயற்சி செய்யும். இது குழந்தைகளின் இயல்பு. இதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் குழந்தைகள் விளையாடும் போது, அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ள பொருட்களை நம்மால் அகற்றி விட முடியும். இதை நம் மக்களுக்கு
Share செய்து தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment