jaga flash news

Friday, 10 April 2020

நூல்கோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கொரோனா வைரஸ் கிருமி போன்ற 
தோற்றத்தில் காட்சியளிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நூல்கோல் காய் பயன்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி பதிவு.

நூல்கோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நூல்கோலில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இக்காயானது ஆரஞ்சினைப் போல் ஐந்து மடங்கு விட்டமின் சி-யினைக் கொண்டுள்ளது.

மேலும் இக்காயில் விட்டமின் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

இக்காயானது தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் இக்காயில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதம், அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து, பீட்டா கரோடீன்கள் ஆகியவை உள்ளன.

நூல்கோலின் மருத்துவப் பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.

நூல்கோலானது அதிகளவு நார்ச்சத்தினையும், நீர்ச்சத்தினையும் கொண்டுள்ளதால்
இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. 

இக்காயில் உள்ள நார்ச்சத்தானது உடலில் நச்சினை கழிவாக எளிதில் வெளியேற்றகிறது.

இதனால் மலச்சிக்கல், வீக்கம், வயிற்று வலி ஆகியவை ஏற்படுவதில்லை. செரிமானப் பாதையில் உணவு செரிக்கும் தன்மையை இக்காயின் நார்ச்சத்து மேம்படுத்துகிறது.
வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது

மேலும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை நார்ச்சத்து ஊக்குவிக்கிறது. எனவே இக்காயினை அடிக்கடி உடலில் சேர்த்து மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் நீங்கி நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

ஆரோக்கிய உடல்எடை இழப்பிற்கு உதவுகிறது.

நூல்கோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராது தடுக்கிறது.
எடைக் குறைப்புக்கு உதவுகிறது நூல்கோலில் கலோரிகள் குறைவு. இதிலுள்ள அதிக நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, பெருங்குடல் இயக்கத்தை செம்மையாக்கி, எடைக் குறைப்புக்கு உதவுகிறது.

நூல்கோலானது குறைந்த எரிசக்தியையும், அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. 

எனவே இக்காயினை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பசிப்பதில்லை. எனவே இடைவேளை உணவு, நொறுக்குத்தீனி தேவைப்படாது. இதனால் இக்காயினை உண்டு ஆரோக்கிய உடல்எடை குறைப்பினைப் பெறலாம்.

ஆரோக்கியமான தசைகள் மற்றும் நரம்புகள் செயல்பாட்டிற்கு
தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிகவும் அவசியமானது. இந்த ஊட்டச்சத்து நடத்தல், ஓடல், மூச்சு விடுதல் என அன்றாட செயல்பாட்டில் பங்கேற்கிறது.

பொட்டாசியம் மிகுந்த இக்காயினை உணவில் சேர்க்கும்போது நமது நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராகி நமக்கு புத்துணர்வினைத் தருகிறது.

 இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது 

பொட்டாசியம் இரத்த குழாய்களின் குழல்விரிப்பான செயல்பட்டு சிரைகள் மற்றும் தமனியில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

மேலும் உடலில் உள்ள சோடியத்தின் அளவினை பொட்டாசியம் சமன்செய்து செல்களில் திரவநிலையைக் காக்கிறது.

அனீமியாவைத் தடுக்க உதவுகிறது.

நூல்கோலில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது. இவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் உடல்உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்பட்டு உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

மேலும் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டினால் ஏற்படும் சோர்வு, தலைவலி, பலவீனம், நோய் எதிர்ப்பின்மை, அனீமியா போன்றவை தடைசெய்படுகின்றன.

இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து உடல் உட்கிரக்கிக்கும் இரும்புச்சத்தின் அளவினை அதிகரிக்கிறது. இதனால் நூல்கோலை உணவில் சேர்த்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

நூல்கோலில் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு காரணமான வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு ஆகியவை காணப்படுகின்றன.

நமக்கு வயதாகும்போது எலும்புகள் பாதிப்படைகின்றன. இதனால் வாதம், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்குக் காரணமான நூல்கோலினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவது நல்லது.

பார்வைத் திறன் மேம்பட உதவுகிறது

நூல்கோலில் பார்வைத்திறன் மேம்பட காரணமான பீட்டா கரோடீன்கள் காணப்படுகின்றன. இவை வயதாகும் போது ஏற்படும் கண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

ஊடலில் ஆக்ஸிஜனேற்றத்தினால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து பார்வைத் திறனை பாதுகாக்கின்றன. எனவே நூல்கொலினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வளர்ச்சிதை மாற்றத்தினை சீராக்க 
உதவுகிறது.

பி தொகுப்பு விட்டமின்கள் உடலில் உள்ள நொதிகளை சரிவர சுரக்கச் செய்து வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற காரணமாகின்றன. நூல்கோல் அதிகளவு பி தொகுப்பு விட்டமின்களைக் கொண்டுள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சீரான வளர்சிதை மாற்றத்தினைப் பெறலாம்.

புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
நூல்கோலானது அதிகளவு குளுக்கோசினலேட் உள்ளிட்ட பைட்டோ-நியூட்ரியன்களைக் கொண்டுள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிஜென்ட்டுகள் புற்றுநோயை தடை செய்கின்றன. எனவே இக்காயினை உண்டு புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.
நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. 
நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.
 
நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவுகிறது. 

நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது. 
 
உடல் துர்நாற்றத்தைக் குறைக்க உதவுகிறது.. 

கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.

நூல் கோல் காய் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும் என்பதாலும்.
நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுவதாலும் 
ஒத்தது ஒத்ததை ( like cures like) குணப்படுத்தும் என்ற 
ஓமியோபதி மருத்துவமுறை கோட்பாட்டின்படி இந்த நூல்கோல
காயை கொரோனா வைரஸ் தொற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்தலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

மருத்துவம் படித்த அறிஞர்கள் எனது கருத்தின் பேரில் விளக்கம் அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நூல் கோல் காய் படம்,கொரோனா வைரஸ் படம் கீழே!👇👇

No comments:

Post a Comment