jaga flash news

Sunday 14 May 2023

துத்தி எனப்படும் அந்த எளிமையான மூலிகை




 

உடல் வெப்பம்..குறையும் விந்தணு உற்பத்தி..அற்புத மூலிகை இருக்க ஆண்மை குறைவு பற்றி கவலை எதற்கு
இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் விசயம் ஆண்மை குறைபாடு. விந்தணு குறைபாடு. முறையற்ற உணவு பழக்கம், நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது தூங்குவது போன்றவையும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது. இதனால் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. உடலை குளிர்ச்சியாக்கி விந்தணு உற்பத்தியை அதிகரிக்க அற்புதமான மூலிகை கீரை சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. துத்தி எனப்படும் அந்த எளிமையான மூலிகை எல்லா இடத்திலும் கிடைக்கும் துத்தியின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி அறிந்து கொள்வோம்.



துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது. துத்தி 2 செமீ வரை உயரமானது. தாவரம் முழுவதும் மென்மையான உரோமங்கள் உண்டு. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். துத்தி இலைகளின் அடிப்பாகம் மெழுகு பூசியது போன்று காணப்படும். சில நேரங்களில் 3 மடல்களாகப் பிரிந்திருக்கும்.


பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி,கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி, பலன் எல்லாம் ஒன்றே. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் களைச் செடியாக வளர்கின்றது. கடற்கரை ஓரங்கள், சமவெளிகளில் அடர்ந்து காணப்படும்.




துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு. துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி பூ காமம் பெருக்கும் ஆண்மையைப் பெருக்கும். துத்திப் பூவை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும்.



துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் வதக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 50 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

வெயில் காலத்தில் வியர்க்குருவால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் பண்ணுங்க.. ஈஸியா தடுக்கலாம் வெயில் காலத்தில் வியர்க்குருவால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் பண்ணுங்க.. ஈஸியா தடுக்கலாம்
துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும். துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.


மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வு சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது. மூல நோய் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும்.


துத்தி கீரையுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வீட்டு வைத்திய முறையாகும். மூல நோயால் அதிகம் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

துத்தி இலையை எடுத்து விளக்கெண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தி இலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.


எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும்.

பல் ஈறு நோய் குணமாக துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும். குடல் புண் மற்றும் சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை ரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும்.துத்தி இலையை இடித்துச் சாறு தயாரித்து இதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.

துத்தி பூ ரத்தப் போக்கை அடக்கும் காமம் பெருக்கும், இருமலைக்குறைக்கும், ஆண்மையைப் பெருக்கும், குளிர்ச்சி உண்டாக்கும். துத்தி விதை இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும். துத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும்.







துத்திப் பூவை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும். துத்தி விதையைப் பாலில் ஊறவைத்து கற்கண்டு சேர்த்துச் சில தினங்கள் சாப்பிட்டால், சூட்டினால் ஏற்பட்ட இருமல் தீரும்.


2 comments:

  1. Fri. 21, July, 2023 at 10. 03 am.

    இன்று நாம் பார்க்க இருப்பது....

    இறைவன் இயற்கையாக நமக்கு அளித்த மருத்துவச் செடியான *துத்தி* பற்றி பார்க்கலாம்.

    *துத்தி :

    துத்தி என்பது... காடுகளிலும், வீட்டுக் கொல்லைப் புறங்களிலும் வளரக் கூடிய ஒரு மருத்துவச் செடி.

    நம்மில் பலருக்கு இதன் மருத்துவம் தெரியாமல் இருக்கலாம்.

    துத்திச் செடி, மிகவும் மருத்துவப் பயன் தரக் கூடிய செடிகளில் ஒன்று.

    இதனின் வேறு பெயர்கள் பார்த்தீங்கன்னா... கக்கடி, கிக்கசி என்பதாகும்.

    இது மாலை நேரம் பூக்கும் செடி. இதன் காய்கள் தோடு வடிவத்தில் இருக்கும். தாவரம் முழுவதும் விண்மீன் போன்ற மென்மையான ரோமங்களுடன், உடம்பில் பட்டால் அரிக்கும் தன்மை உள்ளனவாக இருக்கும்.

    இதன் இலைகள்...இதய வடிவத் தனி இலைகள் மாற்றிலை அடுக்கத்தில் அமைந்திருக்கும்.

    இலைக் கோணத்தில், தனிமலர்கள் இளம் மஞ்சள் நிறத்தில் பூத்திருக்கும்.

    இச் செடியின், இலை, பூ, வேர், பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ பயனுள்ளவை.

    இதன் தாவரவியல் பெயர் : Abutilon Indicum.
    குடும்பப் பெயர் : Malvaceae.
    கன்னடம் : Navene-akke.
    ஹிந்தி : Kanghi
    சமஸ்கிருதம் : Kanka-tika
    தெலுங்கு : Tuttura Benda.
    ஆங்கிலம் : The Country Mallow.

    இதனின் இலைகள் மற்றும் வேரில் அஸ்பராஜின் (Asparagin) என்ற வேதிப் பொருள் அடங்கியுள்ளது..

    துத்திப்பூவின் செய்கைகள்... ரக்தஸ்தம்பனகாரி, காமவிர்த்தினி.

    ரக்தஸ்தம்பனகாரி என்பது.... Styptic.
    இரத்தநாளத்தைச் சுருங்கச் செய்து இரத்தத்தை வெளியாக்காமல் தடுக்கும் மருத்துவம் இதில் உள்ளன.

    காமவிர்த்தினி என்பது....Aphrodisiac.
    காமத்தை அதிகப்படுத்தும் மருந்து. அதாவது, தாது விருத்திக்கு ஏற்ற மருத்துவம் இத் துத்திப்பூவில் அடங்கியுள்ளன.

    இதனின் (துத்திப் பூ ) குணம் பார்த்தீங்கன்னா... ரத்த வாந்தியும்,காச ரோகமும் நீங்கும். சுக்கில விருத்தி(தாது)யும், தேகத்துக்கு குளிர்ச்சியும் உண்டாகும்.

    இப்பூவை...ஒரு பிடி எடுத்து, சுத்தம் செய்து, பசுவின் பாலில் போட்டு, அடுப்பிலேற்றி, வெந்து, குழையும் பதத்தில் கடைந்து, சிறிது சர்க்கரைக் கூட்டிச் சாப்பிடலாம்.

    அல்லது துவரம் பருப்பு வெந்து வரும் சமயம், இப்பூவைச் சுத்தம் செய்து, பருப்புடன் சேர்த்து, வேகவைத்து, கடைந்து, தாளித்து உண்ணலாம்.

    இவ்வாறு சாப்பிடுவதால்... தேகத்தின் உஷ்ணம்(வெப்பம்) அடங்கும். தாது கட்டும். அதாவது சுக்கிலம் பெருகும். இரத்த காசம் குணப்படும். ஆண்மைக் குறைவு உடையோர் இவ்வாறு சாப்பிடலாம்.

    இதனின் இலையை ஆமணுக்கு நெய்யால் வதக்கிக் கட்ட, மூலரோகமும், கட்டி விரண முளைகளும், கிருமி விரணமும் தீரும்.

    இவ் இலையின் செய்கை...
    அந்தர்ஸ்நிக்தகாரி.. Dumulcent.

    அதாவது..தாதுக்களின் எரிச்சலைத் தணித்து, அவைகளைத் துவளச் செய்யும் மருத்துவம் இதில் அடங்கியுள்ளன.

    இதன் இலையை சிற்றாமணக்கு எண்ணெய் சிறிது விட்டு, வதக்கி மூல உபத்திரவம் உள்ளவர்களுக்கு ஆசனத்தில் வைத்துக் கட்ட, 2−3 வேளையில் கடுப்பு நீங்கும்.

    உஷ்ணத்தினால் வந்த கட்டிகளுக்கு, அரைத்து வைத்துக் கட்ட உடைத்துக் கொள்ளும்.

    இந்தக் கீரையை உடைத்த பச்சைப் பயிறு (பாசிப் பருப்பு (சிறு பருப்பு) முழுப்பயிறு அல்ல) அல்லது துவரம் பருப்பில் வேகவேத்து கடைந்து அன்னத்துடன் கூட்டி உண்ண,மூலாதாரத்திலுள்ள வாயுவைக் கண்டிக்கும். மலத்தை இளகலாகப் போக்கும்.

    இதன் சமூலத்தை ஜலம் விட்டு சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, 3−வேளை கொடுத்துவர, தினவு, சொறி, சிரங்கு முதலியவைகள் குணமாகும். மட்டுமின்றி, குடலில் உண்டான புண்,நீர்ச்சுறுக்கு, தொண்டைக் கம்மல், காமாலை, மருந்துகளின் வீறு, குண்டிக் காயிலுள்ள வலி இவை நீங்கும்.

    முறிந்த எலும்பை ஒருங்கு சேர்த்து இதன் இலையை அரைத்து, மேலே கனமாகப் பூசி, சீலை சுற்றி, அசையாமல் இருக்கும் பொருட்டு மூங்கிற்பத்தை வைத்துக் கட்ட எலும்பின் முறிவு கூடும்..அதாவது எலும்பு ஒன்று சேரும்.

    இதன் இலையைக் காய வைத்து, சிறுநீர் விட்டு அரைத்துக் குழந்தைகளுக்கு உண்டாகும், கபால கரப்பானுக்கு அதாவது மண்டைக் கரப்பானுக்குப் போடக் குணமாகும்.

    இந்தத் துத்தியில் பல வகைகள் உண்டு. அவை..

    *கருந்துத்தி (Abutilon Indicum - Black variety).*
    இதன் உபயோகம்... நீர் எரிச்சல், முளைமூலம், புண் கிருமிக் கூட்டம் இவைகள் தீரும்.

    *சிறு துத்தி.* (Habiscus Obtusifolia).*

    * ஓங்கு மலக்கட்டு மோயாத வன்கரப்பன்
    வீங்கும் கடிவிஷமும் விட்டுப்போம்− பூங்குழலே
    மீறுஞ் சிறுநீரின் வெப்பந் தணிந்து போம்
    கூறுஞ் சிறுதுத்திக்கு.

    *இதன் பொருள் : மலபந்தம், கரப்பான், சிறு பூச்சிக் கடி, நீர் எரிச்சல் முதலியன தீரும்.


    *

    ReplyDelete
  2. *நிலத்துத்தி. (Sida Cordifolia).*
    நிலத்துத்திப் பூண்டானது, ஆரம்ப மூல ரோகத்தையும், வித்திரிதிக் கட்டிகளையும் போக்கும். கருவங்கத் தைப் பஸ்பம் செய்யும்.

    அடுத்து... துத்தியின் விதை... உற்சாககாரி.

    இந்த விதையில் சிறிது எடுத்து, கரி நெருப்பில்(அனலில்) போட்டு,அதினின்று கிளம்பும் புகையை குழந்தைகளின் ஆசனத்தில் தாக்குப்படி செய்யக் கிருமிகள் வெளிப்பட்டு, ஊறலும் அடங்கும்.

    இதன் விதையை முறைப்படிக் கியாழ மிட்டு, வடிகட்டிச், சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுக்க, வெள்ளை, வெட்டை, மூலம், தந்திமேகம் முதலியவைகள் நீங்கும்.

    *குறிப்பு : இதன் கியாழத்தையாவது, அல்லது சூரணத்தையாவது அளவுக்கு மிஞ்சிக் கொடுத்தால், மலத்தை இளகலாகப் போகச் செய்யும்.*

    மூலத்துக்கும், ஆண்மைக் குறைவு தீரவுக்கும் அருமையான மருந்துச் செடி, இத் துத்தி.

    ஆங்கில மருந்து மாத்திரைகள், உடனடி நிவாரணம் மட்டுமே கிடைக்கும்.

    *நிரந்தர நிவாரணம் என்பது இறைவன் கொடுத்த மருத்துவச் செடிகளில் மட்டுமே பெறலாம் என்பதனை புரிந்து கடை பிடியுங்கள்.*

    வாழ்க நலமுடன்.Jansikannan60@gmail.com

    ReplyDelete