jaga flash news

Friday, 10 April 2020

நிணநீர்ச் சுரப்பிகள் என்றால் என்ன?

Lymph glands - head and neck

சிறிய நிணநீர்ச் சுரப்பிகள் (சில நேரங்களில் நிணநீர் கணுக்கள் என அழைக்கப்படுகின்றன) உடல் முழுவதும் ஏற்படும். ஒன்றுடன் மற்றொன்று அருகருகே உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் பெரும்பாலும் தொகுதிகளாக அல்லது சங்கிலித்தொடர்களாக உருப்பெறுகின்றன. கழுத்தின் பக்கவாட்டுப் பகுதிகள், அக்குள்கள் மற்றும் கால் கவட்டைகள் ஆகிய இடங்களில் உருவாகும் நிணநீர்ச் சுரப்பிகள் இவ்வாறு தொகுதிகளாக அல்லது சங்கிலித்தொடர்களாக உருப்பெறும் நிணநீர்ச் சுரப்பிகளுக்கு உதாரணங்கள் ஆகும். தலையிலும் கழுத்திலும் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளின் முக்கியமான தொகுதிகளை விளக்க வரைபடம் காட்டுகிறது. எனினும், நிணநீர்ச் சுரப்பிகள், உடலில் வேறு பல இடங்களிலும் ஏற்படலாம்.

நிணநீர்ச் சுரப்பிகள், நிணநீர் செல்வழிகளின் ஒரு வலையமைப்பால் ஒன்றாகச் சேர்த்து இணைக்கப்படுகின்றன. நிணநீர் என்பது உடலின் உயிரணுக்களுக்கு இடையே உருவாகின்ற ஒரு திரவம் ஆகும். இந்த நீர்த்த திரவம், பல்வேறு நிணநீர்ச் சுரப்பிகளின் ஊடாக நிணநீர் செல்வழிகளில் பயணித்து கடைசியில் இரத்த ஓட்டத்திற்குள் வடிகிறது.

நிணநீர் மற்றும் நிணநீர்ச் சுரப்பிகள் the immune system (நோய் எதிர்ப்பு மண்டலத்தின்) முக்கியமான பகுதிகள் ஆகும். இவை, நோய்த்தொற்றுக்கு எதிராக நமது உடலை தற்காத்துக் கொள்ளும் வெள்ளை இரத்த உயிரணுக்களையும் (லிம்போசைட்கள்), ஆன்ட்டிபாடிகளையும் கொண்டுள்ளன.


No comments:

Post a Comment