jaga flash news

Monday 28 September 2020

துணையின் குணநலனை தீர்மானிக்க....

துணையின் குணநலனை தீர்மானிக்க....  
      
 இனி வரக்கூடிய பதவுகளில் சுக்கிரன் மற்றும் ஏழாம் அதிபதி இவர்களின் நட்சத்திர சார அடிப்படையில் வரக்கூடிய துணையின் குணநலன்கள்  எப்படி இருக்கும் என்பதை அறிவோம்.
நட்சத்திரங்களின் வரிசையில் முதல் நட்சத்திரமான கேதுவின் அஸ்வினியினில் சுக்கிரன் அல்லது ஏழாம் அதிபதி இருந்தால் அவர்களுக்கு வரக்கூடிய  துணையின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
அஸ்வினியின் 4 பாதங்களுமே செவ்வாயின் மேஷ வீட்டில் இருப்பதால் வரக்கூடிய துணை ஓரளவு ஆளுமை, நிர்வாகத் திறன் உடையவராகவும் இருப்பார்  தான் என்ற எண்ணம் முன்பின் யோசிக்காமல் செயல்படும் நிலை, அவசர புத்தி, விவாதங்களில் எவரிடமும் தோற்காத தன்மை போன்ற உணர்வுகளை பெற்றிருப்பார்.

கேது என்றாலே பற்றற்ற நிலையை குறிக்கும். கேதுவின் பொதுவான இயல்பு என்னவென்றால் எந்த ஒரு விஷயத்திலும் அதிக விருப்பத்தை ஏற்படுத்தி பின்பு அதே விஷயத்தில் ச்சீ, இவ்வளவு தானா?  இந்த பழம் புளிக்கும் என்ற விரக்தியான மனநிலையினை  ஏற்படுத்தி அதே விஷயத்தினை வெறுக்கவும் வைக்கும்.

எனவே சுக்கிரன் அல்லது ஏழாம் அதிபதி கேதுவின் நட்சத்திரமான அசுவினியில் நின்றால் நீங்கள் உங்கள் துணையிடம் அதிக விருப்பமும் இன்றி வெறுப்பும் இன்றி (Neutral mind) நடுநிலையாக செயல்படுவதே புத்திசாலித்தனம். முடிந்தவரை வரக்கூடிய துணையிடம் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லதாகும். ஏனெனில் யாராக இருந்தாலும் அவர்கள் விவாதத்தில் வெற்றி கொள்ளவே விரும்புவார்கள்.
விவாதங்கள் நீளும் பட்சத்தில் அது மண வாழ்வினில் கசப்புணர்வை ஏற்படுத்திவிடும்.

நீங்கள் விரும்பிச் செல்லும் போது உங்களிடம் பற்றற்ற நிலையையும், விலகிச் செல்லும்போது உங்களுடன் நெருக்கத்தையும் காட்டக்கூடிய துணையாக அவர் இருப்பார்.
அதன் காரணமாக அவரிடம் வெறுப்பான மனநிலை நீங்கள் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. 
 மாறாக எல்லா விஷயங்களிலும் அவரை அனுசரித்துச் செல்வதும் அவர்களின் நல்ல விஷயங்களுக்காக அவர்களை பாராட்டுவதும், அவர் ஏதேனும் தவறிழைத்தால் கூட  உடனடியாக கோபத்தைக் காட்டாமல் சிறிது நேரம் கழித்து நிதானமாக புரியவைப்பதுமே மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கைக்கான  வழிகளாகும்.

பரிகாரங்களை பொறுத்தவரை விநாயகர் வழிபாடு இந்த அமைப்பிற்கு வளம் தரக்கூடியதாகும்
சுய ஜாதகத்தில் கேதுவின் நிலை இன்னும் பல விஷயங்களைக் கொண்டு பலன்கள் மாறுபடலாம்.




No comments:

Post a Comment