தென்புலத்தார் "தெய்வம்"
இறந்தவர்களின் படத்தை சுவற்றில் எத்திசையில் அல்லது எத்திசை நோக்கி மாற்றவேண்டும் என்பது குறித்து நம் குழுவில் பெரிதும் பேசப்படும் விசயமாய் இருக்கிறது.
தெற்கு திசை "யமனுக்கு" உரியதால் இறந்தோரைக் கொண்டு செல்லப்படும் திசை தெற்கு!
ஞான ஸ்வரூப தக்ஷிணாமூர்த்தி வடக்கிலிருந்து அருள்பாளிக்கும் திசையும் தெற்கு!
வாஸ்து சாஸ்திரத்தில் தென்-மேற்கு திசையை "பித்ரு பாதம்" என்பார்கள்
தெய்வப்புலவர் திருவள்ளுவரும்,
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"
எனத் 'தென்புலத்து தெய்வத்தை' குறிப்பிடுகிறார். நம் முன்னோர்கள் வாழ்ந்த தெற்கு பகுதியின் மாபெரும் கண்டம் கடற்கோளால் அழிந்ததும் இதற்கு சான்றாகும். இதிலிருந்து யாம் அறிவது, இறந்தவர்கள் படத்தை "சுவற்றின் தெற்கு பக்கத்தில், வடக்கு முகமாய்" மாட்டி வைத்தல் வேண்டும், காரணம் வடக்கின் கைலாயம் இறந்தவர்களுக்கு "முக்தி பாதம்" என்பதாலேயே. யம திசை நோக்கி சென்றவர்கள் முக்தி பாதமான வடக்கு நோக்கியிருப்பதால், நாம் அவர்களைத் தென்திசை நோக்கி வழிபடும் விதமாக இறந்தவர்கள் படத்தை வடக்கு நோக்கியே வைத்தல் வேண்டும்.
(குறிப்பு: நிலைவாசற்படி மற்றும் பூஜையறைகளில் வைத்தல் ஆகது
No comments:
Post a Comment