jaga flash news

Thursday, 9 April 2020

சந்திரன் - கிரக காரகத்துவம்:

சந்திரன் - கிரக காரகத்துவம்: 

* உலக உயிர்களை படைத்தவர் பிரம்மனாக இருக்கலாம். ஆனால் உங்களை படைத்தவர் தாயார். எனவே அவரும் ஒரு கடவுளே. மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் மாதாவை ஏன் முதலில் வைத்தார்கள் என்று இப்போது விளங்கும்.

* சந்திரன் என்றாலே உற்பத்தி. அதனால்தான் விவசாய விளைபொருட்களுக்கு சந்திரன் காரகனாகிறார்.

* சந்திரன் கால புருஷனுக்கு நான்காம் வீடமாக(கடகம் )வருகிறார். நான்காமிடம் சுக ஸ்தானத்தை குறிக்கும். எனவே சந்திரனை வைத்து ஜாதகரின் சுகம் மற்றும் ஜாதகருக்கு தன் சொந்தக்காரர்களின் மூலம் கிடைக்கும் மன சந்தோசத்தை கூறலாம். நான்காமிடம் - தன் சொந்தங்களை குறிக்கும்.

* சந்திரன் உடல் மற்றும் மனதிற்கு காரகன். சூரியன் நமது ஆத்மாவிற்கு காரகன். உடல் மற்றும் ஆத்மா இரண்டும் இணையும் புள்ளி லக்ன பள்ளி. எனவே லக்ன புள்ளி உயிரை கூறும் உயிர் புள்ளி. சூரியன் - சந்திரன் இரண்டும் இணைவதே நமது உயிர் புள்ளி.

* தசாபுத்திகள் அனைத்துமே சந்திரனை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. ஏனென்றால் சூரியன் - ஆத்மகாரகன். ஆத்மாவிற்கு உயிரைத் தவிர எதுவும் தேவை இல்லை. ஆனால் நமது மனதிற்கு உடலுக்கு என்னென்ன? எப்பொழுது தேவை? தேவையில்லை, எதை இழக்கிறோம்? எதை பெறுகிறோம்? என்பதைக் குறிக்கவே சந்திரனை வைத்து தசா புத்திகள் எடுத்தார்கள். லக்ன புள்ளியில் சூரியன் மற்றும் சந்திரன் இரண்டுமே வருவதால் பாதி பலன்கள் சரியாக இருக்கும். லக்ன புள்ளி என்பது நமது கொடுப்பினை புள்ளி. உயிராக மற்றும் பொருளாக எதை பெறுகிறோம் எதை இழக்கிறோம் என்பதை லக்னபுள்ளி வாயிலாக அறியலாம்.

* சந்திரனின் கடக வீட்டிற்கு நேர் எதிர் பாவம் மகரம். மகரம் என்பது கர்ம ஸ்தானம். கர்ம ஸ்தானத்துக்கு நிவர்த்தி பாவம், நேரெதிர் இந்த கடகம். சந்திரன் அதிபதி. சந்திரன் ஒரு நீர் கிரகம். எனவே சந்திரன் பாவங்களை நிவர்த்தி செய்பவர். சந்திரனை வைத்து திதி கொடுப்பதன் பொருள் இதன் மூலம் விளங்கும்.

* சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதன் மூலம் பாவத்தை நிவர்த்தி செய்வார். சந்திரன் சாரத்தில் இருக்கும் கிரகமும் பாவத்தை நிவர்த்தி செய்ய பிறந்தவையே.

* சந்திரன் உடல் மற்றும் மனதிற்கு காரகன். கால புருஷனுக்கு 64 வது புள்ளி சந்திர அஷ்டமம். அதாவது அஸ்வினி 1ஆம் பாதத்தில் லக்னத்தில் இருந்தால், 64 வது பாதம் விசாகம் நான்காம் பாதத்தில் விழும். விசாகம் நான்காம் பாதம், என்பது சந்திரனின் நீச புள்ளி. சுகஸ்தானம் மற்றும் கற்பு ஸ்தானத்திற்கு அதிபதி சந்திரன். கற்பிழந்த பெண்கள் மானம் இழந்தவர்கள். மானம் இழந்த பெண்கள் உயிரிழந்ததற்கு சமம். எனவே தான் கற்பு போய் விட்டால் உயிர் போனதற்கு சமம். இதுவே நமது தமிழ் பண்பாடு. எனவே கற்பு என்பதை உயிருக்கும் மேலாக நமது முன்னோர்கள் போற்றி பாதுகாத்தார்கள் என்பது விளங்குகிறது. எனவேதான் சந்திரன் எட்டில் நீசம்.

* 64 வது புள்ளி என்பது சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் உங்களுக்கு பொருளில் யோகம் செய்யவில்லை என்றால் உயிரில் நன்றாக யோகம் செய்யும். அன்று நீங்கள் படிப்பது, ஏதேனும் ஒரு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கண்டு பிடிப்பு போன்ற உயிர் தன்மைகள் சந்திராஷ்டமம் அன்று கண்டிப்பாக கிடைக்கும். மாறாக பொருளில் யோகம் கிடைக்கும் என்றால் அன்று கடன் அல்லது உதவிகள் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். 
        சந்திராஷ்டமத்தை முழுமையாக தவிர்க்க கூடாது.

* சந்திரன் - நீர்,  ஆத்மா - நெருப்பு.  நீர் என்பது கீழே இறங்கி செல்லும் தன்மை உடையது. ஆத்மா என்பது ஒளி. ஒளி என்பது மேலெழும்பி செல்வது. ஆத்மா என்பது எத்தனை முறை மேலே சென்றாலும், அதாவது மறு பிறப்புக்கு காரகம், மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க இந்த பூமிக்கு வந்தே ஆக வேண்டும். எனவே நீர் ஒரு கிரகத்தில் இருந்து, அங்கு நெருப்பும் சம விகிதத்தில் இருந்தால் அங்கு உயிர் தோற்றம் இருக்கும். செவ்வாயில் நீர் இருக்க வாய்ப்பு இல்லை. இருந்தால் அங்கு உயிர்கள் இருக்கும். ஒருவேளை முன்பு இருந்து இருந்தால், அப்போது உயிர்கள் இருந்து இருக்கலாம்.

* சந்திரனின் முன் முகம் மட்டுமே நாம் பார்த்து இருக்கிறோம். சந்திரனின் பின் பகுதியை நாம் பார்த்தது இல்லை.  அதனால்தான் பெண் மனதை ஆழம் என்று கூறினார்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று முழுமையாகக் கூற இயலாது. உலக நாடுகளில் இந்தியா மட்டும் சந்திரனுக்குப் பின் பகுதியில் தனது செயற்கைக் கோளை ஏவியது. தோல்வி என்பது கண்டிப்பாக உறுதி. ஏனென்றால் 64வது பாதம் அஷ்டமம். உயிர் படைப்பு/ இறப்பு தன்மையை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

* சந்திரன் தாயாரைக் குறிக்கும் கிரகம். அதாவது குழந்தை பெற்ற பெண்மணி. குழந்தை பெற்ற பெண்கள்தான் பாவங்களை கழுவ தகுதி பெற்ற பெண்கள். அதாவது குழந்தை பெற்ற பெண்கள் தனது பாவங்களை குழந்தைகளுக்கு சமவிகிதத்தில் பிரித்து கொடுத்து விடுகிறார். குழந்தை பெறுவது என்பது கர்மாவை படைப்பது. சனி - கர்மா - மகரம், கர்மாவை படைக்க ஒருவர் தேவை. அதன் நேர் எதிர் பாவம் கடகம் - சந்திரன்.  கர்மாவை நிவர்த்தி செய்ய ஜாதகர் தேவை . அதனாலேயே ஜாதகர் பிறக்கிறார். அதனால்தான் குழந்தை பெற்ற பெண்களை கர்மா அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை. . எனவே தான் பெண்கள் பெயரில் வழிவழியாக சொத்துக்களை அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலத்தில் எழுதி கொண்டு வந்து இருப்பார்கள். கால புருஷனுக்கு நான்குக்கு சந்திரன் அதிபதி என்பது இதை உணர்ந்தும்.

* கர்மாவை நிவர்த்தி செய்த சந்திரனின் பூர்வபுண்ணியம் மரணம். எனவே ஐந்தாமிடத்தில் விருச்சிகத்தில் சந்திரன் நீசம். 

* சனி - கருமை நிறம். 
  சந்திரன் - வெண்மை நிறம். சனி அனைத்து நிறங்களையும் உள் வாங்கி வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. ஆனால் ஒரு நிறத்தை மட்டும் உள்வாங்க சனி பகவானால் முடியாது. அது முழுமையான வெண்மை நிறம். வெண்மை நிறம் அனைத்து நிறங்களையும் பிரதிபலிக்கும் (Reflect) நிறம். அனைத்து நிறங்களையும் உள் வாங்கி வைத்துக் கொண்டால் தான் கர்மா,  வெளிவிட்டால் கர்ம விமோர்சனம். அதனால் தான் பெண்களுக்கு கர்மா கிடையாது என்று கூறினார்கள்.

* நமது உடலுக்கு காரகன் சந்திரன் என்பதால் நமது நோய்களுக்கும் காரகன் சந்திரனே. அதனால்தான் ஆறாம் அதிபதி புதன், ஆறில் உள்ள முழுமையான சந்திரனின் (அஸ்தம்) நட்சத்திரத்தில் உச்சமடைகிறார். சந்திரன் - சுகஸ்தானம். மற்றும் மனதிற்கு காரகன். மனம் கெட்டால் நோய் (ஆறாமிடம்). நோய்க்கு கர்ம ஸ்தானம் மிதுனம். வீரிய ஸ்தானம் . வீரீயம்,  தைரியம், முயற்சி இவை மூன்றையும் குறிக்கும். அந்த தைரிய வீரியத்திற்கு எதிரிதான் மரணம். கால புருஷனுக்கு எட்டாம் இடம் விருச்சிகம் மரணத்தை குறிப்பது. மேஷ லக்னத்திற்கு சந்திரன் 6ல் இருந்தால் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறிவிட வேண்டும். எட்டில் இருந்தால் கட்டுப்படுத்த முடியாத நோய். இன்சூரன்ஸ், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை என்று ஜாதகரை ரெடி செய்துவிடவேண்டும் என்று பலன் கூறவேண்டும்.

* சந்திரனின் வீட்டில் அல்லது சந்திரனின் நட்சத்திர சாரத்தில் ஒரு கிரகம் இருந்தால், நிற்கும் கிரகத்தின் காரக உறவுகளுக்கு ஏற்ப அந்த காரக உறவுகள் பாசம் மிக்கவை என்று கூற வேண்டும். சூரியன் சந்திரனின் சாரத்தில் இருந்தால் அப்பா பாசம் மிக்கவர் என்று கூறவேண்டும். மாறாக சந்திரன், சூரியனின் சாரத்தில் இருந்தால் அம்மா கண்டிப்பானவர் கண்டிப்பு மிக்கவர் என்று கூற வேண்டும். சந்திரன் செவ்வாய் நட்சத்திர சாரத்தில் இருந்தால் தாயார் தைரியமானவர் என்று கூறவேண்டும். மிதுனத்தில் இருந்தால் அறிவு நிரம்பப் பெற்றவர், தனுசில் இருந்தால் தர்ம சிந்தனைகள் நிரம்பப் பெற்றவர் என்றும், ரிஷபம் மற்றும் கடகத்தில் இருந்தால் மிகுந்த சேமிப்பு குணம் உடையவர் என்றும், மிகுந்த பாசம் உடையவர் என்றும் கூற வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு ராசிகளுக்கும் பிரித்து பலன் கூறவேண்டும்.

* சந்திரன் கால புருஷனுக்கு நான்காம் இடம் மற்றும் சொத்து என்று பார்த்து விட்டோம். கர்மாவுக்கே நிவர்த்தி ஸ்தானம் என்பதால், தாயாரின் மறைவுக்கு பின் சொத்தை யாருக்கு எழுதிக் கொடுப்பது என்ற கேள்வி எழுகிறது. சந்திரன் தன் வீட்டிற்கு ஐந்தில் நீசம். ஐந்தாமிடம் குழந்தைகளை குறிப்பது. குழந்தைகளுக்கு (அதாவது ஆண் குழந்தைகள் மட்டும்) எழுதிக் கொடுத்தால், ஆண்களுக்குரிய உழைப்பு, தைரியம், வீரியம், முயற்சி அனைத்தும் கெடும். தைரிய, வீரிய, முயற்சி அனைத்தும் கெட்டால் நல்ல விந்தணு உற்பத்தி, குழந்தைகள்  மற்றும் வம்ச வழியை உருவாக்க முடியாது. அதனால் தான் நமது முன்னோர்கள் சொத்துக்களை பெண்கள் வழியே நிர்வாகித்தார்கள். பாட்டி, அம்மா, மருமகள், பேத்தி என்று வழிவழியாக பெண்கள் பெயரில் சொத்துக்களை கடத்தினார்கள். நான்காமிடம் சொத்து என்றால் அதை யாருக்கு கொடுப்பது நிவர்த்தி ஆகும் என்றால் ஏழாம் இடத்திற்கு நான்காம் இடம் ஆகிய மகரம். அதாவது மருமகளுக்கு நான்காம் இடமான சொத்து. இதுவே கிரைய ஸ்தானம் எனப்படும். பத்தாம் இடமே கிரய ஸ்தானம். பரம்பரை சொத்து என்பது ஐந்தாம் இடம். கால புருஷனுக்கு சிம்மம் 5 ஆம் வீடு. அதில் கேதுவின் நட்சத்திரம் முதலாவதாக இருக்கும். கேது பாட்டி வழி பூர்வீக சொத்து. எனவே சொத்துக்கள் பெண்கள் பெயரில் கடந்து வந்து இருப்பதை அறியலாம்.

* ஆண்கள் பெயரில் சொத்துக்கள் இருக்கக் கூடாது. சொத்துக்கள் இருந்தால் உழைப்பு இருக்காது. மாறாக சுகஸ்தானம் அதிகரிக்கப்படும். சுகஸ்தானம் அதிகரித்தால் நோய்.  அதனால்தான் கால புருஷனுக்கு நான்கில் செவ்வாய் நீசம். பொதுவாக செவ்வாய் நீசம் பெற்றவர்களின் ஜாதகத்தில், சொத்துக்கள் அதிகம் இருக்கும் அல்லது சொத்துக்கள் இருந்து அழிந்து இருக்கும்.

* சந்திரன் நமது செல்வ வளத்தை மற்றும் சொத்து மதிப்பை கூறுபவர். அந்தக் காலத்தில் சொத்து என்பது நீர்வளம். சந்திரன் - நீர் கிரகம். நீர் இருந்தால் வேளாண்மை, விவசாயம், உணவு உற்பத்தி உண்டு. இந்த காலத்தில் போர்வெல்லில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை சந்திரனை வைத்தே முடிவு செய்ய வேண்டும். நீரில் கண்டம் அல்லது மாரகம் இருக்கிறதா? என்பதையும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும்.

* சந்திரன் கால புருஷனுக்கு 4 க்கு அதிபதி. கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற ஒரு கிரகம். கேந்திராதிபத்திய தோஷம் பெற்றால் வளர்பிறைக்கு ஒரு பலனையும் தேய்பிறைக்கு ஒரு பலனையும்  செய்வார். அது உயிரில் அல்லது பொருளில் நல்லதை செய்கிறாரா அல்லது கெட்டதை செய்கிறாரா? என்று தனி தனியாக பிரித்து பலன் பார்க்க வேண்டும்.

* சந்திரனே நமது தசா புத்திக்கு  காரகன் ஆவார். வளர்பிறை / தேய்பிறை சந்திரன்,  தாராபலன் படி ஒரு மாற்றத்தை நமக்குத் தருவார். வளர்பிறை க்கு ஒரு தாரா பலனையும் தேய்பிறைக்கு வேற்றொரு தாரா பலனையும் கண்டிப்பாக தருவார்.

* வளர்பிறையில் பிறந்தவர்கள்தான் மிகுந்த நல்ல வாழ்க்கையை அனுபவிப்பாரகள் என்று பலன் கூற கூடாது. தேய்பிறையில் பிறந்தவர்களுக்கும் மிக நல்ல வாழ்க்கை கண்டிப்பாக உண்டு. அதை வாழ்க்கையின் முற்பகுதியா? அல்லது பிற்பகுதியா? என்பதை பிறந்த திதியை  கொண்டு முடிவு செய்ய வேண்டும்.



 

No comments:

Post a Comment