jaga flash news

Saturday, 11 April 2020

அஸ்தங்க தோஷத்தைப் பற்றிய பதிவு.

💐🦌அஸ்தங்க தோஷத்தைப் பற்றிய சிறப்பு பதிவு.💐🦌.

அன்பு சொந்தங்களுக்கு எனது நமஸ்காரங்கள்

🎫பொதுவாக ராகு / கேது மற்றும் சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் சூரியனுடன் நெருங்கி வரும்போதெல்லாம், அந்த கிரகம் அஸ்தங்க பெற்று, அதன் வலிமையை இழக்கிறது.

🎫ஆனால், அக்கிரகம் எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமானது. ராகு/கேது மற்றும் சந்திரன் இந்த கிரகங்களை தவிர்த்து மீதமுள்ள குரு, சுக்கிரன், சனி, செவ்வாய் மற்றும் புதன் கிரகங்கள்
ஒரு குறிப்பிட்ட டிகிரியில் அஸ்தங்கம் அடைந்தாலும் என்னுடைய பார்வையில்,
இந்த அஸ்தங்கமானது குறைந்தபட்சம் எட்டு டிகிரிக்குள் இணையும் பொழுது,
அந்த கிரகமானது தன்னுடைய வலிமை  இழக்கின்றது.

🎫இன்னும் நுணுக்கமாக பார்க்கப்போனால், சூரியனுடன் இணையும் கிரகம் ஒரே டிகிரியில் இருக்கும் பட்சத்தில் முழுவதுமாக தன் வலிமையை இழக்கும்.

🎫சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பதால், 8 டிகிரி வரை இந்த தாக்கம் அதிகமாக இருக்கும். 

🎫எட்டு டிகிரிக்கு மேல் சூரியனுடன் இணைந்து இருக்கும் கிரகத்திற்கு கண்டிப்பாக 65% பலம் கிடைத்துவிடும். 

🎫பொதுவாக சூரியன் அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் பலன்களை தான் எடுத்துக் கொண்டு. வேலையை செய்வார்.

🎫சரி, இப்போது சூரியன் உங்களுக்கு லக்ன சுபராக இருக்கும் பட்சத்தில், அஸ்தங்கம் உங்களுக்கு தோஷத்தை விட யோகத்தை தந்துவிடும்.

 🎫ஆனால் சூரியன் உங்களுக்கு 
அவயோகியாகவும், லக்ன அசுபராக வரும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு இந்த அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் தசா புக்திகளில் உங்களுக்கு சூரியன் கெடு பலன்களையே தருவார்.

👉🏻🚩🚩மேலும் அஸ்தங்கம் பெரும் கிரஹங்கள் சுபர்களின் பார்வை பெரும் பொழுது கண்டிப்பாக நல்ல பலன்களை அளிக்கும்.

👉🏻👉🏻🚩🚩குறிப்பிடத்தக்க ஒரு விதிவிலக்கு, சூரியனும் புதன் இணைவு பெரும் பொழுது அஸ்தமனத்தை அடைந்தாலும் பெரும் பாதிப்பைத் தருவதில்லை.மறுபுறத்தில் தகுதியான சந்தர்ப்பத்தில் புத்த ஆதித்ய யோகத்தை அளிக்கிறது.

👉🏻👉🏻 ஆகவே, வியாழன், சனி, செவ்வாய் மற்றும் சுக்ரன் போன்ற பிறகிரகங்களுடன் ஒப்பிடும்போது, சூரியனுக்கு நெருக்கமான புதன் அதன் வலிமையை இழக்காது.

 🎫👉🏻மேலும் இந்த கிரகங்கள் அஸ்தங்கம் அடையும் சூழ்நிலையில், பல விதிகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ளன.

👉🏻🎫எனவே இறுதி வலிமையைக் கணக்கிட, தீவிர மதிப்பீடு தேவையாகும்.





No comments:

Post a Comment